உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/98 பக். 2
  • மார்ச் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • துணை தலைப்புகள்
  • மார்ச் 2-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 9-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 16-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 23-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 30-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 3/98 பக். 2

மார்ச் ஊழியக் கூட்டங்கள்

மார்ச் 2-ல் துவங்கும் வாரம்

பாட்டு 3

8 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.

15 நிமி: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” மூப்பர் தரும் பேச்சு. நினைவு ஆசரிப்புக்கு வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நம் ஊழியம் புத்தகத்தில், பக்கங்கள் 80-1-லிருந்து குறிப்புகளைச் சுருக்கமாக கூறவும்.

22 நிமி: “மக்கள் மனங்களில் நித்திய ஜீவ நம்பிக்கையை விதையுங்கள்.” கட்டுரையை சபையாரோடு கலந்துரையாடவும். சம்பாஷணையைத் தொடருவதற்கு எவ்வாறு கேள்விகளை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தலாம் என்பதை சுருக்கமாக விளக்குங்கள். பேசும்போது பயன்படுத்தக்கூடிய வழிநடத்தும் கேள்விகளுக்கும், நோக்குநிலை கேள்விகளுக்கும் ஒருசில உதாரணங்களை கொடுங்கள். (பள்ளி துணைநூல், பக்கங்கள் 51-2, பாராக்கள் 10-12-ஐக் காண்க.) திறம்பட்ட பிரஸ்தாபியை, முதலில் குறிப்பிட்டுள்ள அளிப்புமுறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஒருவரை சந்தித்து பேசிய பிறகு, அதே நபரை மறுசந்திப்பு செய்து, ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதாக நடித்துக்காட்ட சொல்லுங்கள்.

பாட்டு 88, முடிவு ஜெபம்.

மார்ச் 9-ல் துவங்கும் வாரம்

பாட்டு 60

8 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

15நிமி: 1998 வருடாந்தர புத்தகத்திலிருந்து (ஆங்கிலம்) முழுமையாக பயனடையுங்கள். கடந்த வருடம் உலகெங்கும் நடைபெற்ற தேவராஜ்ய சாதனைகளை விவரிக்கும் பக்கங்கள் 3-6-யும், 31-யும் அப்பா குடும்பத்தோடு கலந்தாலோசிக்கிறார். சாப்பாட்டு நேரங்களில் குடும்பமாக அமர்ந்து தினவாக்கியத்தையும், வருடாந்தர புத்தகத்திலிருந்து சிறு பகுதியையும் வாசித்து, கலந்தாலோசிக்கும்போதும் அந்தக் குடும்பம் அடையும் பயன்களையும், இவ்வாறு வருடம் முழுவதும் செய்ய அந்தக் குடும்பம் தீர்மானம் செய்யும்போது கிடைக்கும் பயன்களை சிந்திக்கவும்.

22நிமி: “நாம் மறுபடியும் செய்யலாமா?” (பாராக்கள் 1-11) கேள்வி பதில்கள். 1998 வருடாந்தர புத்தகம் அறிக்கை செய்துள்ளபடி, கடந்த வருடம் துணைப் பயனியர் சேவையில் ஈடுபடுகையில் ஏற்பட்ட சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறுங்கள். அந்தச் சமயத்தில் உங்கள் சபையில் எத்தனை பேர் துணைப் பயனியர் செய்தனர் என்பதை குறிப்பிடுங்கள். பயனியர் சேவையால் தனிப்பட்ட முறையில் உடனடியாக கிடைக்கும் நன்மைகளைப் பற்றி கலந்து பேசுங்கள்; இப்படி கூடுதலான முயற்சி எடுக்கும்போது சபையின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் கூறுங்கள். நிறையப் பேர் பயனியர் செய்ய உதவும் வகையில் ஏப்ரல், மே மாதங்களில் சபையில் செய்யப்பட்டுள்ள ஊழிய ஏற்பாடுகளை குறிப்பிடுங்கள். கூட்டம் முடிந்ததும் பிரஸ்தாபிகள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பாட்டு 195, முடிவு ஜெபம்.

மார்ச் 16-ல் துவங்கும் வாரம்

பாட்டு 43

8நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் 29-ம் தேதி கொடுக்கப்படவிருக்கும் விசேஷ பொதுப் பேச்சுக்கு ஆர்வம் காட்டும் எல்லாரையும் கூப்பிடுங்கள். பேச்சின் தலைப்பு: “நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்.”

15நிமி: சபை தேவைகள்.

22 நிமி:“நாம் மறுபடியும் செய்யலாமா?” (பாராக்கள் 12-19) கேள்வி பதில்கள். நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 113-14 குறிப்பிட்டுள்ள தகுதிகளை மறுபடியும் கலந்தாராயவும். துணைப் பயனியர் சேவை எப்படி ஒருவரை ஒழுங்கான பயனியர் சேவைக்கு தயார் செய்கிறது என்பதை விளக்குங்கள். கடந்த வருடம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், துணைப் பயனியர் செய்த ஒருசிலரை கூப்பிட்டு, அவர்கள் 60 மணிநேரத்தை பூர்த்திசெய்ய தங்கள் அட்டவணையை எவ்வாறு அமைத்துக்கொண்டனர் என்பதை கேளுங்கள். உட்சேர்க்கையின் கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்ட மாதிரி அட்டவணைகளில் எது அவர்களுக்கு நன்றாக பொருந்தியது என்று சொல்ல சொல்லுங்கள். நேரம் இருந்தால், 1987 வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்), பக்கங்கள் 48-9-லும், 245-6-லும் கொடுக்கப்பட்டுள்ள அனுபவங்களை கூறவும். கூட்டம் முடிந்ததும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும்படி பிரஸ்தாபிகளுக்கு ஊக்கம் தாருங்கள்.

