பைபிள் உண்மையில் கடவுள் கொடுத்த ஓர் ஈவா?
“பைபிள், கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றையும் பார்க்கிலும் மிகச் சிறந்த ஈவென நான் நம்புகிறேன்.” இது, ஐக்கிய மாகாணங்களின் 16-வது ஜனாதிபதியான, ஆபிரகாம் லின்கன் கூறிய கூற்றாகும்.a இந்த மிகப் பழமையான புத்தகத்தை இவ்வாறு உயர்வாய் மதித்ததில் அவர் தனிமையாக இல்லை.
பத்தொன்பதாவது நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆட்சி வல்லுநர் உவில்லியம் E. க்ளாட்ஸ்டன் பின்ருமாறு கூறினார்: “பைபிள் ஒரு தனி மேன்மைக்குரிய தொடக்கத்தால் தனிச்சிறப்பாய் அமைந்திருக்கிறது, ஓர் அளவிடமுடியாத தூரம் அதை, போட்டியிடும் மற்ற எல்லாவற்றிலிருந்தும் பிரித்து வைக்கிறது.” இதைப்போன்றே, 18-வது நூற்றாண்டு அமெரிக்க அரசியல் மேதகை பாட்ரிக் ஹென்ரி பின்வருமாறு கூறினார்: “எக்காலத்திலும் அச்சடிக்கப்பட்ட மற்ற எல்லா புத்தகங்களின் மதிப்பையும் பைபிள் உடையது.” வேதவார்த்தைகளால் மனங்கவர்ந்து, ஃபிரெஞ்ச் பேரரசன் நெப்போலியன் போனபார்ட் பின்வருமாறு குறிப்பிட்டார்: “பைபிள் வெறும் புத்தகமல்ல, மாறாக ஓர் உயிருள்ள சிருஷ்டி, அதை எதிர்க்கும் எல்லாவற்றையும் வெல்லும் வல்லமையை உடையது.”
சிலருக்கு, பைபிள் உதவியும் ஆறுதலும் அளிக்கும் ஊற்றுமூலமாக இருந்திருக்கிறது. அமெரிக்க நாடுகளின் கூட்டமைவைச் சார்ந்த ஜெனரல் ராபர்ட் E. லீ என்பவர் கூறினதாவது: “என் எல்லா மனக்கலக்கங்களிலும் வேதனைகளிலும், எனக்கு ஒளியையும் பலத்தையும் கொடுக்க பைபிள் ஒருபோதும் தவறவில்லை.” இந்தப் புத்தகத்தின்பேரில் கொண்டிருந்த தன் மதித்துணர்வின் காரணமாக, ஐ.மா. ஜனாதிபதி ஜாண் குவின்ஸி ஆடம்ஸ் பின்வருமாறு கூறினார்: “பைபிளை ஆண்டுக்கு ஒருமுறை முழுமையாக வாசித்து முடிப்பதை நான் பல ஆண்டுகளாக ஒரு பழக்கமாக்கியிருக்கிறேன்.”
மகா உன்னதமானவர் மனிதவர்க்கத்துக்கு பைபிளைக் கொடுத்திருந்தால், அது கடவுளால் ஏவப்பட்டதென்பதற்கு அத்தாட்சி இருக்க வேண்டும். அது வேறு எந்தப் புத்தகத்தையும் விட மேம்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் பைபிள் பலத்துக்கும் போதனைக்கும் உண்மையான மூலகாரணமாயிருக்க, அது முற்றிலும் நம்பத்தக்கதாக இருக்க வேண்டும். அவ்வாறெனில், பைபிள் உண்மையில் கடவுள் கொடுத்த ஓர் ஈவா? என்ற கேள்வி இன்னும் இருக்கிறது. இந்தக் கேள்விக்குப் பதிலை அடுத்தப்படியாக நாம் தேடலாம்.
[அடிக்குறிப்புகள்]
a நிச்சயமாகவே, அதற்கும் மேலான பெரிய ஈவு—இயேசு கிறிஸ்து ஆவார்.—யோவான் 3:16.
[பக்கம் 3-ன் படங்கள்]
உவில்லியம் E. க்ளாட்ஸ்டன்
[படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo
ஆபிரகாம் லின்கன்
[படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo
பாட்ரிக் ஹென்ரி
[படத்திற்கான நன்றி]
Harper’s U.S. History
நெப்போலியன் போனபார்ட்▸
[படத்திற்கான நன்றி]
Drawn by E. Ronjat
ஜாண் குவின்ஸி ஆடம்ஸ்
ராபர்ட் E. லீ
[படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo