உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிரசங்கி 3:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஏனென்றால், மனுஷர்களுக்கும் முடிவு வருகிறது, விலங்குகளுக்கும் முடிவு வருகிறது. எல்லா உயிர்களின் முடிவும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.+ விலங்குகள் சாவது போலத்தான் மனுஷர்களும் சாகிறார்கள். எல்லா உயிர்களுக்கும் உயிர்சக்தி ஒன்றுதான்.+ அதனால், விலங்குகளைவிட மனுஷன் உயர்ந்தவன் கிடையாது, எல்லாமே வீண்தான். 20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன.+ எல்லாம் மண்ணிலிருந்து வந்தன,+ எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.+

  • பிரசங்கி 9:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 நீதிமான்களோ பொல்லாதவர்களோ,+ நல்ல குணமும் பரிசுத்தமும் உள்ளவர்களோ பரிசுத்தம் இல்லாதவர்களோ, பலி செலுத்துகிறவர்களோ பலி செலுத்தாதவர்களோ, எல்லாருக்கும் ஒரே கதிதான்.+ நல்லவனுக்கும் சரி, பாவிக்கும் சரி, உறுதிமொழி கொடுக்கிறவனுக்கும் சரி, உறுதிமொழி கொடுக்க யோசிக்கிறவனுக்கும் சரி, ஒரே முடிவுதான். 3 சூரியனுக்குக் கீழே நடக்கிற இன்னொரு கொடுமை இதுதான்: எல்லாருக்கும் ஒரே கதி+ ஏற்படுவதால் மனுஷர்களுடைய இதயம் தீமையால் நிறைந்திருக்கிறது. உயிரோடிருக்கிற காலத்தில் அவர்களுடைய இதயத்தில் பைத்தியக்காரத்தனம் குடியிருக்கிறது. கடைசியில், அவர்கள் செத்துப்போகிறார்கள்.

  • பிரசங்கி 9:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 சூரியனுக்குக் கீழே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை,+ ஞானமுள்ளவர்களிடம் எல்லா சமயத்திலும் உணவு இருப்பதில்லை, புத்திசாலிகளிடம் எல்லா சமயத்திலும் சொத்து குவிந்திருப்பதில்லை,+ அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை.+ ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்