உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/96 பக். 2
  • டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • துணை தலைப்புகள்
  • டிசம்பர் 2-ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 9-ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 16-ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 23-ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 30-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 12/96 பக். 2

டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்

டிசம்பர் 2-ல் துவங்கும் வாரம்

பாட்டு 134

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பிரசுர அளிப்புகளைக் குறிப்பிடுங்கள்.

15 நிமி: “நம் செய்திக்கு செவிகொடுப்போர் யார்?” கேள்விகளும் பதில்களும். நம்முடைய செய்தி ஏன் மனதைக் கவருவதாய் இருக்கிறது என்பதன்பேரில், மார்ச் 22, 1987, ஆங்கில விழித்தெழு!, பக்கம் 5-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

20 நிமி: “நம்பிக்கையையும் வழிநடத்துதலையும் பைபிள் அளிக்கிறது.” (பாராக்கள் 1-6) இந்தப் பகுதியை பாரா 1-2-ஐப் பயன்படுத்தி அறிமுகப்படுத்துங்கள். (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 58-60-ல் உள்ளவற்றை சேர்த்துக்கொண்டு, “பைபிளைக் கருத்துடன் கவனிக்க வேண்டியதற்குக் காரணங்கள்” நான்கை சுருக்கமாக குறிப்பிடுங்கள்.) பாராக்கள் 3-6-ல் ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களைத் திறமைவாய்ந்த பிரஸ்தாபிகள் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். பின்வரும் காரியங்களின் பேரில் சபையார் குறிப்பு சொல்லும்படி கேளுங்கள்: (1) கேட்கப்பட்ட கேள்விகள் அக்கறையைத் தூண்டுவதற்கு எவ்வாறு உதவின, (2) பயன்படுத்தப்பட்ட வேதவசனங்கள் கலந்தாலோசிக்கப்படுகிற பொருளுக்கு எவ்வாறு பொருந்தின, (3) எவ்வாறு மறுசந்திப்பு தர்க்கரீதியில் ஆரம்ப கலந்தாலோசிப்பைத் தொடர்ந்திருந்தது, மற்றும் (4) பைபிள் படிப்பு எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது.

பாட்டு 75, முடிவு ஜெபம்.

டிசம்பர் 9-ல் துவங்கும் வாரம்

பாட்டு 100

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

15 நிமி: முதியவர்கள் ஊழியத்தில் பங்குகொள்ள உதவுதல். உண்மையுள்ள அநேக முதிய பிரஸ்தாபிகள் சபையுடன் பிரசங்க வேலையில் பங்குகொள்ள ஆழ்ந்த விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய வயது மற்றும் மோசமான உடல்நிலையின் காரணமாக சரீரசம்பந்தமான வரம்புகளை உடையவர்களாய் இருக்கிறார்கள். ஊழியத் தொகுதியில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளும்படி நாம் அவர்களுக்கு கரிசனை காட்டக்கூடிய வழிகள் இருக்கின்றன: போக்குவரத்து வசதியளிக்க முன்வருதல்; ஏறுவதற்கு குறைந்த படிக்கட்டுகளே உள்ள வீடுகளில் ஊழியம் செய்வதற்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்தல்; அவர்களை மறுசந்திப்புகளுக்கு அழைத்துச்செல்ல முன்வருதல்; ஊழியத்தை தொடர்ந்து செய்ய முடியாது என்று அவர்கள் நினைக்கும்போது அவர்களை நீங்கள் வீட்டில் கொண்டுபோய் விடுவதாக சொல்லுதல். முதியவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் உதவிக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். நீங்கள் உள்ளூரில் இப்படிப்பட்ட கரிசனையை காண்பிக்கக்கூடிய மற்ற வழிகளைக் குறிப்பிடுங்கள். பிப்ரவரி 1, 1986 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 28-9-ல் காணப்படும், “முதியோர்களை நாங்கள் போற்றுகிறோம்” என்ற கட்டுரையிலுள்ள முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.

20 நிமி: “நம்பிக்கையையும் வழிநடத்துதலையும் பைபிள் அளிக்கிறது.” (பாராக்கள் 7-9) மே 1, 1993, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 3-லுள்ள, “வழிநடத்துதலுக்கான தேவை” என்பதன் பேரில் குறிப்பு சொல்லுங்கள். மேலான ஊற்றுமூலத்திலிருந்து—கடவுளிடமிருந்து—வரும் உதவியை நாடுவதன் முக்கியத்துவத்தை ஏன் நம்முடைய பிரசங்கங்கள் அழுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதை விளக்குங்கள். 7-8 பாராக்களிலுள்ள பிரசங்கங்களை பிரஸ்தாபி நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிப்பதே எப்பொழுதும் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுங்கள்.

பாட்டு 197, முடிவு ஜெபம்.

