உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 4:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, பரிசுத்த இடத்துக்கான எல்லா பொருள்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் போர்த்திவைக்க வேண்டும்.+ அதன்பின், கோகாத்தியர்கள் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.+ ஆனால், பரிசுத்த இடத்துக்கான பொருள்களை அவர்கள் தொடக் கூடாது. அப்படித் தொட்டால் அவர்கள் செத்துப்போவார்கள்.+ இவைதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கோகாத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள்களாகும்.

  • எண்ணாகமம் 4:24-26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 கெர்சோன் வம்சத்தாரின் பொறுப்பிலுள்ள பொருள்களும் அவர்கள் சுமக்க வேண்டிய பொருள்களும் இவைதான்:+ 25 சட்டங்களின் மேலுள்ள நாரிழை விரிப்பு,*+ அதற்கு மேலுள்ள கம்பளி,* அதற்கும் மேலுள்ள விரிப்பு, அதற்கும் மேலுள்ள கடல்நாய்த் தோல் விரிப்பு,+ சந்திப்புக் கூடார வாசலின் திரை,+ 26 வழிபாட்டுக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள பிரகாரத்தின் மறைப்புகள்,+ பிரகார நுழைவாசலின் திரை,+ கூடாரக் கயிறுகள், வழிபாட்டுக் கூடாரச் சேவைக்குப் பயன்படுத்தப்படுகிற பாத்திரங்கள் மற்றும் வேறு சில பொருள்கள். இவைதான் அவர்களுடைய பொறுப்பில் இருக்கின்றன.

  • எண்ணாகமம் 4:31-33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 மெராரியர்கள் சுமக்க வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவைதான்:+ வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ கம்புகள்,+ தூண்கள்,+ பாதங்கள்,+ 32 பிரகாரத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள்,+ அவற்றின் பாதங்கள்,+ கூடார ஆணிகள்,+ கூடாரக் கயிறுகள், மற்றும் வேறு சில கருவிகள். அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். யார் யார் எதை எதைச் சுமந்துகொண்டு போக வேண்டுமென்று நீங்கள் சொல்ல வேண்டும். 33 இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக மெராரியர்கள்+ செய்ய வேண்டிய வேலை. குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்