உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 4:5-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பேரோத்தைச் சேர்ந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபும் பாணாவும் இஸ்போசேத்தின் வீட்டுக்கு உச்சிவெயில் நேரத்தில் போனார்கள். அந்த மதிய வேளையில் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். 6 ரேகாபும் அவனுடைய சகோதரன் பாணாவும்+ கோதுமை எடுக்க வந்தவர்கள்போல் வீட்டுக்குள் நுழைந்து, அவருடைய அடிவயிற்றில் வாளால் குத்திவிட்டு தப்பித்துப் போனார்கள். 7 அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, படுக்கையறையில் இருந்த கட்டிலில் அவர் படுத்திருந்தார். அவரைக் குத்திக் கொலை செய்துவிட்டு அவருடைய தலையை வெட்டினார்கள். அந்தத் தலையை எடுத்துக்கொண்டு அரபாவுக்குப் போகும் வழியாக ராத்திரி முழுவதும் நடந்தார்கள். 8 பின்பு, இஸ்போசேத்தின்+ தலையை எப்ரோனில் இருந்த தாவீது ராஜாவிடம் கொண்டுவந்து, “எஜமானே, இதோ, உங்களைக் கொல்லத் துடித்த+ உங்கள் எதிரியாகிய சவுலின்+ மகன் இஸ்போசேத்தின் தலை! ராஜாவாகிய உங்களுக்காக சவுலையும் அவருடைய வம்சத்தாரையும் யெகோவா இன்றைக்குப் பழிவாங்கியிருக்கிறார்” என்று சொன்னார்கள்.

  • 2 சாமுவேல் 4:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு அவர்களைக் கொல்லச் சொல்லி தன் வீரர்களிடம் கட்டளையிட்டார்.+ அந்த வீரர்கள் அவர்களைக் கொன்றுபோட்டார்கள். பின்பு, அவர்களுடைய கைகளையும் கால்களையும் வெட்டி, உடல்களை எப்ரோனிலுள்ள குளத்தின் அருகே தொங்கவிட்டார்கள்.+ ஆனால், இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனிலுள்ள அப்னேரின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்