உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 16:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 அதோடு, பூஜைக் கம்பத்தையும்*+ நிறுத்தினார். தனக்கு முன்பிருந்த இஸ்ரவேல் ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்து இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புண்படுத்தினார்.

  • 1 ராஜாக்கள் 21:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ‘என்னுடைய பூர்வீகச் சொத்தை உங்களிடம் விற்க மாட்டேன்’ என்று யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத் சொன்னதால், ஆகாப் தன்னுடைய முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு வீட்டுக்குச் சோகமாக வந்தார். தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டு, தன் கட்டிலில் படுத்துக்கொண்டார், சாப்பிடவும் மறுத்துவிட்டார்.

  • 1 ராஜாக்கள் 21:20-22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆகாப் எலியாவைப் பார்த்து, “எதிரியே,+ என்னைக் கண்டுபிடித்து இங்கேயும் வந்துவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு எலியா, “ஆமாம், கண்டுபிடித்துவிட்டேன். கடவுள் சொல்வது என்னவென்றால், ‘யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறாயே.+ 21 அதனால் உனக்கு முடிவுகட்டுவேன், உன் வம்சத்தை அடியோடு அழிப்பேன்; ஆகாபின் வீட்டிலிருக்கிற எல்லா ஆண்களையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, ஒழித்துக்கட்டுவேன்.+ 22 நீ என் கோபத்தைக் கிளறிவிட்டாய், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிவிட்டாய். அதனால், நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வம்சத்துக்கும்+ அகியாவின் மகன் பாஷாவின் வம்சத்துக்கும்+ ஏற்பட்ட அதே கதிதான் உன் வம்சத்துக்கும் ஏற்படும்.

  • 2 ராஜாக்கள் 10:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆகாபின்+ மகன்கள் 70 பேர் சமாரியாவில் இருந்தார்கள். அதனால் யெகூ கடிதங்கள் எழுதி, சமாரியாவுக்கும் யெஸ்ரயேலில் இருந்த அதிகாரிகளுக்கும் பெரியோர்களுக்கும்*+ ஆகாபின் மகன்களைக் கவனித்துக்கொண்டவர்களுக்கும்* அனுப்பி வைத்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்