-
எண்ணாகமம் 35:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+ 34 நீங்கள் வாழ்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. ஏனென்றால், நான் அங்கே இருக்கிறேன். யெகோவாவாகிய நான் இஸ்ரவேலர்களின் நடுவில் இருக்கிறேன்’”+ என்றார்.
-
-
எரேமியா 23:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 கடவுளுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான் தேசத்தில் நிறைந்திருக்கிறார்கள்.+
சாபத்தினால் தேசமே சோகமாக இருக்கிறது.+
வனாந்தரத்திலுள்ள மேய்ச்சல் நிலங்கள் காய்ந்துவிட்டன.+
ஜனங்கள் படுமோசமான வழியில் போகிறார்கள்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
11 “தீர்க்கதரிசிகளும் சரி, குருமார்களும் சரி, துரோகம் செய்கிறார்கள்.*+
என் வீட்டிலேயே அக்கிரமம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
-