ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
டிசம்பர் 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி டிசம்பர் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் டிசம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நடிப்புக்குப் பிறகும், பிரசங்கத்தில் பைபிள் வசனத்தை எவ்வளவு எளிதாக வீட்டுக்காரரிடம் காண்பிக்க முடிகிறது என்பதைக் குறித்துச் சொல்லுங்கள்.
15 நிமி: “நடைமுறைக்கு உதவும் ஒரு பள்ளி.” பள்ளிக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. நம் ராஜ்ய ஊழியம், அக்டோபர் 2005 இதழின் உட்சேர்க்கையிலுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “ஜீவனுக்கு வழிநடத்துகிற கல்வி.”a கடவுள் புகட்டும் கல்வியால் தாங்கள் எவ்வாறு பலன் அடைந்திருக்கின்றனர் என்பது பற்றி கூறுமாறு ஓரிருவரிடம் முன்னதாகவே சொல்லி வையுங்கள்.
பாட்டு 101, முடிவு ஜெபம்.
டிசம்பர் 19-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பர் 25, ஜனவரி 1 தேதிகளில், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேஷ வெளி ஊழியத்தைப் பற்றி குறிப்பிடுங்கள். ஜனவரி 2006 விழித்தெழு! பத்திரிகையை அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு எடுத்து வரும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: “தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—ஆட்களுக்கு ஏற்றவாறு பிரசங்கிப்பதன் மூலம்.”b ஒரு பிரஸ்தாபி, வீட்டுக்காரரின் பதிலுக்கு ஏற்றவாறு தன் பிரசங்கத்தை மாற்றியமைப்பதுபோல் காட்டும் ஒரு சுருக்கமான நடிப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
25 நிமி: “உங்கள் பிள்ளைகள் முதிர்ச்சியான தீர்மானம் எடுப்பார்களா?”c மூப்பர் கொடுக்கும் பேச்சு. ஒவ்வொரு பாராவையும் சத்தமாக வாசிக்குமாறு நன்கு வாசிக்கும் ஒரு சகோதரரிடம் சொல்லி வையுங்கள். வசன எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் பைபிளிலிருந்து கலந்தாலோசியுங்கள். 2-வது பாராவைக் கலந்தாலோசித்த பிறகு, காவற்கோபுரம், மார்ச் 15, 1992 இதழில் பக்கம் 25-ல் உள்ள பாராக்கள் 16, 17-லும், பெட்டியிலும் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு இளைஞர்களின் சூழ்நிலைகளை வேறுபடுத்திக் காட்டுங்கள். முடிவில், இந்தக் கட்டுரை முழுவதையும் மறுபடியும் வாசித்துப் பார்த்து பிள்ளைகளுடன் உடனடியாக கலந்தாலோசிக்குமாறும், இரத்தம் சம்பந்தப்பட்ட பைபிள் கட்டளைகளைப் பற்றி பேசப் பழக்குவிக்குமாறும் பெற்றோர்களிடம் சொல்லுங்கள்; இவ்வாறு செய்வது, தங்கள் நம்பிக்கைகளை உறுதியுடன் தெரிவிப்பதற்குப் பிள்ளைகளைத் தயார்படுத்தும். முழுக்காட்டுதல் பெற்ற பிள்ளைகள் DPA கார்டை வைத்திருக்கிறார்களா என்றும், முழுக்காட்டுதல் பெறாத பிள்ளைகள் அடையாள அட்டையை வைத்திருக்கிறார்களா என்றும் குடும்பத் தலைவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அவர்களில் யாராவது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இரத்தமேற்றுதல் சம்பந்தமாகப் பிரச்சினையை எதிர்ப்பட்டால், உதவிக்காக உள்ளூரிலுள்ள மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவை (HLC) மூப்பர்கள் நாட வேண்டும்.
பாட்டு 56, முடிவு ஜெபம்.
டிசம்பர் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். டிசம்பர் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். அடுத்த வருடத்தில் உங்கள் சபை கூட்ட நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அதை அறிவியுங்கள். ஜனவரி மாதத்தில் அளிக்கப்போகிற பிரசுரங்களைக் குறிப்பிடுங்கள். இவற்றை அளிப்பதற்கான மாதிரி பிரசங்கங்கள் எங்கே காணப்படுகின்றன என்பதைத் தெரிவியுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: விழித்தெழு! பத்திரிகையின் புதிய அம்சங்கள். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். மார்ச் 2005, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 1, பாராக்கள் 5, 6-ல் அறிவித்திருந்த மாற்றங்களைக் குறிப்பிடுங்கள். ஜனவரி 2006 விழித்தெழு! பத்திரிகையில், பக்கங்கள் 3, 4-ல் காணப்படும் “எமது வாசகருக்கு” என்ற பகுதியிலுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தப் பத்திரிகை வாசகர்களின் கவனத்தை நேரடியாக பைபிளிடம் திருப்புகிறது என்பதற்கு உதாரணங்களைக் குறிப்பிடுங்கள். பக்கம் 31-ல் காணப்படும் புதிய அம்சத்தைப் பற்றி சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். எப்போதும்போல் நாம் முதல் சந்திப்பில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வீட்டுக்காரரிடம் சேர்த்தே கொடுப்போம். ஆனால் பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் பத்திரிகையைத் தவறாமல் பெற்றுக்கொள்ளும் மற்றவர்களுக்கும் ஒரு விழித்தெழு!-வை மட்டுமே கொடுப்போம். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி ஜனவரி மாத விழித்தெழு!-வையும் ஜனவரி 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். ஜனவரி மாத நம் ராஜ்ய ஊழியத்தில், ஜனவரி விழித்தெழு! பத்திரிகையை அளிப்பதற்கான இன்னொரு பிரசங்கமும் காணப்படும். அது, மற்ற கட்டுரைகளில் ஒன்றைச் சிறப்பித்துக் காட்டும். இந்த இரண்டு பிரசங்கங்களையுமே மாதம் முழுவதிலும் பயன்படுத்தலாம்.
பாட்டு 222, முடிவு ஜெபம்.
ஜனவரி 2-ல் துவங்கும் வாரம்
குறிப்பு: வட்டாரக் கண்காணியின் சந்திப்பாக இருந்தால் தவிர சபைகள், ஜனவரி 2-ல் துவங்கும் ஊழியக் கூட்டத்தை அதற்கு முன்னதாக நடத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம். ஊழியக் கூட்ட அட்டவணைப்படியே எல்லா சபைகளும் மாவட்ட மாநாடு சம்பந்தப்பட்ட உட்சேர்க்கையைக் கலந்தாலோசிக்க வேண்டும். அந்த வாரத்தில் வட்டார மாநாடு இருந்தால், மாவட்ட மாநாடு நடக்கும் இடத்தையும் தேதிகளையும் தங்கள் புத்தகப் படிப்புத் தொகுதிகளில் புத்தகப் படிப்புக் கண்காணிகள் அறிவிக்க வேண்டும்.
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “நம் பைபிள் பிரசுரங்களை ஞானமாக உபயோகியுங்கள்.”d செப்டம்பர் 2002, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 1-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
25 நிமி: “2006 ‘மீட்பு விரைவில்’ யெகோவாவின் சாட்சிகளது மாவட்ட மாநாடு.”e சபை செயலரால் நடத்தப்பட வேண்டும். முதல் பாராவைக் கலந்தாலோசித்த பின்பு டிசம்பர் 15, 2005 தேதியிட்ட மாநாடு சம்பந்தமான கடிதத்தை வாசியுங்கள். முடிந்தளவு சீக்கிரமாக மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 48, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.