உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/22 பக். 3-4
  • இன்று பள்ளிகளில் என்ன நடக்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இன்று பள்ளிகளில் என்ன நடக்கிறது?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அது எவ்வளவு மோசமாக இருக்கிறது?
  • ஒழுக்கத்தைப்பற்றிய காரியம்
  • கொடிய காலங்களின் மத்தியில்
  • பெற்றோரைப் பள்ளிகள் பதிலீடு செய்கின்றனவா?
    விழித்தெழு!—1989
  • நல்ல கல்விக்கான தேடல்
    விழித்தெழு!—1995
  • பெரிய நகரிலுள்ள பள்ளிகளை உற்றுப்பார்த்தல்
    விழித்தெழு!—1986
  • பள்ளிகள் நெருக்கடியில்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/22 பக். 3-4

இன்று பள்ளிகளில் என்ன நடக்கிறது?

“எங்கள் பள்ளிகள் நெருக்கடியில்: இப்போதே காவலர்களைக் கொண்டுவரவும்” என்பது சமீபத்தில் நியூ யார்க் நகர செய்தித்தாளின் முன்பக்க தலைப்புச் செய்தியாக இருந்தது. நியூ யார்க் நகர கல்வி குழுமம் சொந்தமாக பள்ளி பாதுகாவலர்களை—1,000-க்கும் அதிகமான நகர-பள்ளிகளைக் காவல் காக்கும் 3,200 பேராலான ஒரு படையை—கொண்டிருக்கிறது. தற்போது, பாதுகாவலருக்கு உதவியாக ஒழுங்கான நகர காவலரும் பள்ளிக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அநேகர் விரும்புகின்றனர். அவர்கள் உண்மையிலேயே தேவைப்படுகின்றனரா?

நியூ யார்க் டைம்ஸ் தலைப்புச் செய்தி ஒன்று சொன்னது: “நியூ யார்க் நகரில் 20% மாணவர்கள் ஆயுதங்களை எடுத்துச்செல்வதாக அதிகாரப்பூர்வ ஆய்வுகள் காண்பிக்கின்றன.” 1990 முதல் 1992 வரை, நியூ யார்க் நகர பள்ளிகளின் தலைமை அலுவலராகவிருந்த ஜோஸஃப் ஃபெர்னான்டஸ் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “நமது பெரிய நகர-பள்ளிகளில் தற்போது இருப்பதைப்போன்ற வன்முறையை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. . . . 1990-ல் நியூ யார்க்கில் கல்வி அமைப்பிற்கு வேந்தராகப் பதவியேற்றபோது, இவ்வளவு மோசமாக இருக்கும் என்று என்னால் கற்பனைசெய்யவே முடியவில்லை. அது ஒரு கட்டமாக இல்லை, பரவுகிற ஒன்றாக இருக்கிறது.”

அது எவ்வளவு மோசமாக இருக்கிறது?

ஃபெர்னான்டஸ் இவ்வாறு அறிக்கைசெய்தார்: “வேந்தராக இருந்த முதல் பத்து மாதங்களின்போது, சராசரியாக ஒன்றுவிட்டு ஒரு நாளைக்கு, ஒரு பள்ளிசெல்லும் குழந்தை கொல்லப்பட்டது—சுரங்கப்பாதைகளில் குத்திக்கொல்லப்படுகிறார்கள், பள்ளி வளாகங்களில் அல்லது தெரு மூலைகளில் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் . . . சில மேல்நிலைப் பள்ளிகள், நடைபாதைகளிலும் வளாகத்திலும் சுற்றுக்காவல் செய்யும் பதினைந்து அல்லது பதினாறு [பாதுகாவலர்களைக்] கொண்டிருக்கின்றன.” அவர் மேலுமாகச் சொன்னார்: “பள்ளிகளில் வன்முறை பெருவாரியாய் பரவியிருக்கிறது, ஆகவே அதிகப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். சிகாகோ, லாஸ் ஏஞ்சலிஸ், டெட்ராய்ட்—எல்லாம் பெருநகர மையங்களாகிய—அவ்விடங்களிலுள்ள பள்ளிகளும் இப்போது ஏறக்குறைய அதேபோன்ற அழிவுக்குரிய பண்பற்ற நடத்தையின் மாதிரியையே காண்பிக்கின்றன.

“இதிலுள்ள வெட்கக்கேடு அதிர்ச்சியூட்டும் விதத்தில் தெளிவாக இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் ஏற்கத்தகாதவற்றை ஏற்று வந்திருக்கிறோம்: அமெரிக்க பள்ளிகளைப் போர்மண்டலங்களாக. அறிவொளியூட்டப்படுவதற்கான புகலிடங்களாக இருப்பதற்குப் பதிலாக பயம் மற்றும் அச்சுறுத்தலின் வீடுகளாக இருக்கின்றன.”

