-
யாத்திராகமம் 31:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 “இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் என் ஓய்வுநாளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.+ அது எனக்கும் உங்களுக்கும் இடையில் தலைமுறை தலைமுறையாய் ஒரு அடையாளமாக இருக்கும். யெகோவாவாகிய நான் உங்களைப் புனிதப்படுத்துகிறேன் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்வீர்கள். 14 நீங்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ ஏனென்றால் அது உங்களுக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளின் பரிசுத்தத்தைக் கெடுக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். அந்த நாளில் ஒருவன் எந்த வேலையாவது செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும்.+
-
-
உபாகமம் 5:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஓய்வுநாளைப் புனித நாளாக அனுசரியுங்கள்.+ 13 ஆறு நாட்களுக்கு உங்களுடைய எல்லா வேலைகளையும் செய்யுங்கள்.+ 14 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள்.+ அன்றைக்கு நீங்களோ, உங்களுடைய மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்களுடைய மாடோ கழுதையோ, வேறெதாவது வீட்டு விலங்கோ, உங்கள் நகரங்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ+ எந்த வேலையும் செய்யக் கூடாது.+ நீங்கள் ஓய்வெடுப்பதுபோல் உங்கள் அடிமையும் ஓய்வெடுக்க வேண்டும்.+
-