உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 45:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 கடவுள்தான் என்றென்றும் உங்களுடைய சிம்மாசனம்.+

      உங்கள் ராஜ்யத்தின் செங்கோல் நேர்மையான* செங்கோல்.+

  • சங்கீதம் 72:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 72 கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.

      ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+

  • ஏசாயா 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்

      சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+

      அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+

      அதுமுதல் என்றென்றும்,

      நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,

      அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+

      பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

  • ஏசாயா 11:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.

      தாழ்மையானவர்களின்* சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார்.

      பூமியைத் தன் வாயின் கோலால் தாக்குவார்.+

      கெட்டவர்களைத் தன் வாயின் சுவாசத்தால் கொன்றுபோடுவார்.+

       5 நீதி அவருக்கு இடுப்புவார் போல இருக்கும்.

      நம்பகத்தன்மை* அவருக்கு இடுப்புக்கச்சை போல இருக்கும்.+

  • எரேமியா 23:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 யெகோவா சொல்வது இதுதான்: “காலம் வருகிறது. அப்போது, தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் விவேகத்தோடும்* நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+

  • சகரியா 9:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 சீயோன் மகளே, சந்தோஷத்தில் துள்ளு!

      எருசலேம் மகளே, வெற்றி முழக்கம் செய்!

      இதோ, உன் ராஜா உன்னிடம் வருகிறார்!+

      அவர் நீதியுள்ளவர்; மீட்பு தருகிறவர்.*

      அவர் தாழ்மையுள்ளவர்;+ அவர் கழுதையின் மேல் ஏறிவருகிறார்.

      ஆம், கழுதைக்குட்டியின் மேல்* ஏறிவருகிறார்.+

  • எபிரெயர் 1:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நீ நீதியை நேசித்தாய், அநியாயத்தை வெறுத்தாய்; அதனால்தான் உன்னுடைய கடவுள், மற்ற ராஜாக்களைவிட+ அதிகமாக உன்னை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்தார்”+ என்று சொல்லியிருக்கிறார்.

  • வெளிப்படுத்துதல் 19:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ! ஒரு வெள்ளைக் குதிரை+ இருந்தது. நம்பகமானவர்+ என்றும், உண்மையானவர்+ என்றும் அழைக்கப்படுகிறவர் அதன்மேல் உட்கார்ந்திருந்தார்; அவர் நீதியாக நியாயந்தீர்க்கிறவர், நீதியாகப் போர் செய்கிறவர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்