உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 7/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அண்டத்தைப் பற்றிய நாளது நிலை
  • ஆள் கடத்துதலில் அதிகரிப்பு
  • வைட்டமின்-ஏ எச்சரிக்கை
  • பூச்சி-எதிர்ப்பு மரம்
  • இருட்டிற்காக ஒரு வேண்டுகோள்
  • திசைமாறிய பெற்றோர்
  • குறை-கொழுப்புணவு எச்சரிக்கை
  • காதலும் சாக்லேட்டும்
  • ஸ்கைக்கு ஒரு பாலம்
  • “கம்ப்யூட்டர்-தொடர்பான” தொண்டைப்புண்
  • ‘கிட்நாப்பிங்’—கட்டுப்படுத்த முடியுமா?
    விழித்தெழு!—1999
  • ‘கிட்நாப்பிங்’—அடிப்படை காரணங்கள்
    விழித்தெழு!—1999
  • ‘கிட்நாப்பிங்’—பாரெல்லாம் வியாபாரம்
    விழித்தெழு!—1999
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 7/8 பக். 28-29

உலகை கவனித்தல்

அண்டத்தைப் பற்றிய நாளது நிலை

விண்வெளியைப் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் எண்ணற்ற கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்வதற்கு நவீன கண்டுபிடிப்புகள் காரணமாயுள்ளன என்று தி நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது. உதாரணமாக, ஹபிள் விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு விண்ணுக்குள் கூர்ந்து கவனிக்கும் வானவியல் ஆராய்ச்சியாளர்கள், கணக்கிடப்பட்டுள்ள 4,000 கோடியிலிருந்து 5,000 கோடி பால்வழி மண்டலங்கள் நம் அண்டத்தில் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இது முன்பு மதிப்பிடப்பட்டிருந்த 10,000 கோடி என்பதற்கு முரணாய் உள்ளது. அதாவது, 5,000,00,00,000 பால்வழி மண்டலங்கள்! இதை அறிவித்து, ஒருநாள் சென்ற பின்பு, அமெரிக்கன் அஸ்ட்ரனோமிக்கல் சொஸைட்டியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பால்வழி மண்டலங்களை ஒன்றுசேர்த்து வைத்திருக்கும் ஈர்ப்பு விசையை அளிக்கும், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத நிறையை, அடையாளம் கண்டுகொண்டிருந்ததாக மேலும் அறிக்கையிட்டனர். இது, அண்டத்தின் குறைந்தபட்சம் பாதியளவான “தவறும் பொருள்” ஆகும். இக் காணமுடியாத பொருளின் பேரளவு, தாழ் ஒளிர்வுடைய விண்மீன்கள் என்றழைக்கப்படும் கணக்கிலடங்காத எண்ணிக்கையான எரிந்துபோன நட்சத்திரங்களைக் கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதோடு, வியாழன் கிரகத்தைப் பற்றிய கோட்பாடுகள், கலலேயோ என்ற விண்வெளிக் கப்பலிலிருந்து வரும் செய்திக் குறிப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. “செய்திக் குறிப்புகள் முதலாவதாக வருகையில் எப்போதும் தாழ்மை உணர்வடையச் செய்கிறது. அச் செய்திக் குறிப்புகளின்படியான முடிவுகள் பொதுவாக எங்களது கோட்பாடுகளுடன் ஒத்துப்போவதில்லை” என்று தலைமை திட்ட விஞ்ஞானி டாக்டர் டோரன்ஸ் ஜான்ஸன் கூறினார்.

