3 இஸ்ரவேலின் கடவுள் பேசினார்;
இஸ்ரவேலின் கற்பாறை+ என்னிடம் சொன்னார்:
‘மனிதர்கள்மீது ஆட்சி செய்கிறவன் நீதியாக நடந்தால்,+
கடவுளுக்குப் பயந்து ஆட்சி செய்தால்,+
4 அந்த ஆட்சி மேகம் இல்லாத வானில் பிரகாசிக்கிற
காலைநேர வெளிச்சம்போல் இருக்கும்,+
மழை ஓய்ந்த பின்பு, மண்ணிலிருந்து பசும்புல்லைத் துளிர்க்க வைக்கிற
சூரிய ஒளிபோல் இருக்கும்.’+