கடவுளும் அரசாங்கமும் நீங்களும்
“ஐயர்லாந்தில் மணவிலக்கு பேரிலான பொது வாக்கெடுப்பில் சர்ச்சும் அரசாங்கமும் மோதிக்கொள்கின்றன.”
தி நியூ யார்க் டைம்ஸ்-ன் இந்தத் தலைப்புச்செய்தி, அரசாங்கம் என்ன விரும்புகிறது என்பதற்கும் அவர்களுடைய சர்ச் என்ன போதிக்கிறது என்பதற்கும் இடையில் இன்று மக்கள் தெரிவு செய்தலை எதிர்ப்படக்கூடும் என்பதை விளக்குகிறது.
கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “மணவிலக்கின் பேரில் அதனுடைய சட்டப்பூர்வமான தடையை ஒழித்துவிட வேண்டுமா என்பதன் பேரில் பொது வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு குறைவாகவே இருக்க, பெரும்பான்மையர் கத்தோலிக்கராக இருக்கும் ஐயர்லாந்து, அதன் அரசாங்கத் தலைவர்களுக்கும் அதன் சர்ச்சின் தலைவர்களுக்குமிடையே அபூர்வமான ஒரு மோதலை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறது.” மணவிலக்கின் பேரிலான தடையை நீக்க அரசாங்கம் தீர்மானம் கொண்டுவந்தது, கத்தோலிக்க சர்ச்சோ மணவிலக்கையும் மறுமணத்தையும் பலமாக எதிர்க்கிறது. ஐயர்லாந்து நாட்டு கத்தோலிக்கர், சர்ச்சுக்கும் அரசாங்கத்திற்குமிடையே தெரிவுசெய்ய வேண்டும். முடிவில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் அரசாங்கமே வெற்றி பெற்றது.
அதிக வியப்புக்கேதுவாக இருப்பது, அநேக ஆண்டுகளாக வட ஐயர்லாந்து மக்கள் தேசிய அரசதிகாரத்தைக் குறித்த கசப்பான போராட்டத்தை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே. அநேகர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ரோமன் கத்தோலிக்கரும் புராட்டஸ்டன்டினரும் எந்த அரசாங்கத்துக்கு கீழ்ப்பட்டிருப்பது என்பதன் பேரில் எதிரும் புதிருமான கருத்துக்களை உடையோராய் இருந்து வருகின்றனர்: வட ஐயர்லாந்தில் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியா அல்லது முழு ஐயர்லாந்துக்கும் மத்தியமயமாக்கப்பட்ட ஒரு அரசாங்கமா.
அதேவிதமாகவே, யுகோஸ்லாவியாவாக இருந்த நாட்டில், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் உட்பட, பல்வேறு விசுவாசங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிராந்தியத்துக்கான ஒரு போரில் சண்டையிடும்படியாக ஆளும் அதிகாரங்கள் தேவைப்படுத்தியிருக்கின்றன. சராசரி குடிமக்களுக்கு, அவர்களுடைய முதல் கடமை என்னவாக இருந்தது? அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைபாராட்டியவர்களைப் பின்பற்ற வேண்டியவர்களாக இருந்தார்களா அல்லது “கொலை செய்யாதிருப்பாயாக . . . உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,” என்று சொல்லும் கடவுளுக்குக் கீழ்ப்படியவேண்டியவர்களாக இருந்தார்களா?—ரோமர் 13:9.
இத்தகைய ஒரு நிலைமை உங்களை ஒருபோதும் பாதிக்காது என்பதாக நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால் பாதிக்கக்கூடும். உண்மையில், இப்பொழுதேகூட இது உங்களுக்கு அக்கறைக்குரியதாக இருக்கலாம். புதிய ஏற்பாட்டில் அரசாங்கம் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் இறையியலர் ஆஸ்கார் குல்மான், “சர்வாதிகார அரசாங்கங்களால் அச்சுறுத்தப்படும்போது நம்பிக்கையில்லாத நிலைமைகளில் நவீன நாளைய கிறிஸ்தவர்கள் செய்யவேண்டிய அல்லது செய்யும்படி கேட்கப்படக்கூடிய ஜீவனையோ மரணத்தையோ குறிக்கும் தீர்மானங்களைக்” குறித்து பேசுகிறார். இருப்பினும் அவர், “‘இயல்பான,’ ‘அன்றாட’ நிலைமைகள் என்றழைக்கப்படுகிறவற்றின்கீழ் வாழும் கிறிஸ்தவன் உட்பட, எல்லா கிறிஸ்தவனும், ஒருவன் கிறிஸ்தவனாக இருக்கிறான் என்ற காரணத்துக்காகவே அவனை எதிர்ப்படுகிற ஒரு வினைமையான பிரச்சினையை சமாளிக்கவும் விளைவை ஏற்றுக்கொள்ளவும் வேண்டிய அதேவித உண்மையான மற்றும் முக்கியமான பொறுப்பைப்” பற்றியும்கூட பேசுகிறார்.
ஆகவே மதத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயுள்ள உறவு இன்று கிறிஸ்தவர்களுக்கு அக்கறைக்குரியதாக இருக்கவேண்டுமா? நிச்சயமாகவே இருக்கவேண்டும். மிகப் பண்டைய காலங்களில் இருந்தே, கிறிஸ்தவர்கள் உலகப்பிரகாரமான அதிகாரங்களைப் பற்றியதில் சமநிலையான ஒரு நோக்கை வளர்த்துக்கொள்ள முயன்றுவந்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவராகிய இயேசு கிறிஸ்து ரோம அரசாங்கத்தால் நியாயந்தீர்க்கப்பட்டு கண்டனம்செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய சீஷர்கள் தங்கள் கிறிஸ்தவ கடமைகளை ரோம பேரரசினிடமாக அவர்களுக்கிருக்கும் பொறுப்புகளோடு ஒத்திசைவிக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே அதிகாரங்களோடு அவர்கள் வைத்திருந்த உறவைப் பற்றிய ஒரு மறுபார்வை இன்று கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டு குறிப்புகளை அளிக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Tom Haley/Sipa Press