மார்ச் ஊழியக் கூட்டங்கள்
மார்ச் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். பிரசுர அளிப்பையும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அக்கறை காட்டுபவர்களை மார்ச் 23-ல் நடைபெறும் நினைவு ஆசரிப்புக்கு அழைக்க ஆரம்பிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். நினைவு ஆசரிப்பு அழைப்பிதழின் ஒரு பிரதியைக் காண்பித்து, எல்லாரும் பெற்றுக்கொள்ளும்படியும் இந்த வாரத்தில் அவற்றை விநியோகிக்கும்படியும் ஊக்குவியுங்கள்.
15 நிமி:“உன் வீட்டைக் கட்டு.” கேள்வி பதில்கள். 1995 வருடாந்தரப் புத்தகம், (ஆங்கிலம்) பக்கம் 228-லிருந்து எடுக்கப்பட்ட அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி:“நிலையான எதிர்காலத்தைப் பெற குடும்பங்களுக்கு உதவுதல்.” (பாராக்கள் 1-5) பாரா 1-ன் பேரில் சுருக்கமான குறிப்புகளைக் கொடுங்கள், அதன் பின்பு அதிகாரத்தின் தலைப்புகள், வர்ணமிக்க விளக்கப்படங்கள், மறுபார்வைக்குரிய பெட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தில் எவ்வாறு அக்கறையை வளர்க்கலாம் என்பதை கலந்தாலோசியுங்கள். 2-5 பாராக்களிலுள்ள பிரசங்கங்களை திறமைவாய்ந்த பிரஸ்தாபிகள் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். முன்பு அக்கறை காண்பித்திருக்கிற குடும்பங்களுக்கு இந்தப் புத்தகத்தை அளிக்க விசேஷ முயற்சி எடுக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 71, முடிவு ஜெபம்.
மார்ச் 10-ல் தொடங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி, மார்ச் 18-23-க்காக அட்டவணையிடப்பட்டுள்ள நினைவு ஆசரிப்புக்குரிய பைபிள் வாசிப்பை பின்பற்ற நிச்சயமாயிருக்கும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள்.
20 நிமி:‘நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள்.’ கேள்வி பதில்கள். பைபிள் மாணாக்கர்கள், அக்கறையுள்ள நபர்கள், சாதகமாக பிரதிபலிக்கும் குடும்ப அங்கத்தினர்கள், சபையுடன் நன்கு கூட்டுறவுகொள்ளாத சகோதர சகோதரிகள் போன்ற எவரையும் நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகும்படி அழைப்பதற்கு அனைவரும் ஊக்கமான முயற்சியெடுக்க வேண்டும். பிரஸ்தாபி ஒருவர் அக்கறையுள்ள ஒரு நபரிடம் நினைவு ஆசரிப்பு அழைப்பிதழைக் கொடுத்து அழைப்பதை சுருக்கமாக நடித்துக்காட்டவும். ஜூலை 1, 1988, காவற்கோபுரம் (ஆங்கிலம்), பக்கம் 11, பாராக்கள் 16-17-ன் பேரில் கூடுதலான குறிப்பை சொல்லுங்கள். ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர் ஊழியம் செய்யவிருக்கும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“நிலையான எதிர்காலத்தைப் பெற குடும்பங்களுக்கு உதவுதல்.” (பாராக்கள் 6-8) வேலைசெய்யும் இடத்தில், பள்ளியில், பூங்காவில், அல்லது பொதுப் போக்குவரத்தில், உறவினர்களைச் சந்திக்கையில் சந்தர்ப்ப சாட்சிகொடுக்கையில் எவ்வாறு குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை அளிப்பது என்பதை காண்பித்து ஆலோசனைகள் சிலவற்றை கொடுங்கள். 6, 7 பாராக்களிலுள்ள பிரசங்கங்களை திறமைவாய்ந்த பிரஸ்தாபி ஒருவர் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். மறுசந்திப்பில் செய்யப்படும் கலந்தாலோசிப்பானது, பைபிளைப் படிப்பது குடும்ப உறவுகளை எவ்வாறு பலப்படுத்தக்கூடும் என்பதை அந்த நபர் மதித்துணரும்படி செய்யவேண்டும். கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டில் படிப்புகள் நடத்தப்பட வேண்டும், இதைப் பின்பு அறிவு புத்தகத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்க வேண்டும், அல்லது படிப்பை நேரடியாக அறிவு புத்தகத்திலிருந்தேகூட ஆரம்பிக்கலாம்.
பாட்டு 72, முடிவு ஜெபம்.
மார்ச் 17-ல் தொடங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” பகுதியை மறுபார்வை செய்து, நினைவு ஆசரிப்புக்கான சபை ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள். பைபிள் மாணாக்கர்களும் அக்கறை காட்டுபவர்களும் ஆஜராவதற்கு உதவ அனைவரும் இறுதியான திட்டங்களைப் போடவேண்டும்.
15 நிமி:சபையின் தேவைகள். அல்லது செப்டம்பர் 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 22-4-ல் இருந்து எடுக்கப்பட்ட, “நீங்கள் தவறை ஒப்புக்கொண்டு உண்மையில் வருத்தந்தெரிவிக்க வேண்டுமா?” என்ற கட்டுரையின் பேரில் மூப்பரால் கொடுக்கப்படும் ஒரு பேச்சு.