ஐக்கிய மாகாணங்களிலுள்ள 245 பள்ளி அமைப்பு முறைகளில் பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கிறார்கள்; இவற்றில் 102 அமைப்பு முறைகளில், அதிகாரிகள் ஆயுதந்தரித்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டுமே ஆயுதந்தரித்தவர்களாக இல்லை. மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வின்படி, ஐக்கிய மாகாணங்களிலுள்ள மாணவர்கள், மற்ற ஆயுதங்களை எண்ணிக்கையில் சேர்க்காமல், சுமார் 2,70,000 துப்பாக்கிகளை ஒவ்வொரு நாளும் பள்ளிக்குக் கொண்டு வருகிறார்கள்!

முன்னேறுவதற்குப் பதிலாக, நிலைமை அதிக மோசமாகவே ஆகியிருக்கிறது. அநேக பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்காணிகள் இந்த ஆயுதங்களின் வரவைத் தடுக்க தவறியிருக்கின்றன. 1994-ன் இலையுதிர் காலத்தின்போது, நியூ யார்க் நகர பள்ளிகளில் தெரிவிக்கப்பட்ட வன்முறை சம்பவங்கள், ஒரு வருடத்திற்கு முன்னர் அதே காலப்பகுதியில் தெரிவிக்கப்பட்டதுடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகரித்தன! “எக்காலத்திலும், முதல் முறையாக, ‘சண்டையிடுதல், வன்முறை, மற்றும் கும்பல்கள்’ ஆகியவற்றைச் சேர்ந்த வகை முதலிடத்தைப் பகிர்வதாயும், ‘கட்டுப்பாடின்மை’ உள்ளூர் பொது பள்ளிகள் எதிர்ப்படும் மிகப் பெரிய பிரச்சினையாகவும் இருக்கிறது” என்று ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வைப்பற்றி ஃபை டெல்டா காப்பான் விளக்குகிறது.

பள்ளி வன்முறை, பல நாடுகளில் பள்ளிகளுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது. கனடாவில், டோரன்டோவின் க்ளோப் அண்ட் மெய்ல் இந்த தலைப்புச்செய்தியைக் கொண்டிருந்தது: “பள்ளிகள் அபாய மண்டலங்களாக மாறி வருகின்றன.” ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் ஒரு சுற்றாய்வு, தாக்குதல் அல்லது கடத்திச்செல்லப்படுதலுக்குப் பயந்து, தொடக்கப்பள்ளியிலுள்ள பிள்ளைகளில் ஏறக்குறைய 60 சதவீதமானோர் அவர்கள் பெற்றோரால் கூட்டிக்கொண்டு விடப்பட்டு திரும்ப கொண்டுவரப்படுகிறார்கள் என்று காண்பித்தது.

என்றாலும், வன்முறை, பிரச்சினையின் பாகமாக மட்டுமே இருக்கிறது. அதிக அக்கறைக்குரிய வேறு காரியங்களும் பள்ளிகளில் நடக்கின்றன.

ஒழுக்கத்தைப்பற்றிய காரியம்

வேசித்தனம்—திருமணத்திற்கு வெளியே பாலுறவுகளை வைத்துக்கொள்வது—தவறு என்பதாக பைபிள் சொன்னாலும், இன்று பள்ளிகள் அப்படிப்பட்ட நல்ல ஒழுக்கப் போதனையை ஆதரிப்பதில்லை. (எபேசியர் 5:5; 1 தெசலோனிக்கேயர் 4:3-5; வெளிப்படுத்துதல் 22:15) பின்வருமாறு சொன்னபோது ஃபெர்னான்டஸ் விவரித்த நிலைமைக்கு நிச்சயமாக இது காரணமாக இருந்திருக்கிறது: “எங்கள் பருவவயதினர்களில் 80 சதவீதத்தினர் பால்சம்பந்தமான ஈடுபாடுள்ளவர்கள்.” சிகாகோவிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளில் மூன்றிலொரு பங்கானோர் கருத்தரித்திருந்தனர்!

மாணவிகளின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக சில பள்ளிகள் வளர்ப்பகங்களைக் கொண்டிருக்கின்றன. மேலுமாக, எய்ட்ஸ் கொள்ளைநோய் பரவுவதையும் முறைதகாத பிள்ளைகளின் பிறப்பு அதிகரிப்பதையும் தடுக்கும் வீணான முயற்சியில் கருத்தடை உறைகள் வழக்கமாக கொடுக்கப்படுகின்றன. கருத்தடை உறைகளை விநியோகித்தல், விபசாரம் செய்யும்படி மாணவர்களை உண்மையில் உற்சாகப்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் அவ்வாறு செய்வதைப் பொறுத்துக்கொள்ளுகிறது. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களைக் குறித்ததில், மாணவர்கள் என்ன நினைக்கவேண்டும்?

