அக்டோபர் ஊழியக் கூட்டங்கள்
அக்டோபர் 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். இந்த நம் ராஜ்ய ஊழிய இதழில் இணைக்கப்பட்டுள்ள “1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை”யின் பிரதி ஒன்றை அனைவரும் வைத்திருக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். 1996-ம் ஆண்டின்போது பார்வையிட, எளிதில் எடுத்துப்பார்க்கக்கூடிய ஓர் இடத்தில் அது வைக்கப்பட வேண்டும்.
15 நிமி: “எப்போதும் யெகோவாவைத் துதியுங்கள்.” கேள்விகளும் பதில்களும். இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள மற்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ள வேதவசனங்களின் பொருத்தத்தை வலியுறுத்திக் கூறுங்கள்.
20 நிமி: “எல்லா சமயத்திலும் சந்தாக்களை அளியுங்கள்.” முக்கிய குறிப்புகளை கலந்தாலோசித்து, பின்பு சந்தாக்களை அளிப்பதில் பயன்படுத்தக்கூடிய தற்போதைய பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகளை மறுபார்வை செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று பிரசங்கங்களை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். சந்தா ஏற்றுக்கொள்ளப்படாத சமயத்தில் பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளிப்பதற்கு நிச்சயமாயிருங்கள்.
பாட்டு 153, முடிவு ஜெபம்.
அக்டோபர் 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: சபையின் தேவைகள். அல்லது ஜூலை 15, 1995, காவற்கோபுரம், பக்கங்கள் 25-7, “சபைநீக்கம்செய்தல்—ஓர் அன்பான ஏற்பாடா?” என்பதன்பேரில் மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு.
20 நிமி: “கவனச்சிதறல்களைத் தவிர்த்து, நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்கிறோமா?” கேள்விகளும் பதில்களும். நேரம் அனுமதிக்கிறபடி, ஆகஸ்ட் 1, 1992, காவற்கோபுரம், பக்கங்கள் 20-2-ஐ சார்ந்த கூடுதலான குறிப்புகளைச் சொல்லுங்கள்.
பாட்டு 128, முடிவு ஜெபம்.
அக்டோபர் 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். குட் நியூஸ் ஃபார் ஆல் நேஷன்ஸ் என்ற சிறுபுத்தகத்தினிடமாக கவனத்தைத் திருப்புங்கள்; அது 59 மொழிகளில் பிரசங்கத்தை அளிக்கிறது. நமக்குத் தெரியாத ஒரு மொழியில் பேசுகிற ஒருவரை சந்திக்கும்போது, இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “இந்தியாவில் நடைபெற்ற ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பு.” செயலாளரால் கொடுக்கப்படும் பேச்சு. ஆவிக்குரிய நன்மைகளை வலியுறுத்திக் கூறி, அடுத்த வட்டார மாநாட்டின்போது விண்ணப்பிப்பதற்கு உங்கள் சபையில் இருக்கும் தகுதியுள்ள சகோதரர்கள் எவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “நோக்கத்தோடுகூடிய மறுசந்திப்புகள்.” மறுசந்திப்புகள் செய்வதில் நம்முடைய இலக்குகளை கலந்தாலோசியுங்கள். திறமையுள்ள பிரஸ்தாபிகள் இரண்டு வித்தியாசமான பிரசங்கங்களை நடித்துக்காட்டும்படி ஏற்பாடு செய்யுங்கள். முதல் சந்திப்பில் சந்தா ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், மறுசந்திப்பில் எவ்வாறு ஒரு சந்தாவை அளிப்பது என்பதை காண்பியுங்கள்.
பாட்டு 130, முடிவு ஜெபம்.
அக்டோபர் 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “நமக்கு சபை தேவை.” கேள்விகளும் பதில்களும்.
