-
லேவியராகமம் 16:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அந்த வெள்ளாட்டின் மேல் தன் இரண்டு கைகளையும் வைத்து இஸ்ரவேலர்கள் செய்த எல்லா குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் ஒத்துக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் அந்த வெள்ளாட்டின் தலையில் சுமத்த வேண்டும்.+ பின்பு, அதை வனாந்தரத்தில் விடுவதற்கு நியமிக்கப்பட்டவரிடம் அதைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். 22 அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா குற்றங்களையும் சுமந்துகொண்டு+ வனாந்தரத்துக்குள் போகும்.+ நியமிக்கப்பட்டவர் அந்த வெள்ளாட்டை வனாந்தரத்துக்குள் போக விட்டுவிட வேண்டும்.+
-
-
எரேமியா 31:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 “அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சகோதரனிடமோ மற்றவர்களிடமோ, ‘யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!’+ என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.+ நான் அவர்களுடைய குற்றத்தை மன்னிப்பேன். அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
-