1914 முதற்கொண்டு உலகம்
பாகம் 4: 1940-1943 பயத்தினால் துரத்தப்படும் தேசங்களின் தத்தளிப்பு
அவருடைய வார்த்தைகள், எந்த வீரனையும் கதிகலங்கச் செய்ய போதுமானதாக இருந்தது. “கடுமையான உழைப்பையும் கண்ணீரையும் வேர்வையையும் தவிர கொடுப்பதற்கு என்னிடம் வேறு எதுவுமில்லை” என்பதாக புதிதாக பிரதம மந்திரியாக நியமனம் செய்யப்பட்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் சட்ட மன்றத்தில் தெரிவித்தார். நிலைமையின் வினைமையானத் தன்மையை வலியுறுத்துபவராய் அவர் அறிவித்ததாவது: எது எப்படியானாலும் வெற்றி, எல்லா பயங்கரத்தின் மத்தியிலும் வெற்றி, பாதை எத்தனை மீண்டும் கடினமானதாகவும் இருப்பினும் வெற்றி; ஏனென்றால் வெற்றியின்றி உயிர் வாழ முடியாது.”
ஆம், 1940 மே 13-ம் தேதி இங்கிலாந்து மக்களுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்க எல்லா காரணமுமிருந்தது. அடுத்த ஆறு மாதங்களில், லுப்ஃட்வாஃப் என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய விமானப் படை, தாக்குதலுக்கு ஆயத்தம் செய்யும் வகையில் இராணுவம் மற்றும் இராணுவம் சாராத குறியிலக்குகளின் மீது விமானம் மூலம் விண்ணிலிருந்து குண்டுமாரி பொழிந்தது. இது பின்னால் இங்கிலாந்துப் போர் என்றழைக்கப்பட்டது. இது இங்கிலாந்து தேசத்தின் விமானப்படை வலிமையை தகர்க்கவும் அதன் மக்களின் மனத்திண்மையை அழிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஜெர்மானிய விமானப்படைக்கு போரில் வெற்றி கிட்டவில்லை. ஹிட்லர் சற்று தயங்கினான். அக்டோபரில் குறைந்த பட்சம் அச்சமயத்துக்காகவாவது படையெடுப்பு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
பயத்திலிருந்து விடுதலை?
அமெரிக்கா இங்கிலாந்துக்குத் தொடர்ந்து அனுதாபம் காண்பித்து வந்தது. அதிகாரப் பூர்வமான அமெரிக்க நடுநிலைக் கொள்கை ஆட்டங்கொள்ள ஆரம்பித்தது. தன்னுடைய நோக்கங்களைத் தெளிவுப்படுத்துகிறவராய், ஜனாதிபதி ரூஸ்வெல்ட் 1940-ல் சொன்னதாவது: “இங்கிலாந்துக்கு நாம் மிகுதியாக பொருளாதார உதவிகளைச் செய்து வந்திருக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் அதிகத்தை நாம் செய்வோம்.”
1941 ஜனவரி 6-ம் தேதி அவர் இன்னும் ஒருபடி மேலே சென்றார். அமெரிக்க கூட்டரசின் சட்ட மன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், பேச்சுரிமை, சமயக் கொள்கையுரிமை, அச்சந்தவிர்ப்புரிமை, வறுமை தவிர்ப்புரிமை ஆகிய நான்கு அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசினார். அவைகளில் ஒன்றை அச்சந்தவிர்ப்பு உரிமையை முயன்று பெற உதவியாக, “உலகில் எந்த ஒரு இடத்திலும்—எந்த ஒரு நேச நாடும் தன்னுடைய அண்டை நாட்டிற்குள் ஆக்கிரமிப்பைச் செய்ய முடியாத அளவுக்கு முழுமையான வடிவில் உலகளாவிய ஆயுதக் குறைப்பைச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். இது உண்மையில், ‘அண்டை’ நாடுகளின் கொள்கைகளின் மீதும் இலக்குகளின் மீதும் மறைமுகமாக அறிவிக்கப்பட்ட போராக இருந்தது.