20 நிமி: அமைப்பினிடமாக அக்கறையைத் திருப்புங்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி, இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளுடன் ஊழியக் கண்காணி கலந்தாலோசிப்பை செய்கிறார். எவ்வாறு அமைப்பு இயங்குகிறது, எவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன, எவ்வாறு அவர்கள் உட்பட்டவர்களாக ஆகமுடியும் என்பதை அக்கறை காண்பிப்பவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்வது ஏன் பிரயோஜனமுள்ளது என்பதை விளக்கிக் கூறுங்கள். பக்கங்கள் 14 மற்றும் 15-ல், “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படுவதற்காகக் கூட்டங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். ஆஜராவதற்கான அவசியத்தை அக்கறையுள்ள நபர் மதித்துணரும்படி உதவிசெய்வதற்கு, மறுசந்திப்பில் அல்லது ஒரு பைபிள் படிப்பில் எவ்வாறு இந்த விஷயத்தை உட்படுத்தலாம் என்பதை ஒரு தொகுதியினர் சுருக்கமாக நடித்துக்காட்டுகின்றனர்.
பாட்டு 126, முடிவு ஜெபம்.
அக்டோபர் 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பர் மாதத்தில் உலகப்பிரகாரமான விடுமுறை நாட்கள் வருவதால், துணைப் பயனியர்களாக சேருவதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: அறிமுகப்படுத்தப்பட்டவரை சந்திப்பதை முயற்சிசெய்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு பேச்சு. பிரஸ்தாபிகள் சிலர் இந்த முறையில் புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முடிந்திருக்கிறது: அக்கறையுள்ள நபர் ஒருவருக்கு சிறிது காலம் படிப்பு நடத்திய பின்பு, பைபிள் படிப்பில் அக்கறைகாட்டுகிற அவருடைய நண்பர்கள், உறவினர்கள், அல்லது பழக்கமானவர்கள் ஆகியோரில் எவரையாவது அவருக்குத் தெரியுமா என்பதாக கேட்கிறார்கள். பெரும்பாலும் அநேக பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தத் தனிப்பட்ட நபர்களை சந்திக்கும்போது நீங்கள் அவருடைய பெயரை பயன்படுத்தலாமா என்று கேளுங்கள். அந்தச் சந்திப்பை செய்கையில், “இன்னார் பைபிள் படிப்பதை அதிகமதிகமாக அனுபவித்து மகிழ்ந்திருக்கிறார், நீங்களும்கூட எங்களுடைய இலவச பைபிள் படிப்புத் திட்டத்தில் பயனடைய விரும்புவீர்கள் என்பதாக அவர் நினைத்தார்,” என்று நீங்கள் சொல்லலாம். பலன்தருகிற பைபிள் படிப்புகளாக முன்னேறிவரும் மறுசந்திப்புகளுக்கான பயனளிக்கும் ஒரு பட்டியலை இது அளிக்கக்கூடும். இந்த முறையில் அக்கறைகாண்பிக்கும் ஆட்களைக் கண்டுபிடித்திருக்கிற அல்லது புதிய படிப்புகளை ஆரம்பித்திருக்கிற பிரஸ்தாபிகளிடமிருந்து வருகிற ஓரிரண்டு அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: நவம்பர் மாதத்தில் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிளை, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்துடன் அளித்தல். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 276-80-ல், புதிய உலக மொழிபெயர்ப்பு என்ற தலைப்பிலுள்ள முக்கிய அம்சங்களை மறுபார்வை செய்யுங்கள். “சொற்பொருள் விளக்கம்” என்ற பகுதியை வாசித்து, அது ஏன் தயாரிக்கப்பட்டது என்பதை விளக்கிக் கூறுங்கள். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை அளிப்பதைப் பற்றி நம்பிக்கையான மனநிலை உடையவர்களாக இருக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். ஆனால் அதோடு உங்களுடைய மொழியில் கிடைக்கும் 192-பக்க பழைய பதிப்புகளை அல்லது நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அளிப்புகளில் ஒன்றை கொண்டுசெல்லும்படி உற்சாகப்படுத்துங்கள். பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற புத்தகம், பக்கம் 184-ல் உள்ள 14-ம் அதிகாரத்திற்கான அறிமுகக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஒரு சுருக்கமான பிரசங்கத்தை திறமையான பிரஸ்தாபி ஒருவர் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். இரண்டாவது நடிப்பு, உள்ளூரில் பயன்படுத்தப்படுகிற மாற்று வகையான அளிப்பைப் பற்றிய பிரசங்கத்தை முக்கியப்படுத்திக் காண்பிக்க வேண்டும். இந்த வார ஊழியத்தில் பயன்படுத்துவதற்கான பிரதிகளை எடுத்துச்செல்லும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 138, முடிவு ஜெபம்.