புதிய விசேஷ அசெம்பிளி தின நிகழ்ச்சிநிரல்
1 எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் நம்முடைய படிப்பானது இயேசு கிறிஸ்துவுக்கான நம்முடைய போற்றுதலை அதிகரிக்கச் செய்திருக்கிறது. பொருத்தமாகவே, பிப்ரவரியில் தொடங்குகிற விசேஷ அசெம்பிளி தின நிகழ்ச்சிநிரல், “நம்முடைய பெரிய முன்மாதிரியானவரை நெருங்கப் பின்தொடருதல்” என்ற பொருளை விளக்கியுரைத்து, அவரைப் பின்பற்றுவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை அதிக முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவிசெய்யும்.
2 வயதையோ சத்தியத்திலிருந்த ஆண்டுகளையோ பொருத்தில்லாமல், அசெம்பிளிக்கு ஆஜராகிற அனைவரும் அதிகமாக கிறிஸ்துவைப்போன்று இருப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுவார்கள். நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதி விசேஷமாக இளைஞருக்கான அறிவுரையை முக்கியப்படுத்திக் காண்பிக்கும். கல்வி, பொழுதுபோக்கு, பொருளாசை ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட சவால்களை எதிர்ப்படுவதற்கு அது அவர்களைத் தயார்செய்யும். உலக செல்வாக்குகளை எவ்வாறு தடுத்துநிறுத்துவது என்பதையும் கிறிஸ்துவைப் பின்பற்றி ஒருவர் எவ்வாறு மாதிரியாயிருப்பது என்பதையும் சிறப்பித்துக் காட்டுகிற பேச்சுக்கள், அனுபவங்கள் மற்றும் நடிப்புகள் இருக்கும்.—1 பே. 2:21.
3 புதிதாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆட்கள் முழுக்காட்டப்படுவதன் மூலம் தாங்கள் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் என்பதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருப்பார்கள். இந்தப் பொருளின்பேரில் தூண்டுவிக்கும் வேதப்பூர்வமான கலந்தாலோசிப்பு முழுக்காட்டுதல் நிகழ்ச்சிக்கு முன்பிருக்கும். விசேஷ அசெம்பிளி தினத்தில் முழுக்காட்டப்பட விரும்புகிறவர்கள், முழுக்காட்டுதல்பெறும் மாணாக்கருக்காக வகுத்துரைக்கப்பட்ட கேள்விகளைக் கலந்தாலோசிக்கும்படி, நடத்தும் கண்காணி மூப்பர்களை ஏற்பாடுசெய்வதற்காகப் போதிய சமயத்திற்கு முன்பாகத் தங்களுடைய விருப்பத்தை அவரிடம் தெரியப்படுத்தவேண்டும்.
4 “நம்முடைய பெரிய முன்மாதிரியானவரைப் பின்பற்றுதல்—எதற்கு நாம் வழிநடத்தப்படுகிறோம்?” என்று தலைப்பிடப்பட்ட முக்கியப் பேச்சை வெளியிலிருந்துவரும் பேச்சாளர் அளிப்பார். உற்சாகமளிக்கும், விசுவாசத்தைப் பலப்படுத்தும் இந்த நிகழ்ச்சிநிரலுக்கு அக்கறையுள்ள எல்லா நபர்களையும் அழைப்பதற்கு நிச்சயமாயிருங்கள். நம்முடைய பெரிய முன்மாதிரியானவர், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதைவிட மிகப் பெரிய அல்லது அதிக பலனளிக்கிற போக்கெதுவும் இருக்கமுடியாது.—மத். 19:27-29.