உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 4:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 இஸ்ரவேலர்களில் உயிர்தப்பியவர்களுக்கு யெகோவா அமோக விளைச்சலைத் தருவார். நிலத்திலிருந்து கிடைக்கும் பலன் அவர்களுக்குப் பெருமையும் புகழும் சேர்க்கும்.+

  • ஏசாயா 27:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 இனிவரும் நாட்களில் யாக்கோபின் ஜனங்கள் வேர்விட்டு வளருவார்கள்.

      இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய மரமாகி பூத்துக் குலுங்குவார்கள்.+

      அவர்களுடைய கனிகளால் தேசம் நிறைந்திருக்கும்.+

  • ஏசாயா 35:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நடக்க முடியாதவர்கள் மான்போல் துள்ளி ஓடுவார்கள்.+

      பேச முடியாதவர்கள் சந்தோஷத்தில் பாடுவார்கள்.+

      வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும்.

      பாலைநிலத்தில் ஆறுகள் பாய்ந்தோடும்.

  • ஏசாயா 51:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவா சீயோனை ஆறுதல்படுத்துவார்.+

      இடிந்துகிடக்கும் அதன் இடங்களையெல்லாம் எடுத்து நிறுத்துவார்.*+

      அங்கே உள்ள வனாந்தரத்தை ஏதேன் தோட்டம்போல் ஆக்குவார்.+

      அங்கே இருக்கிற பாலைநிலத்தை யெகோவாவின் தோட்டம்போல் மாற்றுவார்.+

      அங்கே சந்தோஷம் களைகட்டும்.

      ஜனங்கள் எல்லாரும் நன்றி சொல்லிப் பாடுவார்கள்.+

  • எசேக்கியேல் 36:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அப்போது ஜனங்கள், “பாழாக்கப்பட்ட தேசம் ஏதேன் தோட்டத்தைப்+ போல ஆகிவிட்டது. தரைமட்டமாகக் கிடந்த நகரங்கள் இப்போது கோட்டைகளாக நிற்கின்றன. பாழாக்கப்பட்டு வெறிச்சோடிப்போன நகரங்களில் இப்போது ஜனங்கள் குடியிருக்கிறார்கள்”+ என்று சொல்வார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்