ஆள் கடத்துதலில் அதிகரிப்பு

சமீப ஆண்டொன்றில், பிரேஸிலைச் சேர்ந்த ரியோடி ஜனீரோவிலுள்ள குற்றவாளிகள், பரவிவரும் ஆள் கடத்தும் தொழிலில் இருந்து மட்டும் 120 கோடி டாலர் (ஐ.மா.) பெற்றனர், இது, அந்நகரில் திட்டமிடப்பட்ட குற்றச்செயலுக்குக் கிடைக்கும் முக்கிய வருமான மூலமாக ஆள்கடத்துதலை ஆக்குகிறது என்பதாக ஜோர்னல் டா டார்டி அறிக்கை செய்கிறது. ஆள் கடத்துதல் அதிக நெளிவுசுளிவுள்ளதாய் ஆகிவிட்டது. “மின்னல்,” அல்லது குறுகிய-காலளவு, “மீட்புப் பணத்தை பொதுவாக தவணைமுறையில் செலுத்தும்” நடுத்தர வகுப்பு பலியாட்கள் கடத்துதல்கள், சிக்கலான, நன்கு திட்டமிடப்பட்ட செல்வந்தர் கடத்துதல்கள். பிற நாடுகளில் ஆள் கடத்துதல்கள் அதிகரித்தும் வருகின்றன. மற்ற காரியங்களோடுகூட, குறிப்பாக இருட்டிய பிறகு தனியே பயணம் செய்யாதீர்கள். நீங்கள் எங்கிருப்பீர்கள் என்பதை ஒரு நம்பத்தகுந்த நபரிடம் எப்போதும் கூறுங்கள். நல்ல வெளிச்சமுடைய மற்றும் பாதுகாப்பான இடங்களில் உங்கள் காரை நிறுத்துங்கள். பிள்ளைகளை ஒருபோதும் கண்காணிப்பின்றி விடாதீர்கள் போன்ற காரியங்களையும் பிலிப்பீன் நிபுணர்கள் சிபாரிசு செய்கின்றனர் என்று ஏசியாவீக் பத்திரிகை கூறுகிறது.

வைட்டமின்-ஏ எச்சரிக்கை

தி நியூ இங்லேண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின்-ல் வெளியிடப்பட்டிருந்தபடி, 22,000 கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய ஆய்வு ஒன்றில், அளவுக்கு மிஞ்சிய வைட்டமின்-ஏ சத்தை தாய்மை நிலையிலுள்ளவர்கள் உண்ணாதிருக்க கவனமாய் இருக்க வேண்டும். மனிதக் கருவுயிரின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் ஓரளவு வைட்டமின்-ஏ சத்து அத்தியாவசியமாக இருந்தாலும், மிஞ்சிய அளவு சேதத்தை ஏற்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்காக சிபாரிசு செய்யப்படும் வைட்டமின்-ஏ-யின் அனுதின அளவு, 4,000 சர்வதேச அலகுகள் என்றும், ஆனால் ஒரு நாளைக்கு 10,000 அலகுகளுக்கும் அதிகமாக உண்ணும் பெண்கள் “அவ்விதம் அளவுக்கு மிஞ்சி உண்ணாத பெண்களைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகமாக பிறவிக் கோளாறுள்ள ஒரு குழந்தையைப் பிறப்பிக்கும் அபாயத்தில் உள்ளனர்” என்றும் டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி டயட் & நியூட்ரிஷன் லெட்டர் கூறுகிறது. உடல் வைட்டமின்-ஏ-வைச் சேமிப்பதால், கர்ப்பமாவதற்கு முன்பு அவ் வைட்டமினை அதிகளவு உண்ணுவதும்கூட குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாய் இருக்கலாம். உடலில் வைட்டமின்-ஏ-யாக ஓரளவு மாற்றப்படும் பீட்டா-கேரட்டின் என்ற ஒரு தாவரப்பொருள் ஆபத்தானதாகக் காணப்படவில்லை.

