உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 25:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+

  • எரேமியா 25:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 தீருவின் ராஜாக்கள் எல்லாருக்கும், சீதோனின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ கடலிலுள்ள தீவின் ராஜாக்களுக்கும்,

  • எரேமியா 47:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஏனென்றால், பெலிஸ்தியர்கள்+ எல்லாருமே அழியப்போகிற நாள் வருகிறது.

      தீருவுக்கும்+ சீதோனுக்கும்+ போய் உதவி செய்கிறவர்களும் ஒழிந்துபோவார்கள்.

      கப்தோர்* தீவிலிருந்து+ வந்தவர்களான பெலிஸ்தியர்களில் மீதியானவர்களை

      யெகோவா அழிக்கப்போகிறார்.

  • எசேக்கியேல் 26:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீரு நகரமே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். திரண்டு வருகிற கடல் அலைகளைப் போல உனக்கு எதிராகப் பல தேசங்களைத் திரண்டு வர வைப்பேன்.

  • எசேக்கியேல் 27:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, தீருவைப் பார்த்து நீ இந்தப் புலம்பல் பாட்டைப் பாடு:+

  • யோவேல் 3:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 தீரு, சீதோன், பெலிஸ்தியா பகுதிகளில் வாழ்கிறவர்களே,

      என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் இப்படி நடந்துகொள்வீர்கள்?

      என்னைப் பழிவாங்க நினைக்கிறீர்களோ?

      நீங்கள் என்னைப் பழிவாங்க நினைத்தால்,

      நான் சீக்கிரமாகவும் வேகமாகவும் வந்து உங்களைப் பழிவாங்குவேன்.+

  • ஆமோஸ் 1:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 யெகோவா சொல்வது இதுதான்:

      ‘தீரு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

      சிறைபிடித்த எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.

      சகோதரர்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டது.+

      10 அதனால், தீருவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.

      அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.’+

  • சகரியா 9:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 தீரு தனக்காக ஒரு அரணைக் கட்டினாள்.

      வெள்ளியை மண்போல் குவித்து வைத்தாள்.

      தங்கத்தை வீதிகளில் கிடக்கும் குப்பைபோல் சேர்த்து வைத்தாள்.+

       4 அவளுடைய சொத்துகளை யெகோவா அழித்துவிடுவார்.

      அவளுடைய படையைக் கடலுக்குள் தள்ளிவிடுவார்.*+

      அவள் நெருப்பால் சுட்டெரிக்கப்படுவாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்