டிசம்பர் 16-ல் துவங்கும் வாரம்

பாட்டு 209

10 நிமி: சபை அறிவிப்புகள். பண்டிகைகால வாழ்த்துதல்களுக்கு எவ்வாறு சாதுரியமாய் பதிலளிப்பது என்பதன் பேரில் ஒருசில ஆலோசனைகளைக் கொடுங்கள். டிசம்பர் 25-க்கான விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.

15 நிமி: “நம்மையே மனப்பூர்வமாய் அளித்தல்.” கேள்விகளும் பதில்களும். மே 1, 1984 ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 22-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

20 நிமி: “கடவுள் வழங்கும் அதிகரிப்போடு களிகூருதல்.” மூப்பரால் கொடுக்கப்படும் உற்சாகமுள்ள பேச்சு. நகர அனுபவங்கள், அல்லது சமீப வருடாந்தர புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளபடி, பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கான அத்தாட்சி.

பாட்டு 41, முடிவு ஜெபம்.

டிசம்பர் 23-ல் துவங்கும் வாரம்

பாட்டு 93

10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வார ஊழியத்தில் பயன்படுத்தப்படும் தற்போதைய பத்திரிகைகளிலுள்ள பேச்சுக் குறிப்புகள் சிலவற்றை சுட்டிக் காட்டுங்கள். ஜனவரி 1-க்கான விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.

15 நிமி: சபையின் தேவைகள், அல்லது ஜூலை 15, 1996 காவற்கோபுரம், பக்கங்கள் 24-5-லிருந்து எடுக்கப்பட்ட “பணி ஓய்வு—தேவராஜ்ய வேலைகள் செய்வதற்கு திறக்கப்படும் ஒரு கதவா?” என்ற கட்டுரையின் பேரில் மூப்பரால் கொடுக்கப்படும் ஒரு பேச்சு.—உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 794, பாராக்கள் 2-3-ஐக் காண்க.

20 நிமி: “தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேருதல்.” பள்ளி கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. சபையில் பதிவுசெய்துள்ளவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைக் கொடுங்கள், மேலும் சேர்ந்துகொள்ளக்கூடிய அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். “1997-க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை”யில் கொடுக்கப்பட்டுள்ள மாணாக்கர் நியமிப்புகளுக்கான அறிவுரைகளை மறுபார்வையிடுங்கள்.

பாட்டு 166, முடிவு ஜெபம்.

டிசம்பர் 30-ல் துவங்கும் வாரம்

பாட்டு 223

10 நிமி: சபை அறிவிப்புகள். இந்தப் புதிய ஆண்டுக்காக உங்களுடைய சபைகள் கூட்டம் நடைபெறும் நேரங்களை மாற்றுவதாய் இருந்தால், அனைவரும் தேவையான சரிப்படுத்துதல்களை செய்வதற்கும் சபையின் புதிய நேர கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராவதற்கும் உந்துவித்து அன்பான ஊக்கமூட்டுதலைக் கொடுங்கள். அல்லது சபை புத்தகப் படிப்பு உட்பட, எல்லா கூட்டங்களுக்கும் தவறாமல் ஆஜராகும்படி பொதுவான உற்சாகமூட்டுதலைக் கொடுங்கள்.

15 நிமி: சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல். பள்ளி துணைநூல், பக்கங்கள் 80-2, பாராக்கள் 11-16-ஐப் பயன்படுத்தி, அறிமுகமில்லாதவர்களுடன் எவ்வாறு சம்பாஷணையை ஆரம்பிப்பது என்பதன் பேரில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள். மேம்பட்ட பலன்களைப் பெறுவதற்கு முன்கூட்டியே தயாரிப்பது எவ்வாறு உதவுகிறது என்பதை காண்பியுங்கள். அக்கறை காண்பித்தவர்களுடைய பதிவைக் குறித்து வைத்துக்கொள்ளும்படியும், பிற்பாடு அவர்களை யாராவது தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யும்படியும் பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.

20 நிமி: ஜனவரிக்கான பிரசுர அளிப்பை மறுபார்வையிடுங்கள். சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 192-பக்க பழைய பதிப்புகளில் எதையாவது விசேஷ விலையில் அளித்தல். அவற்றில் ஒன்றுமே சபை கையிருப்பில் இல்லையென்றால், உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தைப் பயன்படுத்துங்கள். எந்தப் புத்தகங்கள் சபை கையிருப்பில் உள்ளன என்பதை காண்பியுங்கள். உங்களுடைய பிராந்தியத்தில் பயன்படுத்துவதற்கு சிறந்ததாய் இருக்கும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்களைத் தெரிந்தெடுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல், பக்கங்கள் 9-14-ஐப் பயன்படுத்தி, ஒவ்வொரு புத்தகத்துக்கும் பொருத்தமான அறிமுகங்களைச் சுருக்கமாய் மறுபார்வையிடுங்கள். இரண்டொரு பிரசங்கங்களை நடித்துக்காண்பியுங்கள்.

பாட்டு 137, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்