-
1 சாமுவேல் 8:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அவர் அவர்களிடம், “உங்களை ஆட்சி செய்யும் ராஜாவுக்கு உங்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கி ஆள உரிமை இருக்கிறது:+ அவனுடைய ரத வீரர்களாகவும்+ குதிரை வீரர்களாகவும்+ அவன் உங்கள் மகன்களை வைத்துக்கொள்வான்.+ அவனுடைய ரதங்களுக்கு முன்னால் சிலரை ஓட வைப்பான். 12 1,000 பேருக்குத் தலைவர்களையும்,+ 50 பேருக்குத் தலைவர்களையும்+ நியமித்து அவர்களிடம் வேலை வாங்குவான். நிலத்தை உழுவதற்கும்,+ அறுவடை செய்வதற்கும்,+ போர் ஆயுதங்கள் தயாரிப்பதற்கும், ரதங்களுக்குத்+ தேவையான கருவிகள் செய்வதற்கும் உங்களை வைத்துக்கொள்வான்.
-
-
1 ராஜாக்கள் 4:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 இஸ்ரவேல் முழுவதையும் கவனித்துக்கொள்ள 12 நிர்வாகிகளை சாலொமோன் நியமித்திருந்தார். ராஜாவுக்கும் அவருடைய அரண்மனையில் இருந்தவர்களுக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வருஷத்தில் ஒவ்வொரு மாதம் உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.+
-
-
2 நாளாகமம் 26:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 எருசலேமில் இருந்த ‘மூலை நுழைவாசல்,’+ ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்,’+ முட்டுச்சுவர் ஆகியவற்றின்மீது பலமான கோபுரங்களைக் கட்டினார்.+ 10 அதோடு, வனாந்தரத்தில் கோபுரங்களைக் கட்டினார்,+ நிறைய தண்ணீர்த் தொட்டிகளை அமைத்தார்;* (ஏனென்றால், அவரிடம் ஏராளமான கால்நடைகள் இருந்தன.) இதேபோல், சேப்பெல்லாவிலும் சமவெளியிலும்* செய்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம் இருந்தது. அதனால், மலைகளிலும் கர்மேல் பகுதியிலும் விவசாயிகளையும் திராட்சைத் தோட்டக்காரர்களையும் வேலைக்கு வைத்திருந்தார்.
-