22 அவர்கள் நெகேபுக்குப் போய் எப்ரோன் நகரத்துக்கு+ வந்துசேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கியர்களான+ அகீமானும் சேசாயும் தல்மாயும்+ வாழ்ந்துவந்தார்கள். அந்த எப்ரோன் நகரம், எகிப்திலுள்ள சோவான் நகரம் கட்டப்படுவதற்கு ஏழு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
14 அதனால்தான், கெனிசியனாகிய எப்புன்னேயின் மகன் காலேபுக்கு எப்ரோன் சொந்தமானது. இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு அவர் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால்,+ அதுவே இன்றுவரை அவருடைய சொத்தாக இருக்கிறது.
7 அவர் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள். நப்தலி மலைப்பகுதியில் உள்ள கலிலேயாவைச் சேர்ந்த கேதேஸ்,+ எப்பிராயீம் மலைப்பகுதியில் உள்ள சீகேம்,+ யூதா மலைப்பகுதியில் உள்ள கீரியாத்-அர்பா,+ அதாவது எப்ரோன், ஆகிய நகரங்களைத் தனியாக* பிரித்து வைத்தார்கள்.