உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இல்லாவிட்டால், உனக்கும்* உன் ஊழியர்களுக்கும் உன் ஜனங்களுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன். அப்போது, இந்த முழு பூமியிலும் என்னைப் போல் யாருமில்லை என்பதை நீ தெரிந்துகொள்வாய்.+

  • யாத்திராகமம் 15:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+

      பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்?

      நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+

      பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.

  • சங்கீதம் 83:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான்,

      இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+

  • சங்கீதம் 86:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவாவே, கடவுள்களில் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை.+

      உங்களுடைய செயல்களுக்கு ஈடிணையே இல்லை.+

  • ஏசாயா 46:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 பழங்காலத்திலிருந்து நடந்த விஷயங்களை நினைத்துப் பாருங்கள்.

      நானே கடவுள், என்னைத் தவிர வேறு யாரும் இல்லை.

      நானே கடவுள், என்னைப் போல யாருமே இல்லை.+

  • எரேமியா 10:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 யெகோவாவே, உங்களைப் போல யாருமே இல்லை.+

      நீங்கள் மகத்தானவர்; உங்கள் பெயர் மகத்தானது, மிகுந்த வல்லமை உள்ளது.

       7 தேசங்களுக்கெல்லாம் ராஜாவே,+ யார்தான் உங்களுக்குப் பயப்படாமல் இருக்க முடியும்? உங்களுக்குப் பயப்படுவதுதானே நியாயம்?

      உலகமெங்கும் உள்ள தேசங்களில் எத்தனை ஞானிகள் இருந்தாலும்

      உங்களைப் போல் யாருமே இல்லை.+

  • ரோமர் 9:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பார்வோனிடம் கடவுள், “உன் மூலம் என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்” என்று சொன்னதாக வேதவசனம் குறிப்பிடுகிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்