-
லேவியராகமம் 25:35, 36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 உங்களுக்குப் பக்கத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரன் ஏழையாகி வயிற்றுப்பிழைப்புக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டால், உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களைக் கவனித்துக்கொள்வது போல+ நீங்கள் அவனைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ அப்போது, உங்களோடு அவனும் பிழைப்பான். 36 அவனிடமிருந்து வட்டி வாங்கக் கூடாது, அவனை வைத்து லாபம் சம்பாதிக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ அப்போது, உங்களோடு உங்கள் சகோதரனும் பிழைப்பான்.
-
-
லூக்கா 6:34, 35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 அதோடு, திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால்,* உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது?+ பாவிகளும்கூட அப்படி எதிர்பார்த்துதான் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்கள். 35 உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், அவர்களுக்கு நல்லது செய்யுங்கள், எதையும் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.+ அப்போது, உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும், உன்னதமான கடவுளுடைய பிள்ளைகளாகவும் இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூட கருணை காட்டுகிறார்.+
-