உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 49:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஏதோமைப் பற்றி பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

      “தேமானில்+ ஞானம் இல்லாமல் போய்விட்டதா?

      புத்திசாலிகளால்* நல்ல ஆலோசனை தர முடியவில்லையா?

      அவர்களுடைய புத்தி* கெட்டுப்போய்விட்டதா?

  • புலம்பல் 4:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 சீயோன் மகளே, உன்னுடைய தண்டனை முடிந்துவிட்டது.

      அவர் மறுபடியும் உன்னைச் சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்கு விடமாட்டார்.+

      ஆனால் ஏதோம் மகளே, அவர் உன்னுடைய அக்கிரமங்களைக் கணக்கெடுப்பார்.

      உன்னுடைய பாவங்களை அம்பலமாக்குவார்.+

  • எசேக்கியேல் 25:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏதோம் மிகப் பெரிய குற்றம் செய்திருக்கிறது. அது யூதா ஜனங்களைப் பழிவாங்கியிருக்கிறது.+

  • ஒபதியா 10-13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உன் சகோதரனான யாக்கோபுக்கு நீ கொடுமை செய்தாய்.+

      அதனால், நீ பெருத்த அவமானம் அடைவாய்.+

      அடியோடு அழிந்துபோவாய்.+

      11 அவனுடைய வீரர்களை அன்னியர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+

      எருசலேமுக்குள் மற்ற தேசத்து ஜனங்கள் புகுந்தார்கள், அதைப் பங்கிட குலுக்கல் போட்டார்கள்.+

      இதையெல்லாம் நீ பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்தாய்.

      எதிரிகளைப் போலவே நீயும் நடந்துகொண்டாய்.

      12 உன் சகோதரனுக்குக் கஷ்டம் வந்தபோது நீ ஏன் கைகொட்டிச் சிரித்தாய்?+

      யூதா ஜனங்களுக்கு அழிவு வந்தபோது நீ ஏன் சந்தோஷத்தில் துள்ளினாய்?+

      அவர்கள் வேதனையில் அவதிப்பட்டபோது நீ ஏன் அகம்பாவமாகப் பேசினாய்?

      13 அழிவு நாளில் என் ஜனங்களுடைய நகரவாசலுக்குள் ஏன் போனாய்?+

      அழிவு நாளில் அவர்கள் சின்னாபின்னமானதைப் பார்த்து ஏன் உள்ளுக்குள் சிரித்தாய்?

      அழிவு நாளில் அவர்களுடைய சொத்துகளை ஏன் சுருட்டிக்கொண்டாய்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்