இரண்டு மாதங்களுக்குப் பின்பு அமெரிக்க ஐக்கிய கூட்டரசின் சட்ட மாமன்றம் கடனளித்தல்—குத்தகைக்கு விடல் என்றழைக்கப்பட்ட ஒரு சட்டத்தை ஏற்படுத்தி வைத்தது. இதன் அடிப்படையில் அமெரிக்கா போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் படைக்கலங்கள் ஆகியவற்றை பெருமளவில் இங்கிலாந்துக்குக் கொடுத்தது.a உள்நாட்டில் எதிர்ப்பு இதற்குத் தொடர்ந்து இருந்து வந்தபோதிலும் அமெரிக்கா அதிகமதிகமாக ஐரோப்பாவின் யுத்தத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
இதற்கிடையில் ஐரோப்பிய நேச நாடுகளின் மாபெரும் வெற்றிகளால் உற்சாகமடைந்த ஜப்பான், இங்கிலாந்தோ ஹாலந்தோ குறுக்கிடக்கூடும் என்ற மிதமிஞ்சிய அச்சமில்லாமல் இப்பொழுது தென் கிழக்கு ஆசியாவினுள்ளே முன்னேறிச்செல்ல முடியும் என்பதாக நினைத்தது. 1940 செப்டம்பரில் அது இந்தோசீனாவின் மீது படையெடுத்தபோது, வாஷிங்டன் இதற்கு வெகுவாக எதிர்ப்பைத் தெரிவித்தது. தேசத்தின் தெற்கு பகுதிக்குள் ஜப்பான் முன்னேறியபோது, அதைத் தொடர்ந்து செயல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஜப்பானிய உடைமைகள் அதன் உரிமையாளர்களுக்குக் கிடைக்கக்கூடாததாயின. ஜப்பானுக்கு கப்பலில் எண்ணெய் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது. ஜப்பானியர்களுக்கு இன்றியமையாத இவை பாதிக்கப்பட்டதால், அமெரிக்காவின் கூடுதலான குறுக்கீட்டை நீக்கிவிட வேண்டிய நிர்பந்தத்தை ஜப்பான் இப்பொழுது உணர்ந்தது.
ஜப்பானுடையதைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிக வலிமையுள்ளதாயிருந்த அமெரிக்காவின் கடற்படையோடு போரிட்டு முடிவான வெற்றியை எய்துவதன் மூலம், அமெரிக்காவின் பழிக்குபழி வாங்கும் திறமையை ஓரளவு குறைத்துவிடலாம் என்பதாக இராணுவ தலைவர்கள் வாதாடினார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஹாலந்து பிராந்தியங்களைக் கைப்பற்றுவதன் மூலம் ஜப்பான் பின்னால் எதிர்தாக்குதல் செய்யப்பட்டால், தன்னை பாதுகாத்துக்கொள்ள இவ்விடங்களில் படைத்தளங்களைக் கொண்டிருக்கலாம் என்பது அவர்கள் எண்ணமாக இருந்தது. ஆரம்பம் வாய் மோமியாக இருக்கும் என்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இது பெர்ல் கடலில் ஆரம்பிப்பதை அர்த்தப்படுத்தியது. ஒரு சமயத்தில் முத்து ஈரிதழ்சிப்பி இங்கு மிகுதியாக காணப்பட்டதன் காரணமாக பெர்ல் நதி கழிமுகத்தை ஹவாய் மக்கள் இவ்விதமாகவே அழைத்தார்கள். இது ஹானலூலு நகரின் மேற்கே தாழ்வானப் பகுதியில் ஒரு சில மைல்கள் தொலைவில் உள்ளது. ஆனால் 1941 டிசம்பர் 7-ம் தேதி காலை, வாய் மோமியின் தண்ணீர்களில் முத்துக்கள் அல்ல, ஆனால் மூழ்கிப் போன கப்பலின் சிதைவுப் பொருட்களும் அதிலிருந்த ஆட்களின் உருதெரியாது போன உடல்களுமே இருந்தன. அவ்விடத்திலிருந்த அமெரிக்காவின் முக்கிய பஸிபிக் கடற்படை தளத்தை ஜப்பானிய போர் விமானங்கள் தாக்கியதால் இந்தப் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது.