15 நிமி:1997 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகத்தை (ஆங்கிலம்) நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். 3-9 பக்கங்களில் சிந்திக்கப்பட்டுள்ள முக்கிய குறிப்புகளை தகப்பன் தன் குடும்பத்தாருடன் மறுபார்வை செய்கிறார். உலகமுழுவதும் ஏற்பட்டுள்ள தேவராஜ்ய முன்னேற்றத்தைக் கண்டு ஏன் களிகூருகிறோம் என்பதை காண்பிக்கிறார். நடப்பு ஆண்டில், ஒவ்வொரு நாளும் உணவு நேரத்தின்போது வருடாந்தரப் புத்தகத்திலுள்ளவற்றை படிப்படியாக வாசிப்பதற்கும் தினவசனத்தைக் கலந்தாலோசிப்பதற்கும் எவ்வாறு அவர்கள் ஒருசில நிமிடங்களை ஒதுக்கலாம் என்பதை அவர் விளக்குகிறார்.
பாட்டு 75, முடிவு ஜெபம்.
மார்ச் 24-ல் தொடங்கும் வாரம்
9 நிமி:சபை அறிவிப்புகள். ஏப்ரலில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு இன்னும் காலமிருக்கிறது என்பதை விளக்கி, அனைவரும் விண்ணப்பிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். இந்த மாதத்தில் ஊழியக் கூட்டத்திற்காக சபையில் செய்யப்படுகிற கூடுதலான ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.
24 நிமி:“தைரியத்தை ஒன்றுதிரட்டி மறுசந்திப்புகள் செய்யுங்கள்.” (பாராக்கள் 1-20) கேள்வி பதில்கள். 16-ம் பாராவை சுருக்கமாக நடித்துக்காட்டுங்கள்.
12 நிமி:ஒரு புதிய பிரஸ்தாபி ஊழியத்தைத் தொடங்கும்படி உதவிசெய்தல். ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் உள்ள 19-ம் பாராவை மறுபார்வை செய்யுங்கள். முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியாக இருப்பதற்கு இப்பொழுதுதான் மூப்பர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பைபிள் மாணாக்கர் ஒருவரை, ஒரு திறமைவாய்ந்த பிரஸ்தாபி எவ்வாறு தயார்படுத்துகிறார் என்பதை நடித்துக்காட்டுங்கள். நம் ஊழியம் புத்தகம், பக்கம் 111, பாரா 2-ஐ அவர்கள் ஒன்றுசேர்ந்து மறுபார்வை செய்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்கையில் ஒருவேளை எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்பட வேண்டியதாயிருக்கும் என்பதையும் பலர் செவிகொடுக்கவில்லை என்றால் சோர்வடைய வேண்டியதில்லை என்பதையும் அனுபவமிக்க பிரஸ்தாபி சுட்டிக் காட்டுகிறார். செவிகொடுத்து கேட்கிற அக்கறையுள்ள ஒரு நபரை நாம் கண்டுபிடிக்கையில் வருகிற சந்தோஷத்தை சித்தரிக்கும் ஊக்கமூட்டுகிற ஒரு அனுபவத்தைப் பிரஸ்தாபி கூறுகிறார். ஒரு சுருக்கமான, எளிய பத்திரிகை அளிப்பை அவர்கள் ஒன்றுசேர்ந்து தயாரித்து, பின்பு அதை பழகிப்பார்க்கிறார்கள். உற்சாகமூட்டும் பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டு, இந்த வாரத்தில் ஒன்றுசேர்ந்து வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்குத் திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பாட்டு 89, முடிவு ஜெபம்.
மார்ச் 31-ல் தொடங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். ஏப்ரல் 6-ஆம் தேதி கொடுக்கப்படவிருக்கும் விசேஷித்த பொதுப் பேச்சுக்கு ஆஜராகும்படி அக்கறை காட்டும் எல்லாரையும் கூப்பிடுங்கள். மார்ச் மாதத்திற்கான ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். ஏப்ரலில் துணைப் பயனியர் ஊழியம் செய்கிற அனைவருடைய பெயர்களையும் அறிவியுங்கள். கேள்விப் பெட்டியை மறுபார்வை செய்யுங்கள்.
20 நிமி:“தைரியத்தை ஒன்றுதிரட்டி மறுசந்திப்புகள் செய்யுங்கள்.” (பாராக்கள் 21-35) கேள்வி பதில்கள். பக்கம் 3-ல் உள்ள பெட்டியை மறுபார்வை செய்யுங்கள். தங்களுடைய வெளி ஊழியத்தை அறிக்கை செய்கையில், அந்த மாதத்தில் அவர்கள் செய்த எல்லா மறுசந்திப்புகளையும் கணக்கில்கொள்ளும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி:ஏப்ரல் மாதத்திற்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாக்களை அளியுங்கள். அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8, பாராக்கள் 3, 4, மற்றும் 8-ல் காணப்படுகிற பத்திரிகை அளிப்புகளை எவ்வாறு தயாரிப்பது என்பதன் பேரிலான ஆலோசனைகளைச் சுருக்கமாக விவரியுங்கள். இரண்டு பிரஸ்தாபிகள் சுருக்கமான ஓரிரண்டு பிரசங்கங்களை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். ஒரு சந்தா ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இரண்டு அல்லது மூன்று பத்திரிகைகளின் தனிப்பிரதிகள் அளிக்கப்பட வேண்டும். சந்தா எடுக்காத ஆனால் பத்திரிகைகளை ஏற்றுக்கொண்டவர்களைப் பற்றிய ஒரு பதிவை பிரஸ்தாபிகள் வைத்துக்கொண்டு, தங்களுடைய பத்திரிகை மார்க்கத்தில் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பாட்டு 92, முடிவு ஜெபம்.