ஜப்பான் கல்வித்துறையின் நெடுந்தூர ஓட்டப்பந்தயம்
ஜப்பானிலுள்ள “விழித்தெழு!” நிருபர் எழுதியது
“ஜப்பானிய சமுதாயத்தில் அதிக முக்கியமானதாக அல்லது ஜப்பானின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது உண்மையில் அதனுடைய கல்வி அமைப்பே அன்றி வேறொன்றுமில்லை” என்பதபாக ஹார்வார்ட் போராசிரியர் எட்வின் ரைஷாவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் அண்மையில், ஜப்பானின் பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. யோஷிக்கோ சக்கூராய் என்ற செய்தியாளர் இவ்விதமாகச் சொல்லுகிறார்: “ஜப்பானிய கல்வித் திட்டம் மாணவர்கள் அறிவாற்றலால் போஷிக்கப்படுவதற்கு ஒரு வழியாக இருப்பதற்கு பதிலாக, தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவதற்கு ஒரு போட்டியாக ஆகி கீழ் நிலையை அடைந்துவிட்டிருக்கிறது.” அதேவிதமாகவே ஜப்பானிய கல்லூரி முதல்வர் சசுக்கே காபே இவ்விதமாக தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது: “பல்வேறுபட்ட திறமைகளுடைய ஆட்களை உருவாக்குவதற்கு பதிலாக, அறிவை முயன்று பெற்றுக் கொள்வதையே நாம் பரம்பரை பரம்பரையாக வலியுறுத்தி வந்திருக்கிறோம்.”
ஆகவே அநேக கல்வித்துறை வித்தர்கள் ஐப்பானின் பள்ளிகள் கல்வித்துறையின் ஓட்டப் பந்தயமாகிவிட்டதாக அதைக் கண்டனம் செய்கிறார்கள். அது முழுமையாக சோர்வுண்டாக்கும், போட்டியால் முடிவு செய்யப்படுகிற சவாலாக ஆகிவிட்டிருக்கிறது. இந்நிலைக்கு காரணம் என்ன? மற்றவர்களின் மதிப்பையும் வெற்றியையும் ஜப்பானிய மக்கள் வெகு உயர்வாக மதிப்பதே அடைப்படையில் இதற்கு காரணமாக இருக்கிறது. பிரசித்திப் பெற்ற கம்பெனி அல்லது தொழிற்கூடத்தில் வேலைப் பார்ப்பது உயர்வாக மதிக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக அது போன்ற வேலையை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் பிரசித்திப் பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஆனால் குறிப்பிட்ட சில உயர்நிலைப்பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே, இந்த சிறந்த பல்கலை கழகங்களுக்குள் நுழைவதற்கு உங்களுக்கு வாய்ப்பிருக்கும். சிறப்பான ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்திருந்தால் மட்டுமே, நீங்கள் விரும்பத்தக்க உயர்நிலைப் பள்ளியில் இருக்க முடியும். நீங்கள் படித்த துவக்கப் பள்ளியில் போதிய எண்ணிக்கையான மாணவர்கள் ஜூனியர் உயர்நிலைப்பள்ளி நுழைவு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். நீங்கள் எந்த பாலர் பள்ளியில் படித்தீர்கள் என்பதும்கூட ஒரு கம்பெனியில் எந்த அளவுக்கு நீங்கள் முன்னேறுவீர்கள் என்பதை ஒருநாள் தீர்மானிக்கக்கூடும்!
“தேர்வு நரகம்”
“கல்வி மனச்சாய்வுள்ள தாய்மார்கள், நல்ல துவக்க பள்ளிகூடங்களில் இடம் வாங்குவதற்காக இரண்டே வயது நிரம்பிய [தங்களுடைய] குழந்தைகளை பாலர் பள்ளி நுழைவு தேர்வுகளில் பயிற்றுவிக்கப்படும்படியாக அழைத்து வருகிறார்கள்” என்பதாக பத்திரிக்கை எழுத்தாளர் கிம் பெய் ஷிபா எழுதியது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. போட்டி அத்தனை கடுமையாக இருப்பதன் காரணமாக ஒன்பது பேரில் ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது.
துவக்கப் பள்ளியில் சேர்ந்தவுடன் அதை தொடர்ந்து உயர்நிலைப் பள்ளியில் இடத்தை பெறுவதற்கான தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவதற்காக அடுத்த 12 வருடங்களை அவர்கள் செலவிடுகிறார்கள். பத்திரிக்கை எழுத்தாளர் ஷீபா இவ்விதமாகச் சொல்லுகிறார்: “போட்டி அத்தனை தீவிரமாக இருப்பதன் காரணமாக ‘தேர்வு நரகம்’ என்ற சொற்றொடர் உருவானது. ஆரம்ப பள்ளியில், பிள்ளைகள் ஆறாவது வகுப்புக்கு வந்தவுடன், இரண்டு மணிநேரங்கள் படிப்பதை தேவைப்படுத்தும் வீட்டுப் பாடங்களோடு அவர்கள் வீடுகளுக்கு அவசரமாக போகிறார்கள். பின்பு அவர்கள் அவசர அவசரமாக இரவு உணவை விழுங்கிவிட்டு, ஜூனியர் உயர்நிலைப்பற்றி தேர்வுகளுக்கு மாணவர்களை தயாரிப்பதில் சிறப்பு பயிற்சி அளிக்கும் “ஜூக்கூ” என்றழைக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு செல்லுகிறார்கள். இங்கு அவர்களுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் மூன்று மணி நேரங்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.”