பூச்சி-எதிர்ப்பு மரம்

ஜப்பானைச் சேர்ந்த நாராவிலுள்ள, மரத்தால் செய்யப்பட்ட ஒரு கோபுரம், கொறிவிலங்குகள், கறையான்கள், அல்லது நுண்ணுயிரிகள் ஆகியவற்றால் சேதமடைவதிலிருந்து 1,200 ஆண்டுகள் தப்பித்துள்ளது என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. கொரியாவிலுள்ள சியோல் நேஷனல் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகளும், ஜப்பானிய விஞ்ஞானிகள் இருவரும் அக்கோபுரத்தில் பூச்சிகளுக்கு விருப்பமில்லாமல்போகும்படி செய்வது எது என்பதைக் கற்றறியும் நோக்கோடு துவங்கினர். பண்டைய கட்டடத்தைக் கட்ட பயன்படுத்திய சைப்ரஸ் மரத்தின் வகையை அவர்கள் பரிசோதித்தபோது, கொறிவிலங்குகளுக்கு மிகவும் வெறுப்பூட்டும் தன்மையுடைய குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் அதில் இருந்ததால், அவற்றால் பூசப்பட்ட எதையும் அவை அரிக்கவில்லை என்று கண்டறிந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த சைப்ரஸ் மரத்திலிருந்து சுமார் 4,000 டன் மரத்தூளை ஜப்பானிய மரத் தொழிற்சாலை உற்பத்தி செய்வதாகவும், இந்த மரத்தூளிலிருந்து தயாரிக்கப்படும் கூட்டுப்பொருள்கள் பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் நச்சுப்பொருட்களைப் பதிலீடு செய்யலாம் என்றும் நம்பப்படுகிறது.

இருட்டிற்காக ஒரு வேண்டுகோள்

பிரான்ஸிலுள்ள வானவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிகளவு இருட்டிற்காகத் திடத்தீர்மானத்துடன் முயற்சி செய்து வருகின்றனர். நகர்ப்புறப் பகுதிகளில் தேவையற்ற ஒளி மிகுந்திருப்பது, நட்சத்திரம் நிறைந்த வானத்தின் ஒரு தெளிந்த காட்சியைக் காண முடியாததாக்குகிறது. ஒளியைக் கீழ்நோக்கித் திருப்பும் உட்குழிவுள்ள வில்லைகளைத் (reflectors) தெரு விளக்குகளில் அமைக்கும்படியும், விளம்பர மற்றும் அலுவலகக் கட்டட விளக்குகளையும், லேசர்-விளக்குக் காட்சிகளையும் இரவு 11 மணிக்கு அணைத்துவிடும் ஏற்பாட்டைச் செய்யும்படியும் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் நகர அதிகாரிகளைத் துரிதப்படுத்துகின்றனர் என்று லெ பவான் என்ற பத்திரிகை கூறுகிறது. “பால் வழியைக் கண்டிருப்பதாக நூற்றில் ஒரு பிள்ளைகூட இன்று கூறமுடியாது. ஆனாலும் மிக அழகான, அதே சமயத்தில் இலவசமாகக் காணப்படக்கூடிய இக் காட்சி, அண்டத்தில் நம் மெய்யான இடத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது,” என்று சென்ட்டர் ஃபார் தி புரொட்டெக்ஷன் ஆஃப் தி நைட் ஸ்கை-யின் தலைவர் மிஷல் போனவிட்டகோலா வாதிட்டார்.

திசைமாறிய பெற்றோர்

தங்கள் பிள்ளைகளுக்குக் கல்விபுகட்டுவது பற்றியதில், பெற்றோரில் பெரும்பான்மையோர், “வெற்றி” மற்றும் “சுதந்திரம்” முன்னுரிமை அளிக்கப்படுபவை என்பதாகக் கூறுவதோடு, தங்களுக்கென்று ஒழுக்கநெறி சார்ந்த மதிப்பீடுகளைத் தெரிவு செய்வது பிள்ளைகளைப் பொறுத்தது என்றும் உணருகின்றனர் என்பதாக லெக்ஸ்பிரஸ் என்ற பிரெஞ்சுப் பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வு தெரிவிக்கிறது. முறையான ஒழுக்கநெறி சார்ந்த மதிப்பீடுகளைக் கற்பிப்பது கல்விபுகட்டுவதன் குறிக்கோளா இல்லையா என்று கேட்டபோது, 6-க்கும் 12-க்கும் இடைப்பட்ட வயதையுடைய பிள்ளைகளின் பெற்றோரில் 70 சதவீதத்தினர் இல்லையென்பதாக பதிலுரைத்தனர். பிள்ளைகள் எதிர்காலத்தைச் சந்திக்கத் தயார்நிலையில் இல்லை என்று எண்ணும் அதே சமயத்தில், சமுதாயத்தின் ஓர் ஆஸ்தியாக நிரூபிப்பர் என்று, பேட்டிகாணப்பட்ட பெற்றோர் மற்றும் ஆசிரியரில் அறுபது சதவீதத்தினர் முரணாகவும் நம்புகின்றனர். “இன்றைய பெற்றோர் தங்கள் பங்கையோ பொறுப்புகளையோ அறிந்திருப்பவர்களாய் இனிமேலும் இல்லை” என்று சிலர் அச்சமடைவதை அந்தச் சுற்றாய்வு உறுதிப்படுத்துவதாக லெக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.