பாட்டு 224, முடிவு ஜெபம்.

மார்ச் 23-ல் துவங்கும் வாரம்

பாட்டு 94

10 நிமி: சபை அறிவிப்புகள். ஆர்வம் உள்ளவர்களை ஏப்ரல் 11-ம் தேதி வரவிருக்கும் நினைவு ஆசரிப்புக்கு அழைக்க ஆரம்பிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். அழைப்பிதழின் ஒரு பிரதியை காண்பியுங்கள். பிரதிகளை பெற்றுக்கொண்டு இந்த வாரத்திலிருந்தே விநியோகிக்கும்படி எல்லாரையும் துரிதப்படுத்துங்கள். ஏப்ரலில் துணைப் பயனியர் செய்யப்போகிறவர்களின் பெயர்களை அறிவியுங்கள். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் சில நாட்கள் இருக்கின்றன என்று விளக்குங்கள். ஏப்ரலில் செய்யவிருக்கும் ஊழிய ஏற்பாடுகளைப் பற்றிய முழு விவரத்தையும் தெரியப்படுத்துங்கள்.

20 நிமி: புதியவர்களை வெளி ஊழியத்திற்காக தயார் செய்யுங்கள். பேச்சும், சபையாரோடு கலந்துரையாடலும். அறிவு புத்தகத்திலிருந்து படிப்பு நடத்துபவர்கள், வெளி ஊழியத்தில் பங்கேற்கும்படி தங்கள் மாணாக்கர்களை தயார்செய்வதைப் பற்றி யோசித்துப்பார்க்க வேண்டும். அறிவு புத்தகத்தில், பக்கங்கள் 105-6, 14-வது பாராவிலும், பக்கம் 179, 20-வது பாராவிலும் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சுட்டிக்காட்டுங்கள். புதியவர்கள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆகும் வழிகளை ஆகஸ்ட் 1, 1989, காவற்கோபுரம், பக்கங்கள் 19-20, பாராக்கள் 7-10-லிருந்து மறுபார்வை செய்யுங்கள். முழுக்காட்டப்படாத புதிய பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தை ஆரம்பிக்க உதவும் வகையில், ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கை, பாரா 19-ல் வெளிவந்த ஆலோசனைகளை எடுத்துரையுங்கள்.

15 நிமி: கேள்விப் பெட்டி. கேள்வி பதில்கள். நம் ஊழியம் புத்தகத்தில், பக்கம் 131, பாராக்கள் 1 மற்றும் 2-ல் கொடுக்கப்பட்டிருக்கும் விஷயத்தை மூப்பர் மறுபார்வை செய்கிறார்.

பாட்டு 47, முடிவு ஜெபம்.

மார்ச் 30-ல் துவங்கும் வாரம்

பாட்டு 29

12 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாத ஊழிய அறிக்கையை போடும்படி எல்லாருக்கும் ஞாபகப்படுத்துங்கள். புதிய பத்திரிகைகளை காண்பித்து, அவற்றை கொடுக்கும்போது, எந்தக் கட்டுரைகளை சிறப்பித்துக் காட்டுவார்கள் என்று சபையாரைப் பார்த்து கேளுங்கள். அவற்றிலிருந்து பேசுவதற்கு வசதியான ஒருசில குறிப்பான விஷயங்களை சொல்லுங்கள். “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” பகுதியை மறுபார்வை செய்து, நினைவு ஆசரிப்புக்காக சபை செய்திருக்கும் ஏற்பாடுகளை குறிப்பிடுங்கள். பைபிள் மாணாக்கர்களும், ஆர்வம் காட்டும் மற்றவர்களும் வருவதற்கு உதவும்வகையில் திட்டவட்டமான ஏற்பாடுகளை எல்லாரும் செய்ய வேண்டும். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறுபுத்தகத்தில் ஏப்ரல் 6-11 வரை, நினைவு ஆசரிப்பு சமயத்தில் படிக்கும் பைபிள் பகுதிகள் அட்டவணையிடப்பட்டுள்ளன. அவற்றை கண்டிப்பாக பின்பற்றும்படி எல்லாருக்கும் ஞாபகப்படுத்துங்கள்.

13 நிமி: “பிள்ளைகளே—நீங்கள்தான் எங்கள் வசந்தம்!” கேள்வி பதில்கள். ஆகஸ்ட் 1, 1987, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 25-ல் உள்ள அனுபவத்தை சொல்லுங்கள்.

20 நிமி: ஆவிக்குரிய சோர்வை எதிர்த்து போராடுவதற்கு சில வழிகள். நவம்பர் 1, 1986, காவற்கோபுரம், பக்கம் 26-ல் உள்ள பெட்டியை இரண்டு மூப்பர்கள் கலந்துரையாடுகிறார்கள். “சோர்வின் அறிகுறிகள்” ஒவ்வொன்றிற்கும் எதிரே “சகித்து நிலைத்திருக்க உதவிகள்” என்று கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து எவ்வாறு ஒருவர் பயனடையலாம் என்பதை வேதவசனங்களோடு விளக்கவும். இரண்டு பிரஸ்தாபிகளை பேட்டிகாணுங்கள். இத்தகைய குறிப்புகளை அவர்கள் பொருத்தியதால் எப்படி ஆவிக்குரிய பலத்தை காத்துக்கொள்ள முடிந்தது என்று கூறும்படி சொல்லுங்கள்.

பாட்டு 140, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்