உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/96 பக். 2
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • கடிதங்கள் எழுதுவது எப்படி
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • கடிதத் தொடர்பு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • மாதிரி கடிதம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 11/96 பக். 2

கேள்விப் பெட்டி

◼ வீட்டுக்கு வீடு ஊழியத்தில் வீட்டில் சந்திக்க முடியாமல் போனவர்களுக்குக் கடிதங்கள் எழுதும்போது நாம் எதை மனதில் வைத்திருக்கவேண்டும்?

மக்களுடைய வீடுகளுக்கு நாம் போகும்போது பல்வேறு காரணங்களுக்காக நாம் அவர்களைக் காண்பது அதிக கடினமாக இருக்கிறது. அவர்களைச் சென்றடைய கடிதம் எழுதுவதை நடைமுறையான ஒரு வழியாக சில பிரஸ்தாபிகள் கண்டிருக்கின்றனர். இது சில நல்ல விளைவுகளைக் கொண்டுவரலாம், இருப்பினும் சில கஷ்டங்களை தவிர்ப்பதற்கு நமக்கு உதவும் சில நினைப்பூட்டுதல்களை நாம் சிந்திக்கவேண்டிய தேவை இருக்கிறது:

சங்கத்தின் விலாசத்தை அனுப்புநர் விலாசமாக பயன்படுத்தாதீர்கள். இது அந்தக் கடிதம் நம்முடைய அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது என்று தவறாக சுட்டிக்காட்டும். இது அவசியமில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு சில சமயங்களில் கூடுதலான செலவையும் வைக்கிறது.

வீட்டுக்காரரின் சரியான விலாசத்திற்குத்தான் எழுதுகிறீர்களா, போதுமான ஸ்டாம்புகள் ஒட்டி அனுப்புகிறீர்களா என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

முகவரியில் “குடியிருப்போர்” என்று எழுதாமல், குறிப்பிட்ட பெயரை உபயோகிக்கவும்.

வீட்டில் ஆள் இல்லை என்று தெரிந்தால் கடிதத்தை விட்டுவிட்டு வராதீர்கள்.

சுருக்கமான கடிதங்கள் மிகச் சிறந்தவை. வளவளவென்று எழுத முயற்சிப்பதற்கு பதிலாக துண்டுப்பிரதி ஒன்றையோ அல்லது பழைய பத்திரிகை ஒன்றையோ உள்ளே வைத்து அனுப்புங்கள்.

டைப் அடிக்கப்பட்ட கடிதங்கள் வாசிப்பதற்கு வெகு சுலபமாக இருப்பதோடு சாதகமான ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.

அந்த தனிநபரோடு முன்பே நேரில் சாட்சிகொடுத்திருந்தாலொழிய கடிதங்களை மறுசந்திப்புகளாக கணக்கில் எடுக்கக்கூடாது.

முன்பு ஆர்வம் காட்டிய ஒரு நபருக்கு எழுதுகிறீர்களென்றால், அவர் உங்களோடு தொடர்புகொள்ள ஏதுவாக இருக்க ஒரு விலாசத்தையோ அல்லது தொலைபேசி எண்ணையோ கொடுக்கவேண்டும். நம்முடைய பைபிள் படிப்பு திட்டத்தை விளக்குங்கள்.

உள்ளூர் சபைக் கூட்டங்களுக்கு வரும்படி அழையுங்கள். கூட்டம் நடக்கும் இடத்தையும் நேரங்களையும் தெரியப்படுத்துங்கள்.

அந்தப் பிராந்தியத்தை வேலைசெய்து முடித்தபின், வீட்டில் சந்திக்கமுடியாமல் போனவர்களுக்கு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்காதீர்கள்; அது தற்போது எந்தப் பிரஸ்தாபிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவரே அதில் வேலைசெய்ய பொறுப்புள்ளவராக இருக்கிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்