-
யாத்திராகமம் 34:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் பிள்ளைகளும் சரி, உங்கள் ஆடுமாடுகள் போடுகிற முதல் ஆண்குட்டிகளும் கன்றுகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ 20 கழுதையின் முதல் குட்டியை, ஒரு ஆட்டைக் கொடுத்து நீங்கள் மீட்க வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறிக்க வேண்டும். உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளையும் நீங்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்.+ யாருமே என் முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது.
-
-
லூக்கா 2:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 மோசேயின் திருச்சட்டப்படி அவர்கள் தூய்மைச் சடங்கு செய்வதற்கான சமயம் வந்தபோது,+ அந்தக் குழந்தையை யெகோவாவின்* சன்னிதியில் காட்டுவதற்காக அதை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள். 23 ஏனென்றால், “மூத்த மகன் ஒவ்வொருவனும் யெகோவாவுக்கு* அர்ப்பணிக்கப்பட்டவனாக* இருக்க வேண்டும்” என்று யெகோவாவின்* திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+
-