பெர்ல் துறைமுகத் தாக்குதலில் உண்மையில் விமான ஊர்திகளைத் தவிர பஸிபிக்கிலிருந்த அமெரிக்க கப்பற்படைகள் ஈடுகட்டப்பட்டன. ஒருசில மணி நேரங்களுக்குள் அமெரிக்காவின் மற்ற விமானப் படை தளங்களில் குண்டுகள் வீசப்பட்டன. தூர கிழக்கிலிருந்த அமெரிக்காவின் படைத்துறை விமானங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேல் அழிக்கப்பட்டன. மூன்று நாட்களுக்குப் பின்பு ஜப்பான் பிலிப்பைன்ஸின் மீது படையெடுத்து ஒரு மாதத்திற்குள் மனிலாவைக் கைப்பற்றி, மே மாத மத்தியில் எல்லா பிலிப்பைன்ஸ் தீவுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. வேகமாக ஒன்றன்பின் ஒன்றாக, ஹாங்காங், பர்மா, ஜாவா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோ சீனா, பிரிட்டிஷ், மலேசியா, சுமத்திரா, போரினியோ, நியு கின்னியின் சில பகுதிகள், நெதர்லாந்து, ஈஸ்ட் இன்டீஸ் இன்னும் அநேக பஸிபிக் தீவுகள் ஜப்பானியர்களின் கைவசம் வந்தன. ஆசியா கண்டத்தில், விரைந்து முப்படைகளையும் ஒருங்கிணைத்து படைக்கலங்களை வேண்டிய அளவு பயன்படுத்தி முனைந்து தாக்குதல் செய்யும் போர் முறையில், அதன் ஐரோப்பிய கூட்டாளிக்கு இம்மியளவும் இவர்கள் பின்னால் இருக்கவில்லை.
1942-ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தபோது, உலகில் அச்சந்தவிர்க்கப்பட்டு விட்டது என்று சொல்வதற்கு சிறிதும் ஆதாரம் இல்லை. இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகளே மிகவும் துல்லிபமாக இருந்தன: “பூமியின் மேலுள்ள ஜனங்களுக்கு தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும் . . . பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.”—லூக்கா 21:25, 26.
ஜெர்மானிய மின்னல் மறைகிறது
இதற்கிடையில், ஜெர்மனியும் இத்தாலியும் பால்கன் தீப கற்பத்தில் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டன. ஹிட்லர் 1941 ஏப்ரல் 6-ம் தேதி யுகோஸ்லாவியாவுக்கும் கிரீஸிற்கும் தன் படையை அனுப்பி வைத்தான். யூகோஸ்லாவியாவும் அதைத் தொடர்ந்து கிரீஸும் மே மாத இடையில் கைப்பற்றப்பட்டன.
ஹிட்லரின் அடுத்த நடவடிக்கை பல்வேறு ஆசைகளால் தூண்டப்பட்டிருந்தது. இங்கிலாந்து சமாதானத்தை நாட வேண்டும் என்பதை அவன் பெரிதும் விரும்பினான். சீனாவில் ருஷ்யர்களோடு போர் செய்து கொண்டிருந்த ஜப்பானியர்களின் மீதிருந்த அழுத்தத்தையும் கூட அவன் நீக்க விரும்பினான். இவ்விதமாக அவர்கள் அமெரிக்கர்களை திக்குமுக்காடச் செய்துவிட வேண்டும் என அவன் விரும்பினான். இதன் காரணமாகவே ருஷ்யாவுக்கு எதிராக போர் செய்ய ஹிட்லர் தன் படையை ஆயத்தம் செய்தான்.