இத்தனை நேர்த்தியான சவால்களை எல்லாம் கடந்து வந்திருப்பதால், பல்கலை கழகத்தில் நுழையும் மாணவர்கள் அனைவரும் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கும் உயர்ந்த தரமுள்ள மாணவர்களாக இருப்பார்கள் என்பதாக நீங்கள் இயல்பாகவே கற்பனை செய்துகொள்வீர்கள். அவ்விதமாக இல்லை என்பதாக எழுத்தாளர் கிம்பெய் ஷிபா இவர் ஒரு சராசரி பல்கலை கழக மாணவனை “காரியங்களை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடியபனாகவும், தன்னுடைய பல்கலைக்கழுகப் பட்டச் சான்றிதழை பெற்றுக்கொள்வது நிச்சயம் என்பதை அறிந்திருப்பதன் காரணமாக பள்ளி நேரங்களில் பாதி நாள் அநேகமாக மாஹ் ஜாங் என்ற சீன விளையாட்டை விளையாடுகிறவனாகவும் இருக்கிறான்” என்பதாபக விவரிக்கிறார். “தேவையான மார்க்குகள் வாங்குவதே போதுமானதாக இருக்கிறது.” எத்தனை பட்டதாரிகள் உண்மையில் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்து பெரும்பாலான முதலாளிகள் கவலைப்படுவதில்லை. சரியான பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெறுகிறவர்களுக்கே வேலை கிடைக்கிறது.
போட்டியின் பலன்கள்
போட்டி மனப்பான்மையுள்ள இந்த சூழ்நிலைமையில் எல்லாவிதமான ஊழல்களும் பிரச்னைகளும் தோன்றியிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் கவலையுள்ள பெற்றோர்கள், பல்கலைகழகங்களிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் ஜூனியர் உயர்நிலைப் பள்ளிகளிலும் தங்களுடைய பிள்ளைகளுக்கு இடம் வாங்க இலஞ்சம் கொடுக்கிறார்கள். பிரசித்திப் பெற்ற பள்ளி இருக்கும் எல்லைக்குள் தங்களுடைய விலாசத்தை பதிவு செய்து கொள்வதற்காக சில பெற்றோர், பொய்யாக விவாக ரத்து செய்து கொள்வது போல ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். ஒரு பள்ளியிலுள்ள ஒரு சில நூற்றுக்கணக்கான காலியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுகையில், பெரும்பாலானோர் ஏமாற்றமடைகிறார்கள். இது, சிலர் தற்கொலை செய்துகொள்வதற்கு வழிநடத்தியிருக்கிறது. மற்றவர்கள் வன்முறை செயல்களின் மூலமாக தங்களுடைய ஏமாற்றத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
மாணவர்களின் மீது இந்த இரக்கமற்ற போட்டியின் பாதிப்புகளே எல்லாவற்றையும்விட மிகவும் வேதனையாக இருக்கிறது. 11 தேசங்களில், 18-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மனநிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக பிரதம மந்திரியின் அலுவலகம் ஒரு குழுவை நியமனம் செய்திருந்தது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, ‘பண விஷயத்தில் வசதியாக இருக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?’ ஆம் என்பதாக பதிலளித்த தேசங்களில் ஜப்பான் முதலிடம் பெற்றது. மறுபட்சத்தில், சமூக சேவையின் மூலமாக ஜனங்களுக்கு அவர்கள் உதவி செய்ய விரும்புகிறார்களா என்பதாகவும் அவர்கள் கேட்கப்பட்டிருந்தார்கள். ஜப்பானிய இளைஞர்கள் பட்டியலில் கீழே இருந்தார்கள். ஆகவே ஜப்பானிய பள்ளிகள் கல்வி அளவில் சிறப்புற்று விளங்கினாலும் சமநிலையும், அக்கறையும் அனைத்து திறமைகளுமுள்ள ஆட்களை உருவாக்குவது என்பது வரும்போது சிலர் அவர்களுக்கு தோல்வி மார்க்கையே கொடுப்பார்கள்.
கல்வியில், என்ன விலையானாலும் வெற்றி பெறுதல் என்ற கோட்பாடு மாணவர்கள் மீது தீங்கான விளைவுகளை கொண்டுவருகின்றனவா? ஜெர்மன் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்னையை சிந்தித்துப் பாருங்கள். (g85 9/22)
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
“ஜப்பானிய கல்வித்திட்டம் மாணவர்கள் அறிவாற்றலால் போஷிக்கப்படுவதற்கு ஒரு வழியாக இருப்பதற்கு பதிலாக தேர்வுகளில் தேர்ச்சிச் பெறுவதற்கு ஒரு போட்டியாக ஆகி, கீழ் நிலையை அடைந்து விட்டிருக்கிறது.”
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
போட்டி சிறு வயதிலேயே துவங்கிவிடுகிறது