உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 51:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பின்படி எனக்குக் கருணை காட்டுங்கள்.+

      உங்களுடைய மகா இரக்கத்தின்படி என் குற்றங்களைத் துடைத்தழியுங்கள்.+

  • சங்கீதம் 103:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ,

      அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்.+

  • ஏசாயா 1:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்.+

      உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும்,

      பனிபோல் வெண்மையாகும்.+

      செக்கச்செவேல் என்று இருந்தாலும்,

      வெள்ளைவெளேர் என்று ஆகும்.

  • ஏசாயா 43:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நீ செய்த குற்றத்தையெல்லாம் துடைத்து அழிக்கிறவர் நான்தான்;+ என்னுடைய பெயருக்காகத்தான் இதைச் செய்கிறேன்.+

      நீ செய்த பாவத்தையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டிருக்க மாட்டேன்.+

  • எரேமியா 33:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 எனக்கு எதிராக அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களைத் தூய்மையாக்குவேன்.+

  • அப்போஸ்தலர் 3:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அதனால், மனம் திருந்தி,+ உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்;*+ அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்,+ யெகோவாவிடமிருந்து* புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்