8 அதோடு, நீ என் ஊழியன் தாவீதிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னைக்+ கூட்டிக்கொண்டு வந்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+
12 நீ இறந்து+ உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட* பின்பு, உன் சந்ததியை, உன் சொந்த மகனை, ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+
23 சாலொமோன் தன்னுடைய அப்பாவாகிய தாவீதுக்குப் பதிலாக யெகோவாவின் சிம்மாசனத்தில் ராஜாவாக உட்கார்ந்தார்.+ அவர் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள்.
1தாவீதின் மகன் சாலொமோனுடைய ஆட்சி மேலும் மேலும் உறுதியாக ஆனது. அவருடைய கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார், அவருக்கு அதிக பேரும் புகழும் கிடைக்கச் செய்தார்.+