ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
கொலம்பியாவில் ஆவிக்குரிய விடுதலை
ஸ்பானிஷ் வெற்றிவீரர்கள் காலத்திலிருந்தே, கத்தோலிக்க மதம் தென் அமெரிக்காவில் மத ஆதிக்கத்தைப் பெற்றிருந்திருக்கிறது. கொலம்பியாவில் இது நீண்ட காலமாக அரசின் அதிகாரப்பூர்வமான மதமாக இருக்கிறது. கடந்த 105 ஆண்டுகளாக, வாடிகன் கொலம்பியா மக்களின் அரசாங்கத்தோடு திரு-உடன்படிக்கை செய்திருக்கிறது, இது சர்ச்சைப் பாதுகாத்து, கல்வி, திருமணம் போன்ற துறைகளில் அதற்கு விசேஷித்த சலுகைகளைத் தந்தது.
டிசம்பர் 1990-ல் கொலம்பியா மக்கள் ஒரு புதிய அரசியலமைப்பை உண்டாக்குவதற்காக ஒரு சிறப்புக்குழுவைத் தேர்ந்தெடுத்தனர், இது 1991-ன் மத்திப சமயத்தில் நடந்தேறியது. இந்தப் புதிய அரசியலமைப்பு கொலம்பியாவில் மதத்தின் நிலையை மாற்றுகிறது. சட்டத்திற்கு முன்பாக எல்லா மதங்களுக்கும் இப்பொழுது சமஉரிமை உண்டு, பொதுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதப் போதனைகள் கட்டாயப்படுத்தப்படக் கூடாது. இப்படிப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, வாடிகன் ஒப்பந்தம் மீண்டும் திருத்தியமைக்கப்படவேண்டிய சமயம் வந்துவிட்டது.
இந்த மேலான மத விடுதலை, கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கத்தைக் குறைத்து, உண்மை இருதயம் உள்ளோர் பைபிள் அறிவைப் பெற்று, ஆவிக்குரிய சுதந்திரத்தை அடைவதை எளிதாக்கும்.
இந்த ஆவிக்குரிய விடுதலையை எதிர்பார்த்திருந்தவர்களாக, இந்த நாட்டிலிருந்த 51,000 யெகோவாவின் சாட்சிகள், ஆவிக்குரிய அகதிகளைக் கவனித்துக்கொள்வதற்காக அநேக தயாரிப்புகளைச் செய்கிறார்கள். ஓர் அதி-வேக முழுவர்ண நவீன அச்சு இயந்திரத்தையுடைய அச்சாலையையும் உட்படுத்தும், விஸ்தரிக்கப்பட்ட வசதிகளோடு, இவர்களுடைய புதிய கிளை வளாகம் கட்டிமுடிக்கப்படப் போகிறது. தற்காலிக விசேஷித்த பயனியர்கள், யெகோவாவின் காணாமற்போன ஆடுகளைக் கண்டுபிடிப்பதற்காக சிறுநகரங்களுக்கெல்லாம் அனுப்பப்படுகிறார்கள், இவர்கள் வியப்படைய வைக்கும் பைபிள் சம்பந்தமான கல்வி புகட்டும் வேலையைச் சாதித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றிருக்கும் ஏறக்குறைய 10,000 குடிமக்களையுடைய 63 நகரங்களில், 47 புதிய சபைகளும், தொகுதிகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
யெகோவாவின் ஆவி, நேர்மை இருதயமுள்ள மக்களைத் தொடர்ந்து தூண்டுவதினால், பல இளைஞரும்கூட அக்கறைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற பிரசுரம், இளைஞர், அவர்களுடைய பெற்றோர் ஆகிய இரு தரப்பினருக்கும் விலைமதிக்க முடியாத ஓர் உறுதுணையாக நிரூபித்திருக்கிறது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளைப் படித்திருந்த ஒரு மனிதனைச் சந்தித்தார் ஒரு சாட்சி. இதைப் பக்கத்துவீட்டுக்காரர் இவருக்குக் கொடுத்திருந்தார். குடும்ப பிரச்னைகளைப் பற்றி இதில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையான புத்திமதி, இவரை மிகவும் கவர்ந்தது. அவரும் அவருடைய மனைவியும் பிரிந்துபோகப் போகும் ஒரு தருவாயில் இருந்ததால், அதிகாரம் 4, “அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?” என்பது, மிக முக்கியமாக இவரைக் கவர்ந்தது. இந்தப் புத்தகம் ஒரு பெரிய ஆபத்திலிருந்து இவரை பாதுகாத்ததாக இவர் சொன்னார். இப்போது இவரும் இவருடைய குடும்பமும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கிறார்கள், சபைக் கூட்டங்களுக்கெல்லாம் வருகிறார்கள். யெகோவா, பைபிள் மூலமும், அவருடைய அமைப்பின்மூலமும் கொடுக்கிற நடைமுறையான ஞானத்திற்காக, இவர்கள் மிக நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
யெகோவாவின் மகத்தான நோக்கங்களையும் இப்பொழுது மிக அருகில் இருக்கும் அவருடைய புதிய உலகத்தைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு, ஆவிக்குரிய வகையில் பசியாக இருப்பவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவிசெய்வதினால், கொலம்பியாவில் நடைபெற்றுவரும் ஆவிக்குரிய விடுதலையாகுதலை, இந்த அனுபவம் மிகத் தெளிவாக எடுத்துக்காண்பிக்கிறது.—2 பேதுரு 3:13.