உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 28:26-31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்துகிற நாளில்,+ அதாவது முதல் விளைச்சலைச் செலுத்துகிற அறுவடைப் பண்டிகை*+ நாளில்,+ பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ 27 இரண்டு இளம் காளைகள், ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாக நீங்கள் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 28 அதோடு, உணவுக் காணிக்கையாக எண்ணெய் கலந்த நைசான மாவைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு காளைக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவும், செம்மறியாட்டுக் கடாவுக்கு ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவும் கொண்டுவர வேண்டும். 29 அந்த ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 30 அவற்றுடன், உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு வெள்ளாட்டைக் கொண்டுவர வேண்டும்.+ 31 தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு சேர்த்துக் கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் தவிர, அவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். அவை குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ அவற்றோடு சேர்த்துத் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்’ என்று சொல்” என்றார்.

  • உபாகமம் 16:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 வருஷத்தில் மூன்று தடவை, அதாவது புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை,+ வாரங்களின் பண்டிகை,+ கூடாரப் பண்டிகை+ ஆகிய பண்டிகைகளின்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு ஆண்கள் எல்லாரும் அவர் முன்னால் வர வேண்டும். யாருமே யெகோவாவுக்கு முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்