முந்தைய வெற்றிகளால் உற்சாகமடைந்திருந்த ஹிட்லரின் படைத்தலைவர்கள், ஜூன் மாதம் படையெடுத்தால் மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே ஜரோப்பிய ருஷ்யா தங்கள் கைவசம் வந்துவிடும் என்பதாக நினைத்தார்கள். ஆகவே 1941 ஜூன் 22-ம் தேதி அவர்கள் தாக்குதல் செய்தார்கள். அவர்கள் மின்னல் வேகத்தில் வெற்றி மேல் வெற்றி எய்தினார்கள். இரண்டு சந்தர்ப்பங்களில் அவர்கள் பெரிய ருஷ்ய படைகளை வளைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் 5 லட்சத்துக்கும் மேலானவர்களைப் போர் கைதிகளாக கொண்டு சென்றார்கள். லெனின்கிராடு வீழ்ச்சியடைய தயாராக இருப்பது போல தோன்றியது. டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே ஜெர்மானிய படை மாஸ்கோ நகரத்துக்கு புறம்பேயுள்ள பகுதிகளுக்குள் சென்றுவிட்டது.
ஆனால் மழைக்காலம் அருகிலிருந்தது. முதல் முறையாக ஹிட்லரின் படைகள் கால அட்டவணையில் பின்தங்கிவிட்டிருந்தார்கள். லெனின்கிராடும் மாஸ்கோவும் உறுதியாக இருந்தன. ருஷ்ய படைகள் இப்பொழுது தங்களுக்கு ஏற்பட்ட ஆரம்ப கால அதிர்ச்சியிலிருந்து மீண்டுவந்து மாரிகால போருக்காக தங்கள் ஜெர்மானிய கூட்டாளிகளைவிட வெகுவாக ஆயத்த நிலையில் இருந்தனர். இவர்கள் ஜெர்மானியர்களை அசையாதபடி செய்துவிட்டார்கள். உண்மையில் அதை பின்வாங்கவும்கூட செய்துவிட்டார்கள்.
அடுத்த கோடையில் ஜெர்மானியர்கள் எதிர்தாக்குதல் செய்தார்கள். ஆனால் ஸ்டாலின்கிராட்டின் மீது (இப்பொழுது வோல் கோக்ராட்) அவர்கள் செய்த முழு வேக தாக்குதல் அவர்களுடைய அழிவுக்கே வழிநடத்தியது. 1943-ன் முற்பகுதியில் ருஷ்ய வீரர்கள், நகரத்தை கைப்பற்றுவதில் உறுதியாக இருந்த ஆயிரக்கணக்கான படைகளைச் சுற்றி வளைத்துக்கொண்டு அவர்களை சரணடைந்துவிட நிர்பந்தம் செய்தார்கள். ராயல் மிலிட்டரி அகாடமி சான்ட் ஹர்ஸ்ட்டில், மூத்த பேராசிரியரான ஜான் பிம்லாட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இது ஜெர்மானிய மக்களின் மனவலிமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாக்குதலாகவும் கீழ்த்திசை படை முன்னணியின் போரில் ஒரு திரும்பு கட்டமாகவும் இருந்தது. ஸ்டாலின்கிராடுக்கு முன்னால் ருஷ்ய நாட்டவர் முழுமையான வெற்றிகளை அனுபவித்தது கிடையாது; இதற்குப் பின் அவர்கள் ஒருசில தோல்விகளை எதிர்பட வேண்டியவர்களாய் இருந்தார்கள்.”
1943-ன் முடிவுக்குள் இதற்கு முந்தைய இரண்டாண்டுகளின்போது ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது பெரும்பாலான பிராந்தியங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டுவிட்டன. ஜெர்மானிய மின்னல் மறைந்துவிட்டது.
“மான்டி” “பாலைவன குள்ளநரியைத்” துரத்துகிறது
1912-ல் சிரேனைக்காவும் திரிபோலிட்டானியாவும் (இப்பொழுது தென் ஆப்பிரிக்க தேசமாகிய லிபியாவின் ஒரு பாகம்) இத்தாலியோடு சேர்க்கப்பட்டது. 1940-ன் முடிவில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 3,00,000 இத்தாலியப் போர் வீரர்கள், போர்திற நடவடிக்கைகளுக்குப் பயன்படத்தக்க சூயஸ் கால்வாய் பாதையை எகிப்தில் காவல் காத்துக்கொண்டிருந்த சிறிய இங்கிலாந்து படைக்கு மிகவும் ஆபத்தாக இருந்தார்கள். இந்த ஆபத்தை விலக்க, இங்கிலாந்து முதலாவதாக தாக்குதல் செய்ய தீர்மானித்தது. அவர்கள் எய்திய முடிவான வெற்றிகளில் இது முதல் வெற்றியாக இருந்தது. இவர்கள் ஆயிரக்கணக்கானோரை கைதிகளாக கொண்டு சென்று இத்தாலியப் படை முழுவதையும் பின்வாங்கச் செய்தார்கள். அந்தச் சமயத்தில் கிரீஸ், அண்டை நாடுகளின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் இங்கிலாந்தின் உதவியை ஏற்றுக்கொள்ளாமலிருந்திருந்தால் வெற்றி இன்னும் மிகப் பெரிய ஒன்றாக இருந்திருக்கும். தற்சமயத்துக்கு வட ஆப்பிரிக்கா மீது போர் தொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. அண்டை நாடுகள் மீண்டும் தங்களை ஒழுங்காக அமைத்துக்கொள்ள இது நேரத்தை அனுமதித்தது.
