33 இந்தத் திரைச்சீலையைக் கூடார விரிப்புகள் இணைக்கப்பட்ட கொக்கிகளுக்குக் கீழே மாட்ட வேண்டும். திரைச்சீலைக்கு உள்பக்கம் சாட்சிப் பெட்டியை+ வைக்க வேண்டும். இந்தத் திரைச்சீலை பரிசுத்த அறையையும்+ மகா பரிசுத்த அறையையும்+ பிரிக்கும்.
6 பின்பு, குருமார்கள் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்குரிய இடத்தில் வைத்தார்கள்,+ அதாவது ஆலயத்தின் உட்புறத்தில் இருந்த மகா பரிசுத்த அறையில் கேருபீன்களுடைய சிறகுகளின்கீழ் வைத்தார்கள்.+
24 அதனால்தான் கிறிஸ்து, நிஜத்தின் சாயலாகவும்+ கையால் செய்யப்பட்டதாகவும் இருக்கிற மகா பரிசுத்த அறைக்குள் போகாமல்,+ கடவுளுக்கு* முன்னால் இப்போது நமக்காகத் தோன்றும்படி+ பரலோகத்துக்குள் போயிருக்கிறார்.+