குறை-கொழுப்புணவு எச்சரிக்கை

நுகர்வோர், பல்வகைப்பட்ட குறை-கொழுப்புணவுப் பொருட்களின் சுவையை ருசிபார்ப்பது பற்றிய பரிசோதனைகள், குறை-கொழுப்புப் பொருட்களிலுள்ள கொழுப்பை மாற்றீடு செய்யப் பயன்படுத்தும் நிரப்பிகள், நிஜமான கொழுப்பைப் போல், அதே பாலேடுபோன்ற இழைநயத்தைப் பெற்றிருப்பதில்லை என்பதாகக் காட்டுகின்றன, மேலும் இது, சரியீடு செய்வதற்காக மக்கள் அதிகளவு உண்பதற்கு, அல்லது மேற்பகுதியையும் அதிகப்படியான சேர்மானத்தையும் கூட்டுவதற்கு வழிநடத்தலாம் என்று கனடாவின் குளோப் அண்ட் மெய்ல் பத்திரிகை கூறுகிறது. கொழுப்பை மாற்றீடு செய்யும்படி சேர்க்கப்பட்ட சர்க்கரை, உப்பு, செயற்கை சுவையூட்டிகள் போன்ற சேர்மானங்கள், ஊட்டமளிக்கும் வகையில் பயனுள்ளவையாய் எப்போதும் இருப்பதில்லை என்று யுனிவர்சிட்டி ஆஃப் டோரன்டோவில் ஊட்ட அறிவியல் மற்றும் உடலியங்கியல் பேராசிரியரான டாக்டர் டேவிட் ஜெங்க்கன்ஸ் கூறுகிறார். “குறை-கொழுப்புணவை உண்பது கொழுப்பைக் குறைக்கும் வழிகளில் ஒன்றென மக்கள் தீர்மானித்தால், அவ்வுணவுப்பொருள்கள் ஊட்டமளிக்கும் வகையில் ஆரோக்கியமுள்ளதாய் இருக்கும்வரை அது நல்லதுதான்” என்று டாக்டர் ஜெங்க்கன்ஸ் ஆலோசனையாகக் கூறுகிறார். காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள், அதேபோன்று குறை-கொழுப்பு பருப்பு வகைகள், சோயாப் பொருட்கள் ஆகியவையும் மாற்றீடு செய்யத் தகுந்த பொருட்களாய் உள்ளன என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.

காதலும் சாக்லேட்டும்

பல தேசங்களில், ஓர் ஆண் தன் காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பெண்ணுக்கு சாக்லேட்டுகளை அளிக்கலாம். அக்கறையூட்டும் வகையில், சாக்லேட்டைத் தின்பதனால் ஏற்படும் வேகப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளும், காதல்வசப்படும் உணர்ச்சியும் பொதுவான ஒன்றை—மூளையில் பினைல்எத்தில்அமைன் என்ற ஹார்மோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதை—கொண்டிருக்கலாம். ஓர் ஆஸ்திரேலிய ஆய்வாளரான பீட்டர் காட்ஃப்ரீ, “காதல் மூலக்கூறு” என்று அழைக்கப்பட்டிருப்பதன் அமைப்பைக் கண்டுபிடித்திருக்கிறார் என்று டோரன்டோ, கனடாவின் தி மெடிக்கல் போஸ்ட் கூறுகிறது. இப் புதிய தகவலின் உதவியுடன், மூளையில் உணர்ச்சிகள் எவ்வாறு தூண்டப்படுகின்றன என்பதைப் பற்றி அதிகம் கற்றறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலுமாக, அது “சாக்லேட் பிரியர்கள் ஏன் அவ்விதம் பிரியப்படுகின்றனர் என்பதை விளக்கலாம்” என்று போஸ்ட் பத்திரிகை கண்டறிந்தது.

