உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 49:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+

  • எண்ணாகமம் 24:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் இப்போது அல்ல.

      நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் சீக்கிரத்தில் அல்ல.

      யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம்+ உதிக்கும்.

      இஸ்ரவேலிடமிருந்து+ ஒரு செங்கோல்+ எழும்பும்.

      மோவாபின் நெற்றிப்பொட்டில் அவர் கண்டிப்பாகத் தாக்குவார்.+

      வெறிபிடித்த ஜனங்களின் மண்டையோட்டை நிச்சயமாக உடைப்பார்.

  • லூக்கா 7:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அங்கிருந்த எல்லாரும் பயந்துபோனார்கள்; “பெரிய தீர்க்கதரிசி ஒருவர் நம் மத்தியில் தோன்றியிருக்கிறார்”+ என்றும், “கடவுள் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்”+ என்றும் சொல்லி கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள்.

  • யோவான் 1:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 இவர் நாத்தான்வேலைச்+ சந்தித்து, “தீர்க்கதரிசிகளும், திருச்சட்டத்தில் மோசேயும் யாரைப் பற்றி எழுதினார்களோ அவரை நாங்கள் கண்டுகொண்டோம். யோசேப்பின்+ மகனும் நாசரேத்தைச் சேர்ந்தவருமான இயேசுதான் அவர்” என்று சொன்னார்.

  • யோவான் 6:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அவர் செய்த அடையாளங்களை மக்கள் பார்த்தபோது, “இந்த உலகத்துக்கு வர வேண்டிய தீர்க்கதரிசி நிச்சயமாகவே இவர்தான்”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

  • அப்போஸ்தலர் 3:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 சொல்லப்போனால், ‘உங்கள் கடவுளாகிய யெகோவா* உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார்.+ அந்தத் தீர்க்கதரிசி சொல்கிற எல்லாவற்றையும் நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+

  • அப்போஸ்தலர் 7:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 ‘கடவுள் உங்களுடைய சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார்’+ என்று இஸ்ரவேல் மக்களிடம் சொன்னவரும் அதே மோசேதான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்