பின்னால் “பாலைவன குள்ளநரி” என்பதாக அழைக்கப்பட்ட தளபதி ரோமல் தலைமையில் ஜெர்மானியப் படை யுத்தத்தின் போக்கை திசைத்திருப்பி கணிசமான ஆதாயத்தோடு வெற்றியடைந்தது. 1942-ல் ஜூலை மாத ஆரம்பத்தில் அவனுடைய படை அலெக்ஸாண்டிரியாவுக்கு 60 மைல்கள் (100 கி.மீ. தொலைவிலுள்ள அலாமேயினிற்குள் முன்னேறிச் சென்றது அவனுடைய மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இப்பொழுது ஆப்பிரிக்காவில், விரைந்து முனைந்து தாக்கும் போர் யுக்தி எகிப்தை கைப்பற்றி சூயஸ் கால்வாயின் கட்டுப்பாட்டை பெறுவதில் உறுதியாக இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் படைகள் ஜெனரல் சர் பெர்னாட் லா மான் கோமெரியின் தலைமையின் கீழ் அக்டோபர் 23-ம் தேதி தரைப்படைத் தாக்குதல் செய்தபோது ரோமல் படிப்படியாக பின்வாங்கினான். இது கலவரத்தில் போய் முடிந்தது. பின்னர் 1942 நவம்பரில் நேசநாடுகள் மொரோக்கோவையும் அல்ஜீரியாவையும் வெற்றிகரமாக கைப்பற்றினார்கள். தொடர்ந்து வந்த மே மாதத்திற்குள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து முன்னேறிவந்து கொண்டிருந்த சத்துரு படைகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட ‘அண்டை’ நாடுகளின் படைகள் வட ஆப்பிரிக்காவை கைப்பற்றுவதில் தோற்றுப்போயின.
தென் பசிப்பிக்கின் குறுக்கே சில்லுவிளையாட்டு
1942-ம் ஆண்டு வசந்த காலத்தின்போது ஜப்பான் மிகப் பெரிய அளவில் விரிவடைந்துவிட்ட ஒரு பேரரசைக் குறித்து பெருமையடித்துக் கொள்ளக்கூடிய நிலையில் இருந்தது. ஆனால் இந்தப் பிராந்தியத்தை ஜப்பானியர்களிடமிருந்து மீட்டுக்கொள்ள வேண்டும் என்பதே நேச நாடுகளின் திட்டமாக இருந்தது. ஜப்பானின் தலை நிலப் பரப்பை கடைசியாக சென்றெட்டும் வரையாக தங்கள் படைகளை ஒரு தீவிலிருந்து மற்றொன்றுக்கு பசிப்பிக்கின் குறுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்பது அதன் திட்டமாக இருந்தது. தொடர்ச்சியாக நீண்ட பயங்கரமான கடற்படை போர்கள் இதைத் தொடர்ந்து செய்யப்பட்டன. சைபான், குவாடல்கனால், ஐயு ஜிம்மா, ஓக்கின்னாவா போன்ற அதிகம் அறியப்படாத பசிப்பிக் தீவுகள் இருபக்கங்களிலும் பயங்கர சேதத்தோடு கைப்பற்றப்பட்டன. பரதீஸ் தீவுகளைப் பற்றிய இளவயது பகற்கனவுகள் மறைந்து, இரத்தக் கறைபடிந்த கடற்கரைகளில் உருச்சிதைந்த பிணங்களின் கோர காட்சி கொடிய நிஜங்களாக மாறின. தோல்வி கசப்பாக இருந்தது. ஆனால் வெற்றியிலும் இன்னும் வர இருந்ததைப் பற்றிய பயம் கலந்திருந்தது.
