உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 7:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 கானானியர்களும் இந்தத் தேசத்திலுள்ள மற்ற ஜனங்களும் இதைக் கேள்விப்படும்போது, எங்களைச் சுற்றிவளைப்பார்களே, எங்கள் பெயர் இந்த உலகத்திலேயே இல்லாதபடி செய்துவிடுவார்களே. அப்போது, உங்களுடைய மகத்தான பெயரைக் காப்பாற்ற என்ன செய்வீர்கள்?”+ என்று கதறினார்.

  • 1 சாமுவேல் 12:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவா உங்களைத் தன்னுடைய ஜனங்களாக விரும்பித் தேர்ந்தெடுத்திருப்பதால்+ உங்களைக் கைவிட மாட்டார். யெகோவா தன்னுடைய மகத்தான பெயரை மனதில் வைத்து,+ உங்களைக் கைவிடாமல் இருப்பார்.+

  • 2 நாளாகமம் 14:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அப்போது, ஆசா தன்னுடைய கடவுளான யெகோவாவிடம் மன்றாடினார்.+ “யெகோவாவே, நாங்கள் நிறைய பேரோ கொஞ்சப் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும்.+ அதனால் யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்,+ இந்தக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம்.+ யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய கடவுள். அற்ப மனிதன் உங்களை ஜெயிக்க விட்டுவிடாதீர்கள்”+ என்று கெஞ்சினார்.

  • சங்கீதம் 115:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 115 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,*

      உங்களுடைய பெயருக்கே மகிமை சேரும்படி செய்யுங்கள்.+

      ஏனென்றால், நீங்கள்தான் மாறாத அன்புள்ளவர், உண்மையுள்ளவர்.+

       2 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று

      மற்ற தேசத்து மக்கள் ஏன் கேட்க வேண்டும்?+

  • ஏசாயா 48:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 ஆனாலும், என் பெயரின் புகழுக்காக என்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்வேன்.+

      என்னுடைய மகிமைக்காக என்னையே கட்டுப்படுத்திக்கொள்வேன்.

      உங்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+

  • எரேமியா 14:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாவே, நாங்கள் குற்றவாளிகள் என்பதற்கு எங்கள் குற்றங்களே சாட்சி சொல்கின்றன.

      எத்தனையோ தடவை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறோம்.+

      உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.

      ஆனாலும், உங்களுடைய பெயரின் மகிமைக்காக இப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்