முன்னேறுவதற்கு பைபிள் மாணாக்கரைஉற்சாகப்படுத்துங்கள்
1 முன்னேற்றம் என்பதை இந்த உலகம் பிரதானமாக தொழில்துறை விஞ்ஞானம் அல்லது பொருளாதாரம் என்பதன் அடிப்படையில் சிந்திக்கிறது. ஆனால் யெகோவாவின் ஜனங்களோ அப்படியில்லை. அதற்கு மாறாக, ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுவதற்காக நாம் பிரயாசப்படுகிறோம். கிறிஸ்துவின் சுறுசுறுப்பான கனிதரும் சீஷர்களாக ஆவதற்கு நம்மை வழிநடத்தின அந்த உற்சாகமூட்டுதலைப் பெற்றுக்கொண்டதற்காக நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்.—யோவான் 15:8; 2 பேதுரு 1:5-8.
2 சுவிசேஷத்தில் “சீஷன்” என்ற பதமானது கிறிஸ்துவின் போதனைகளை நம்புகிறவனுக்கு மாத்திரமல்ல, ஆனால் அவற்றை நெருக்கமாக கடைப்பிடிப்பவனுக்கும்கூட பிரதானமாக பொருத்தப்படுகிறது. (மத். 28:19, 20) பைபிள் மாணாக்கர்கள் அந்த உண்மையை மதித்துணருகிறார்களா? சீஷர்களாகும்படிக்கு அவர்கள் முன்னேற நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம்?
அமைப்பினிடமாக ஆர்வத்தை திருப்புங்கள்
3 ஒரு மாணாக்கனின் முன்னேற்றமானது யெகோவாவினுடைய அமைப்பிற்கு அவன் கொண்டிருக்கும் போற்றுதலுடன் நிச்சயமாகவே சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகையால் போதகர்களாக நமது உத்தரவாதத்தின் ஒரு பாகமானது மாணாக்கனின் அக்கறையை கடவுளுடைய அமைப்பினிடமாக திருப்புவதாகும். அமைப்பைக் குறித்து ஏதாவதொரு காரியத்தை விவரிப்பதில் ஒவ்வொரு பைபிள் படிப்பின்போதும் ஐந்து அல்லது பத்து நிமிடங்களை செலவிடும்படி பல ஆண்டு காலமாக நமக்கு உற்சாகமளிக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகமுழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் என்ற புரோஷுர் இதைச் செய்வதற்கான சிறந்த வரையரை திட்டத்தை அளிக்கிறது. உங்கள் பைபிள் மாணாக்கனிடம் இந்தப் பிரதி இருக்கிறதா? இல்லாவிடில் அவன் இப்பொழுதே அதைப் பெற்றுக்கொள்ளும்படிச் செய்யுங்கள். அதை வாசிக்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். ஒவ்வொரு படிப்பின்போதும் ஒரு சுருக்கமான பகுதியை மட்டுமே நீங்கள் அவனுடன் கலந்தாலோசிப்பீர்கள் என்பதை விளக்குங்கள்.
4 கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் புரோஷுர் பக்கம் 14, 15-ல் உள்ள தகவல் ஒவ்வொரு சபைக் கூட்டத்திற்கும் போற்றுதலை வளர்க்கும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஓரிரண்டு பாராக்களை மட்டும் ஏன் நீங்கள் கலந்தாராயக்கூடாது? ஒவ்வொரு கூட்டமும் ஒரு குறிப்பிட்ட தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எப்படி பயிற்சியையும் போதனைகளையும் கொடுக்கிறது என்பதை காட்டுங்கள். “சபை கூடிவருதல்” மூலமாகவே, ஆவிக்குரிய வளர்ச்சி ஏற்படுகிறது என்பதைக் காண மாணாக்கருக்கு உதவி செய்யுங்கள். (எபி. 10:24, 25) நம்மோடு ராஜ்ய மன்றத்தில் கூடிவருவதற்கு அவரை அனலாக உற்சாகப்படுத்துங்கள். யெகோவாவின் சபையினராக நாம் அனுபவித்து மகிழும் அன்பையும் ஐக்கியத்தையும் அவர் அங்கே தனிப்பட்ட விதமாய் அனுபவிப்பார்.—சங். 133:1; யோவான் 13:35.
