-
உபாகமம் 19:16-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ஒருவன் கெட்ட எண்ணத்தோடு இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லி அவன்மேல் குற்றம்சாட்டினால்,+ 17 அந்த இரண்டு பேரும் யெகோவாவுக்கு முன்னால், அதாவது அந்தச் சமயத்தில் குருமார்களாகவும் நியாயாதிபதிகளாகவும் இருப்பவர்களுக்கு முன்னால், வர வேண்டும்.+ 18 அவர்களை நியாயாதிபதிகள் நன்றாக விசாரிக்க வேண்டும்.+ குற்றம்சாட்டியவன் தன்னுடைய சகோதரனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லியிருக்கிறான் என்றும், அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டியிருக்கிறான் என்றும் தெரியவந்தால், 19 அவன் தன்னுடைய சகோதரனுக்குச் செய்ய நினைத்த கெடுதலையே நீங்கள் அவனுக்குச் செய்ய வேண்டும்.+ இப்படி, உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+
-
-
நீதிமொழிகள் 6:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.
சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார்.
-