-
2 சாமுவேல் 15:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 சாதோக்கும்கூட+ அங்கே இருந்தார். உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு+ லேவியர்கள்+ எல்லாரும் அவருடன் வந்திருந்தார்கள்; அவர்கள் உண்மைக் கடவுளின் பெட்டியைக் கீழே வைத்தார்கள். அபியத்தாரும்+ அங்கே வந்திருந்தார். அந்தச் சமயத்தில் தாவீதுடன் வந்தவர்கள் எல்லாரும் நகரத்திலிருந்து வெளியேறி பள்ளத்தாக்கைக் கடந்துவிட்டார்கள்.
-
-
1 நாளாகமம் 15:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 பின்பு, குருமார்களான சாதோக்கையும்+ அபியத்தாரையும்+ லேவியர்களான ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் ஆகியோரையும் தாவீது வரவழைத்தார். 12 அவர்களிடம், “நீங்கள்தான் லேவி வம்சத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள்; அதனால், நீங்களும் உங்களுடைய சகோதரர்களும் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, நான் தயார்செய்த இடத்துக்கு இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு வாருங்கள்.
-