எதிர்கால திட்டங்கள்
போரின் மத்தியிலும், சமாதான திட்டங்கள் ஏற்கெனவே தீட்டப்பட்டு வந்தன. உதாரணமாக 1942-ம் ஆண்டு மத்தியில், யுத்தத்துக்குப் பிற்பட்ட காலத்துக்காக திட்டம் வரைவதில் 30-க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் அரசாங்க ஏஜென்ஸிக்கள் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது—ஆனால் முழுமையாக பயமின்றி அவர்கள் இதைச் செய்து கொண்டில்லை. சர்ச்சில் மிகவும் பொருத்தமாக குறிப்பிட்டதாவது: “வெற்றியின் பிரச்னைகள் தோல்வியினுடையதைவிட அதிகமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறது. ஆனால் அவை கையாளுவதற்கு எளிதானவை அல்ல.
செயலற்றுப் போய்விட்ட சர்வ தேசிய சங்கத்துக்கு மாற்றீடு கண்டுபிடிப்பதே வெற்றியினால் விளைந்த மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சில ஆட்கள் இதைக் குறித்து சந்தேகத்திலிருந்த போதிலும், இதற்குப் பதிலாக ஒன்று கண்டுபிடிக்கப்படும் என்பதில் யெகோவாவின் சாட்சிகள் நிச்சயமாயிருந்தார்கள். 1942-ல் ஓஹையோவிலுள்ள கிளீவ்லாண்டில் நடைபெற்ற அவர்களுடைய மாநாட்டில் ஒரு பேச்சாளர் சொன்னதாவது: “அர்மகெதோன் வருவதற்கு முன்பாக, ஒரு சமாதானம் வர வேண்டும் என்பதாக வேதாகமம் காண்பிக்கிறது. சம உரிமைகளை விரும்புகின்ற மனதுள்ள ஆட்கள், ஐக்கிய நாடுகளின் அடிப்படையில் தேசங்களின் ஒரு குடும்பத்தை ஒரு “உலக கூட்டுறவை” உருவாக்க விரும்புகிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 17:8-லுள்ள தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிட்டு அவர் “உலக தேசங்களின் சங்கம் மீண்டும் எழும்பி வரும்” என்பதாக சந்தேகமின்றி தெரிவித்தார்.
ஆனால் அது நிலையான சமாதானத்தைக் கொண்டுவருமா? “கடவுளுடைய திட்டவட்டமான பதில், இல்லை!” என்பதாக பேச்சாளர் குறிப்பிட்டார். என்றபோதிலும், அதனுடைய தற்காலிகமானத் தன்மையின் மத்தியிலும் வரப்போகிற சமாதான காலம் மிகவும் வரவேற்கப்படும் எதிர்காலத்தைக் குறித்து பயமேதுமின்றி போர் முடிந்த பின்பு, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிரசங்க வேலையை விரிவுபடுத்த திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தார்கள். 1942-ல் அவர்கள் மற்ற தேசங்களில், சேவை செய்வதற்காக கிறிஸ்தவ ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கு மிஷெனரிப் பள்ளியை நிறுவினார்கள். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில், பொதுப்பேச்சுக் கூட்டங்களை விரிவுபடுத்துவதற்காக பொதுப் பேச்சாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு ஒரு திட்டம் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டது.