ஸ்கைக்கு ஒரு பாலம்

அதன் வகைகளிலேயே மிகப் பெரிதான, 2.4 கிலோமீட்டர் நீளமுடைய ஒற்றைத்தாங்கு பாலம் ஸ்காட்லாந்தில் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டதாக லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது. இப் பாலம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்கை தீவையும் அதில் வசிக்கும் 9,000 பேரையும் ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரையுடன் இணைக்கிறது. அதன் திறப்புவிழாவைக் கொண்டாடும் வகையில், பேக்பைப் இசைக்கருவியின் இசைமேளமும், மிகச் சிறந்த கார்களின் ஊர்வலமும் முன்னே செல்ல, கடந்து செல்வோரின்—அன்றையதினம் கட்டணம் இன்றி கடந்து செல்லும்படி அழைக்கப்பட்ட அனைவரின்—ஊர்வலம் பின்னே சென்றது. கடந்த 23 ஆண்டுகளாக கார்களையும் பயணிகளையும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஏற்றிச் சென்றுவந்த தோணித்துறையின் சேவையை (ferry service) இப் பாலம் மாற்றீடு செய்கிறது. மோட்டார் வாகனம் ஓட்டுவோர் தங்கள் கார்களை விட்டுச்செல்லாமலேயே, ரோமிலிருந்து வடமேற்கு ஸ்கையிலுள்ள யூயிக்-குப் பயணம் செய்வது இப்போது சாத்தியமாகிவிட்டது என்று ஸ்காட்லாந்தின் அரசாங்க அதிகாரி குறிப்பிட்டுக் காட்டினதாக தி டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

“கம்ப்யூட்டர்-தொடர்பான” தொண்டைப்புண்

குரல் உணர்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் கைகளுக்கும் புஜங்களுக்கும் சுமையைக் குறைக்கத் தேடும் கம்ப்யூட்டர் இயக்குநர்கள், மிக வினைமையானதாய் சிலர் கருதும் ஒரு பிரச்சினையை—தீவிர சிதறல்குரல் மற்றும் முற்றிலுமான குரல் இழப்பை—எதிர்ப்படுகின்றனர் என்று கனடாவின் தி குளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. கம்ப்யூட்டருக்குப் புரியும் விதத்தில் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகவும், அதே தொனி மற்றும் ஸ்தாயியில் துல்லியமாகவும் பேசப்படவேண்டியிருப்பதால், அதைப் பயன்படுத்துபவர்கள் சாதாரணமாய் சுவாசிப்பதில்லை, மேலும் குரல் நாண்களும் அவற்றின் இழுப்பு விசையை இழந்துவிடும் நிலையில் இருக்கின்றன. குரல் நாண்கள் ஒன்றோடொன்று திரும்பத்திரும்ப உராய்கையில், வீக்கம் அல்லது புண்கள் தோன்றலாம், அல்லது நாண்கள்தானே சோர்வுற்றவையாகலாம் என்று யுனிவர்சிட்டி ஆஃப் டோரன்டோவைச் சேர்ந்த டாக்டர் சைமன் மக்ரேல் குளோப் செய்தியாளரிடம் கூறினார். குரல் நாண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, அத்தகைய கம்ப்யூட்டர்களிடம் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும், அடிக்கடி இடைவேளை கொண்டிருக்கவும், ஏராளமாக நீர் பருகவும், ஆல்கஹால், காபின், குரல் நாண்களை உலர்த்தக்கூடிய மருந்துவகைகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும் குரல் நிபுணர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்