ஆவிக்குரிய வளர்ச்சியை ஊக்குவியுங்கள்
5 புதியவர்கள் கடவுளுடைய வார்த்தையின் உண்மை மாணாக்கராக அதன் அறிவிலும், புரிந்துகொள்ளுதலிலும் நியமங்களை பொருத்திப் பிரயோகிப்பதிலும் முன்னேறுகிறவர்களாக ஆவது அவசியம். இந்தக் காரணத்தை முன்னிட்டு என்றும் வாழலாம், வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருத்தல் அல்லது உண்மையான சமாதானம் ஆகிய புத்தகங்களைப் படித்து முடிப்பதற்கு முன்பாக மாணாக்கன் முழுக்காட்டுதல் எடுத்தாலும்கூட நாம் அதில் தொடர்ந்து படிப்பு நடத்துவோம். இரண்டாவது புத்தகத்தைப் படிக்க ஆரம்பிப்பதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்றாலும் மாணாக்கன் இந்தப் புத்தகத்தின் பிரதிகளைப் படிப்பதற்காக வாங்கி வைத்துகொள்ளலாம். இது அவருடைய ஆவிக்குரிய பசியார்வத்தைத் தூண்டிவிடும். மேலும் அதிகம் வாசிக்கும்படி செய்து, அவருடைய முன்னேற்றத்தை விரைவுப்படுத்தக்கூடும். கூடுதலாக காவற்கோபுரம், விழித்தெழு! சந்தாக்களைக் கொண்டிருப்பதன் மதிப்பையும் ‘ஏற்ற காலத்திலே கொடுக்கப்படும் உணவை’ உட்கொள்வதில் பின் தங்கிவிடாமல் இருப்பதற்கு சங்கத்தின் மற்றப் பிரசுரங்களை வாங்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் சுட்டிக் காட்டலாம். (லூக். 12:42) இப்படிச் செய்பவர்கள் விசுவாசத்தில் வேர் கொண்டவர்களாகவும் கட்டப்பட்டவர்களாகவும் உறுதிப்பட்டவர்களாகவுமிருப்பார்கள்.—கொலோ. 2:7.
6 யெகோவாவுக்கு வருங்கால உடன் சாட்சிகளாக பைபிள் மாணாக்கர்கள் முதிர்ச்சியினிடமாக வளர வேண்டுமானால் நம்முடைய உதவி தேவைப்படுகிறது. (எபி. 5:14) முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக பொருத்தமான பாராட்டுதல்களைத் தெரிவிக்க வேண்டும். (பிலி. 3:16) தான் கற்றுக்கொள்ளும் காரியங்களை குடும்பத்தாருடனும் தனக்கு அறிமுகமானவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுகிறாரா? அவர் தகுதி பெறுவாரானால் அவர் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொண்டாரா? நற்செய்தியின் பிரஸ்தாபியாக ஆவதற்கு அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறாரா?
7 போதகர்களாக நம்முடைய பாகத்தை நாம் செய்வோமானால் யெகோவாவின் நிறைவான ஆசீர்வாதங்களை நாம் எதிர்நோக்கலாம். (2 கொரி. 9:6) பைபிள் மாணாக்கரின் சார்பாக செய்யப்படும் ஜெபத்தின் வல்லமையை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர்கள் எதைக் கற்றுக்கொள்ளுகிறார்களோ அதற்கு பிரதிபலிக்க அவர்களை வழிநடத்தும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (1 கொரி. 3:6, 7) சபையுடனே சுறுசுறுப்பாய் கூட்டுறவு கொண்டவர்களாய் ஆகும்படிக்கு அவர்கள் முடிவான தீர்மானம் செய்வார்களாக. மேலும் யெகோவாவின் பெயருக்கு மகிமையையும் புகழையும் கூட்டுவார்களாக.