1943 முடிவுக்கு வந்தபோது தேசங்கள் இன்னும் பயத்தினால் துரத்தப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்தன. ஆனால் இரு பக்கங்களிலுமிருந்து ஆட்கள் யுத்தத்தில் சோர்வடைந்தவர்களாய் யுத்தத்திற்குப் பிற்பட்ட உலகம், வாக்கு செய்திருந்த பரிகாரத்தை எதிர்நோக்கியிருக்க ஆரம்பித்தார்கள். ரூஸ்வெல்ட் பேசியது போல அது பயத்திலிருந்து விடுதலையைக் கொண்டு வருமா? மாறாக உலகளாவிய பயம் விரைவில் புதிய உயரங்களை எட்ட இருந்தன! இதில் வேடிக்கை என்னவென்றால், வேதனையான யுத்த ஆண்டுகளைக் கடைசியாக முடிவுக்குக் கொண்டுவர கடவுளால் அனுப்பப்பட்டதாக சிலர் வரவேற்கும் அதே கருவியே இதற்கு முக்கிய பொறுப்பாக இருக்கும். “இரண்டாம் உலகப் போர்—அதன் கொடிய மற்றும் கோரமான முடிவு” எமது அடுத்த இதழில் வாசிக்கவும். (g87 4/22)
a இந்த வருடம், ஏப்ரல் மாதத்தின்போது சீனாவுக்கும் செப்டம்பரில் சோவியத்துக்கும் உதவி அளிக்கப்பட்ட போதிலும் முக்கியமாக க்ரேட் பிரிட்டனும் காமன்வெல்த் தேசங்களுமே இங்கே அர்த்தப்படுத்தப்படுகின்றன. போர் முடிவதற்குள் சுமார் 50 பில்லியன் டாலர்கள் உதவி 38 வித்தியாசமான தேசங்களுக்கு கொடுக்கப்பட்டன.
[பக்கம் 21-ன் பெட்டி]
மற்ற செய்தி குறிப்புகள்
1941—ஜெர்மன் கத்தோலிக்க மேற்றிராணியர்களின் மாநாடு சோவியத் யூனியனுக்கு எதிரான போருக்கு தன் ஆதரவை பிரகடனம் செய்கிறது
ஆஸ்விட்ஸ் பாசறைகளில் முதல் முதலாக மக்கள் மொத்தமாக விஷவாயு மூலம் கொல்லப்படுகிறார்கள்
1942—இந்தியாவிலுள்ள பம்பாய், புயல் காற்றினாலும், வெள்ளத்தாலும் தாக்கப்படுகிறது; 40,000 பேர் உயிரிழப்பு
சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முதல் நியுக்கிளியர் செயல் விளைவு தொடர் உண்டு பண்ணப்படுகிறது
வான்சீயில் நடைபெற்ற மாநாடு யூதர்களின் பிரச்னைக்கு நாசியின் “கடைசி பரிகாரமாக” அவர்களை ஒழித்துக் கட்டுவதை ஏற்றுக்கொள்கிறது
1943—துருக்கியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 1800 ஆட்கள் உயிரிழக்கிறார்கள்
வங்கத்தில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பஞ்சத்தில் உயிரிழக்கிறார்கள்
அமெரிக்காவின் உச்ச நீதி மன்றம் 1940-ல் செய்த தீர்ப்பை மாற்றி, பொதுப் பள்ளிகளில் கொடி வணக்கத்தை கட்டாயப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்பதாக தீர்ப்பு வழங்குகிறது.
அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் இன கலவரம்; டெட்ராய்ட்டில் 35 பேர் உயிரிழக்கிறார்கள், 1000 பேர் காயமடைகிறார்கள்.
[பக்கம் 14-ன் வரைப்படம்/அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
1942-ற்குள் ஜப்பான் வென்ற நிலப் பகுதியின் பரப்பு
சீனா
மன்ச்சூரியா
கொரியா
ஜப்பான்
பர்மா
தாய்லாந்து
ஃபோர்மோசா
பிரெஞ்சு
இந்தோசீனா
பிலிப்பைன்ஸ்
மலேயா
சுமத்திரா
போர்னியோ
ஜாவா
நெதர்லாந்து
நியு கின்னி
ஆஸ்திரேலியா
அட்டு
அகாட்டு
கிஷ்கா
உவேக்
மார்ஷல் தீவுகள்
கில்பர்ட் தீவுகள்
வட-கிழக்கு நியு கின்னி
பசிப்பிக் மகா கடல்
[பக்கம் 19-ன் படங்கள்]
போரின் வேதனை துடிப்பில் தேசங்கள்