சமீப எதிர்காலத்தில் வரப்போகும் சுத்தமான பூமியில் சந்தோஷப்படுங்கள்!
ஒழுங்கு மற்றும் சுத்தத்தின் கடவுளாகிய யெகோவா, பூமியை ஒரு முழு உலகப் பரதீஸாக மாற்றும் தம்முடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாக இருக்கலாம்! (ஏசாயா 11:6-9) அவர் வாக்குறுதி கொடுக்கிறார்: “என் வாயிலிருந்து புறப்படும் வசன[ம்] . . . வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” ‘தேவன் எவ்வளவேனும் பொய்யுரையாதவர்,’ எனவே இவை வெறும் பேச்சுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளல்ல.—ஏசாயா 55:11; எபிரெயர் 6:18.
சுற்றுப்புறச்சூழலியல் திரும்ப சரிசெய்ய முடியாதளவிற்கு மனிதர்கள் அதைக் கெடுப்பதற்கு முன்பாகவே, யெகோவா அன்போடு நடவடிக்கை எடுப்பார் என்பதை அறிவது நமக்குச் சோர்வகற்றுவதாக இருக்கிறதே!—வெளிப்படுத்துதல் 11:18.
மனந்திரும்பாமல், தெரிந்தும் வீம்புக்கென்றே தூய்மைக்கேடு செய்பவர்களையும், ஒழுங்கு மற்றும் சுத்தம் சம்பந்தமான தம்முடைய நியமங்களுக்குக் கீழ்ப்படிதல் காண்பிக்காமல் அதைப் புறக்கணிப்பவர்களையும், யெகோவா நீக்கிப்போடுவார். மறுபடியும் புதுப்பிக்கப்பட்ட பரதீஸை யாரும் கெடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.—நீதிமொழிகள் 2:20-22.
கடவுளுடைய ராஜ்யம் ஆட்சிசெய்யும்போது, கிறிஸ்து இயேசுவின் வழிநடத்துதலின்கீழ், மனிதர்கள் இயற்கை சம்பந்தமான தூய்மைக்கேட்டின் எஞ்சிய தடயங்கள் ஏதாவது இருந்தால் அதை எப்படி முற்றிலும் நீக்குவது என்று கற்றுக்கொடுக்கப்படுவார்கள். அப்பொழுது—இப்பொழுதல்ல—கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் தனிப்பட்ட மற்றும் மொத்தமான அளவுகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருப்பது தவிர்க்கமுடியாதக் காரியமாக இருக்கும். இது இதுவரை நிகழ்ந்திராதளவிற்கான உலகளாவிய சுத்தப்படுத்தும் வேலையில் விளைவடையும்.—எசேக்கியேல் 39:8-16-ஐ ஒப்பிடுங்கள்.
இன்றைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவிலிருந்து தப்பிப்பிழைப்பவர்கள், இன்று எப்படி ஆவிக்குரிய சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபடுகிறார்களோ அதேபோன்ற ஒப்புக்கொடுத்தலுணர்வோடும் உற்சாகத்தோடும் இந்த இயற்கை சார்ந்த சுத்தப்படுத்தும் திட்டப்பணிக்கும் ஆதரவு காட்டுவார்கள்.—சங்கீதம் 110:3.
கடவுளுடைய ராஜ்யத்தினால் நிறைவேற்றப்படும், இதுவரை எக்காலத்திலும் செய்யப்பட்டதைவிட மிகப்பெரிய சுத்தப்படுத்தும் வேலையின்மூலம் ஒரு சுத்தப்படுத்தப்பட்ட பூமி நிச்சயமாக வரும். தூய்மைக்கேட்டின் எல்லா தடயங்களும் நீக்கப்படும். சுவர் சித்திரங்கள் எங்கும் காணப்படப்போவதில்லை. களையப்பட்ட புட்டிகள், தகரக்குவளைகள் (கேன்கள்), குழைமப் (பிளாஸ்டிக்) பைகள், மெல்லு-மிட்டாய் மற்றும் சாக்லேட்டின் காகித உறைகள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் போன்றவை இனிமேலும் எந்தக் கடற்கரையையோ, பரதீஸைப்போன்ற இடத்தையோ அசிங்கப்படுத்தப்போவதில்லை.
சமீப எதிர்காலத்தில் வரப்போகும் சுத்தமான பூமியில் சந்தோஷப்படுங்கள்!
[பக்கம் 7-ன் படம்]
சீக்கிரத்தில் நடக்கப்போகும் முழு உலகச் சுத்தப்படுத்துதலில் நீங்கள் பங்குகொண்டிருப்பீர்களா?