உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்தர் 8:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ராஜாவின் ஆணையும் சட்டமும் போய்ச் சேர்ந்த எல்லா மாகாணங்களிலும் நகரங்களிலும் இருந்த யூதர்கள் சந்தோஷத்தோடும் குதூகலத்தோடும் விருந்துகளையும் கொண்டாட்டங்களையும் நடத்தினார்கள். அவர்களை நினைத்து மற்ற ஜனங்கள் மிகவும் பயந்தார்கள். அதனால், அவர்களில் நிறைய பேர் யூத மதத்துக்கு மாறினார்கள்.+

  • ஏசாயா 14:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 யாக்கோபுக்கு யெகோவா இரக்கம் காட்டுவார்.+ இஸ்ரவேலை மறுபடியும் தேர்ந்தெடுத்து+ அவர்களுடைய தேசத்திலே குடிவைப்பார்.*+ மற்ற தேசத்து ஜனங்கள் யாக்கோபின் வம்சத்தாரோடு சேர்ந்துகொள்வார்கள்.+ 2 பின்பு, அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் அவர்கள் தேசத்திலேயே விடுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை யெகோவாவின் தேசத்தில் வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொள்வார்கள்.+ தங்களைச் சிறைபிடித்தவர்களைச் சிறைபிடிப்பார்கள், தங்களை வேலை வாங்கியவர்களை வேலை வாங்குவார்கள்.

  • ஏசாயா 49:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ராஜாக்கள் உனக்குப் பணிவிடை செய்வார்கள்.+

      இளவரசிகள் உன்னைக் கவனித்துக்கொள்வார்கள்.

      அவர்கள் உனக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுவார்கள்.+

      உனக்கு அடங்கி நடப்பார்கள்.*+

      அப்போது, நான் யெகோவா என்று நீ புரிந்துகொள்வாய்.

      என்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் அவமானம் அடைய மாட்டார்கள்.”+

  • ஏசாயா 60:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உன்னைக் கொடுமைப்படுத்திய ஜனங்களின் பிள்ளைகள் உன் முன்னால் வந்து தலைவணங்குவார்கள்.

      உன்னை மரியாதை இல்லாமல் நடத்துகிறவர்கள் உன் காலடியில் விழ வேண்டும்.

      அவர்கள் உன்னை யெகோவாவின் நகரம் என்றும்,

      இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுடைய சீயோன் என்றும் அழைக்க வேண்டும்.+

  • ஏசாயா 61:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 “மற்ற தேசத்து ஜனங்கள்+ உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் வேலை பார்ப்பார்கள்.+

      முன்பின் தெரியாதவர்கள் உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்