உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/12 பக். 2
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2012
  • இதே தகவல்
  • சொத்துக்களைப் பங்கிடுதல் முன்யோசனையும் நன்மைகளும்
    விழித்தெழு!—1998
  • நொறுங்கிய இதயங்களும் சிதறிய விசுவாசமும்
    விழித்தெழு!—2007
  • மறுசீரமைப்பதற்குரிய சத்தியத்தின் வல்லமை
    விழித்தெழு!—1992
  • மனதார கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2012
km 6/12 பக். 2

கேள்விப் பெட்டி

◼ இறந்த பிறகு நம்முடைய சில சொத்துக்கள் அல்லது எல்லா சொத்துகளும் யெகோவாவின் அமைப்புக்குச் சேர வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?

இறந்த பிறகு சொத்துக்களை நாம் சொந்தம் கொண்டாட முடியாது. (பிர. 9:5, 6) எனவே, சொத்துக்கள் யாருக்குச் சேர வேண்டும் என்பதை நிறைய பேர் உயிலில் அல்லது பொறுப்புரிமை பத்திரத்தில் முன்னதாகவே எழுதி வைக்கிறார்கள். (2 இரா. 20:1) இதில் பொறுப்புரிமையாளரின் அல்லது உயிலை செயல்படுத்துபவரின் பெயரையும் எழுதி வைப்பார்கள். பல நாடுகளில், இப்படி எழுதி வைக்காமல் இறந்தவரின் சொத்துக்களை அதிகாரிகளே சட்டப்படி பங்கிட்டுக் கொடுத்துவிடுவார்கள். எனவே, நம் சொத்துக்கள் குறிப்பிட்ட ஒரு நபருக்குச் சேர வேண்டும் என்று விரும்பினால், உதாரணமாக யெகோவாவின் அமைப்புக்குச் சேர வேண்டும் என்று விரும்பினால், முன்கூட்டியே ஒரு சட்டப்பூர்வ ஆவணத்தை எழுதி வைப்பது முக்கியம்; அதோடு, பொறுப்புரிமையாளரை அல்லது உயிலை செயல்படுத்துபவரை கவனமாகத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம்.

பொறுப்புரிமையாளர் அல்லது உயிலை செயல்படுத்துபவர் தன் கடமையைக் கவனமாக நிறைவேற்ற வேண்டும். சொத்தின் மதிப்பை/அளவை பொறுத்து அதை மொத்தமாகக் கணக்கிட்டு பங்கிடுவதற்கு நிறைய விவரங்களைச் சேகரிக்க வேண்டியிருக்கும், இதற்கு அதிக நேரமும் எடுக்கும். அதோடு, சட்டரீதியான வழிமுறைகளை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சபையில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் பொறுப்புரிமையாளராக அல்லது உயிலை செயல்படுத்துபவராக நியமித்துவிட முடியாது. ஏனென்றால், அவர் தகுதியுள்ளவராக... நம்பகமானவராக... உயிலில் உள்ளபடி செய்ய மனமுள்ளவராக... இருக்க வேண்டும்.—டிசம்பர் 8, 1998 விழித்தெழு!-ல் “சொத்துக்களைப் பங்கிடுதல் முன்யோசனையும் நன்மைகளும்” கட்டுரையைக் காண்க.

நீங்கள் பொறுப்புரிமையாளரா அல்லது உயிலை செயல்படுத்துபவரா? பொறுப்புரிமையாளராக அல்லது உயிலை செயல்படுத்துபவராக உங்களை யாராவது தேர்ந்தெடுத்தால் முதலில் அந்தப் பொறுப்பை உங்களால் நிறைவேற்ற முடியுமா என்று ஜெபத்தோடு யோசித்துப் பாருங்கள். (லூக். 14:28-32) அவர் இறந்தபிறகு, உயிலில் எழுதியிருக்கும் பயனாளிகள் அனைவருக்கும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. பொறுப்பு உங்கள் கைக்கு வந்தவுடன் சட்டப்படியும் உயிலில் எழுதியிருக்கிறபடியும் அதைப் பங்கிட்டு கொடுக்க வேண்டும். சொத்தின் மதிப்பு/அளவு சிறியதோ பெரியதோ உயிலில் இருப்பதை மாற்றக்கூடாது. யெகோவாவின் சாட்சிகளுக்கென்று ஏதாவது சொத்து எழுதி வைத்திருந்தால் அதையும் யெகோவாவின் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டியது உங்கள் கடமை.—லூக். 16:10; 21:1-4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்