உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 13:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.

      கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.

      கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+

  • ஏசாயா 14:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்:

      “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே!

      அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+

  • ஏசாயா 45:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 யெகோவாவாகிய நான் கோரேசைத்+ தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

      நான் அவனுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன்.+

      அவனுக்கு முன்பாகத் தேசங்களை அடிபணிய வைப்பேன்.+

      அவனுக்கு முன்பாக ராஜாக்களை வீழ்த்துவேன்.

      அவனுக்கு முன்பாக நகரவாசல்களும் அவற்றின் கதவுகளும்

      பூட்டப்படாமல் திறந்திருக்கும்படி செய்வேன்.

      அவனிடம் நான் சொல்வது இதுதான்:

  • எரேமியா 51:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கினாள்.+

      அவளுக்காக அழுது புலம்புங்கள்!+

      அவளுடைய வலியைக் குறைப்பதற்காக பரிமளத் தைலத்தை வாங்கி வாருங்கள்.

      அவள் ஒருவேளை குணமாகலாம்.”

  • தானியேல் 5:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பெரேஸ் என்றால், உங்கள் ராஜ்யம் பிரிக்கப்பட்டு மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுக்கப்பட்டது+ என்று அர்த்தம்” என்றார்.

  • தானியேல் 5:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அன்றைக்கு ராத்திரியே, கல்தேயனான பெல்ஷாத்சார் ராஜா கொல்லப்பட்டான்.+

  • வெளிப்படுத்துதல் 14:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு, இரண்டாவது தேவதூதர் அவரைப் பின்தொடர்ந்து போய், “அவள் விழுந்துவிட்டாள்! மகா பாபிலோன்+ விழுந்துவிட்டாள்!+ பாலியல் முறைகேட்டில்* ஈடுபடத் தூண்டுகிற தன்னுடைய திராட்சமதுவை எல்லா தேசத்தினருக்கும் குடிக்கக் கொடுத்தவள் விழுந்துவிட்டாள்!” என்று அறிவித்தார்.+

  • வெளிப்படுத்துதல் 18:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவர் சத்தமாக, “அவள் விழுந்துவிட்டாள்! மகா பாபிலோன் விழுந்துவிட்டாள்!+ அவள் பேய்களின் குடியிருப்பாகவும், பேய்களும்* அசுத்தமான, அருவருப்பான எல்லாவித பறவைகளும் தங்குகிற இடமாகவும் ஆகிவிட்டாள்!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்