உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 31:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 நீங்கள் எனக்கு மாபெரும் கற்பாறையாகவும் கோட்டையாகவும் இருக்கிறீர்கள்.+

      உங்கள் பெயருக்காக+ நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள், என்னை நடத்திச் செல்வீர்கள்.+

  • சங்கீதம் 79:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 எங்களை மீட்கும் கடவுளே,+

      உங்களுடைய மகிமையான பெயரை மனதில் வைத்து எங்களுக்கு உதவுங்கள்.

      உங்கள் பெயரை மனதில் வைத்து எங்களைக் காப்பாற்றுங்கள்,

      எங்கள் பாவங்களை மன்னியுங்கள்.+

  • சங்கீதம் 109:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஆனால், உன்னதப் பேரரசரான யெகோவாவே,

      உங்களுடைய பெயரை மனதில் வைத்து எனக்கு உதவி செய்யுங்கள்.+

      உங்களுடைய மாறாத அன்பு அருமையானது, அதனால் என்னைக் காப்பாற்றுங்கள்.+

  • சங்கீதம் 143:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களுடைய பெயரை மனதில் வைத்து என் உயிரைக் காப்பாற்றுங்கள்.

      உங்கள் நீதியின்படி என்னை வேதனையிலிருந்து காப்பாற்றுங்கள்.+

  • எசேக்கியேல் 36:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 “அதனால், இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் சிதறிப்போன தேசங்களில் என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுத்தீர்களே. அந்தப் பெயருக்காகத்தான் நடவடிக்கை எடுக்கிறேனே தவிர, உங்களுக்காக அல்ல.”’+

  • தானியேல் 9:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யெகோவாவே, கேளுங்கள். யெகோவாவே, எங்களை மன்னியுங்கள்.+ யெகோவாவே, எங்களைக் கண்ணோக்கிப் பார்த்து எங்களுக்கு உதவுங்கள். என் கடவுளே, உங்கள் நகரமும் உங்கள் ஜனங்களும் உங்களுடைய பெயரைத் தாங்கியிருப்பதால் அந்தப் பெயரின் மகிமைக்காக நீங்கள் தாமதிக்காமல் உதவி செய்யுங்கள்”+ என்றேன்.

  • மத்தேயு 6:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதனால், நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்:+

      ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர்+ பரிசுத்தப்பட வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்