உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 23:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இரண்டாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்த முதல் விளைச்சலை அறுத்து, அறுவடைப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ மூன்றாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்ததை வருஷக் கடைசியில் சேகரிக்கும்போது சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+

  • லேவியராகமம் 23:34-36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘இந்த ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து நீங்கள் யெகோவாவுக்காக ஏழு நாட்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ 35 அந்த முதலாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்று கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது. 36 ஏழு நாட்களும் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். எட்டாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அது ஒரு விசேஷ மாநாடு. அன்று நீங்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.

  • உபாகமம் 16:13-15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்கள் களத்துமேட்டிலிருந்து தானியங்களையும் செக்கிலிருந்து எண்ணெயையும் ஆலையிலிருந்து திராட்சமதுவையும் சேகரிக்கும்போது ஏழு நாட்களுக்கு நீங்கள் கூடாரப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ 14 அந்தப் பண்டிகையின்போது நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆண்களும், பெண்களும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும், மற்ற தேசத்து ஜனங்களும், அப்பா இல்லாத பிள்ளைகளும், விதவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 15 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில், ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், உங்கள் நிலத்தில் விளைகிற எல்லாவற்றையும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+ நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.+

  • நெகேமியா 8:14-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஏழாம் மாதப் பண்டிகையின்போது+ இஸ்ரவேலர்கள் கூடாரங்களில் தங்க வேண்டுமென்று மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்ததை அப்போது அவர்கள் தெரிந்துகொண்டார்கள். 15 அதோடு, எல்லா நகரங்களிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம், “திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே மலைப்பகுதிக்குப் போய் ஒலிவ மரக் கிளைகளையும், எண்ணெய் மர* கிளைகளையும், குழிநாவல் மரக் கிளைகளையும், பேரீச்ச ஓலைகளையும், மற்ற அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டுவந்து கூடாரங்களை அமையுங்கள்” என்று அறிவிப்பு செய்ய வேண்டுமென்ற+ விஷயத்தையும் தெரிந்துகொண்டார்கள்.

      16 அதன்படியே, ஜனங்கள் போய் அடர்ந்த மரக் கிளைகளைக் கொண்டுவந்து தங்கள் மொட்டைமாடிகளிலும், முற்றங்களிலும், உண்மைக் கடவுளுடைய ஆலயப் பிரகாரங்களிலும்,+ ‘தண்ணீர் நுழைவாசலின்’+ பக்கத்தில் இருந்த பொது சதுக்கத்திலும், ‘எப்பிராயீம் நுழைவாசலின்’+ பக்கத்தில் இருந்த பொது சதுக்கத்திலும் கூடாரங்களை அமைத்தார்கள். 17 இப்படி, எருசலேமுக்குத் திரும்பி வந்த சபையார் எல்லாரும் கூடாரங்களை அமைத்து அதில் தங்கினார்கள். நூனின் மகனான யோசுவாவின்+ நாளிலிருந்து அந்த நாள்வரை இஸ்ரவேலர்கள் அவ்வளவு சிறப்பாக அந்தப் பண்டிகையைக் கொண்டாடியதே இல்லை. சந்தோஷத்தில் தேசமே களைகட்டியது.+ 18 முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை, உண்மைக் கடவுளின் திருச்சட்ட புத்தகம் தினமும் வாசிக்கப்பட்டது.+ ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது. எட்டாம் நாளில், திருச்சட்டத்தின்படியே ஒரு விசேஷ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்