“சரி அல்லது தவறு என்று எதுவுமில்லை என்றும், ஒழுக்கத் தெரிவுகள், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கின்றன என்றும் நினைக்கிற இளைஞரின் எண்ணிக்கை ஆச்சரியப்படத்தக்க அளவில்” இருக்கிறது என்று நெடுங்காலமாக பல்கலைக்கழக ஆசிரியையாக இருக்கும் ஒருவர் சொன்னார். இளைஞர் ஏன் இந்த விதமாக நினைக்கின்றனர்? அந்த ஆசிரியை குறிப்பிட்டார்: “அவர்கள் ஒழுக்கரீதியில் அறியொணாமைக் கொள்கையினராகும்படி அவர்களுடைய மேல்நிலைப் பள்ளி அனுபவம் ஒருவேளை வழிநடத்தியிருக்கலாம்.” ஒழுக்க விஷயத்தில் அப்படிப்பட்ட நிச்சயமற்றத்தன்மையின் விளைவு என்ன?

சமீபத்திய செய்தித்தாள் தலையங்கம் ஒன்று இவ்வாறு வருத்தந்தெரிவித்தது: “எதற்கும் யாருமே பொறுப்பேற்க மனமுள்ளவர்களாக இல்லை என்பதாகச் சிலவேளைகளில் தோன்றுகிறது. ஒருபோதும் ஏற்பதில்லை.” ஆம், எதுவும் ஏற்கத்தக்கதே என்பதுதான் செய்தி! மாணவர்கள்மீது இது செலுத்தவல்ல செல்வாக்கிற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். இரண்டாம் உலகப் போர் மற்றும் நாசிச கொள்கையின் எழுச்சியைப்பற்றிய பொருளின்பேரிலான ஒரு பல்கலைக்கழக வகுப்பில், அந்த சர்வநாசத்திற்கு எவரையுமே குறைகூற முடியாது என்பதாகப் பெரும்பாலான மாணவர்கள் நம்பியதாக ஒரு பேராசிரியர் கவனித்தார்! அந்த ஆசிரியர் சொன்னதாவது, “மாணவர்களின் மனதில், அந்த சர்வநாசம் ஓர் இயற்கை பேரழிவைப் போலவே இருந்தது: அது தவிர்க்க முடியாததாகவும் தடுக்க முடியாததாகவும் இருந்தது.”

சரி மற்றும் தவறை மாணவர்கள் பிரித்துணர முடியாமல் இருக்கையில் அது யாருடைய தவறாக இருக்கிறது?

கொடிய காலங்களின் மத்தியில்

பள்ளிக்குச் சாதகமாக வாதிடுபவராய், முன்னாள் ஆசிரியர் ஒருவர் சொன்னார்: “பிரச்சினை, சமுதாயத்தில் ஆரம்பிக்கிறது, ஏற்கெனவே அங்கிருக்கும் பிரச்சினைகளைப் பள்ளிகள் வெறுமனே பிரதிபலிக்கின்றன.” உண்மையில், சமூகத்தின் தலைவர்கள் நடைமுறையில் செய்யத் தவறுவதை வெற்றிகரமாகப் போதிப்பது கடினமான காரியம்.

இதை விளக்குவதாய், ஐ.மா. அரசாங்க அதிகாரிகளின் ஒழுக்கயீனம் தலைப்புச் செய்தியாக இருந்த ஒரு காலத்தில், பிரபல பத்திரிகையாளர் எழுதினார்: “நல்லதில் நம்பிக்கையற்ற இந்தச் சகாப்தத்தில் ஆசிரியர்கள் ஒழுக்கத்தைப் பற்றி கற்பிக்க முயலுவது எப்படி என்பதைக் குறித்து எனக்கு எவ்வித கருத்துமில்லை. . . . ‘வாஷிங்டனைப் பாருங்கள்!’ என்று அந்த இளம் சிறார்கள் ஆட்சேபக் குரல் எழுப்புவார்கள். அந்தப் பெரிய வெள்ளை மாளிகை கூரையின்கீழ் வரலாற்றிலேயே மிகவும் ஒழுக்கங்கெட்ட மோசடிகள் செய்யப்பட்டிருக்கின்றன . . . என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”

“கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று” பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1-5) நிச்சயமாகவே இவை கொடிய காலங்கள்! இதைக் கருத்தில்கொண்டு, இன்று பள்ளிகளிலுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் மாணவர்கள் நல்ல கல்வியைப் பெற உதவுவதற்கும் என்ன செய்யப்பட்டு வருகிறது? பெற்றோராகவும் மாணவர்களாகவும் நீங்கள் என்ன செய்ய முடியும்? பின்வரும் கட்டுரைகள் இதைக் கலந்தாலோசிக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்