உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 25:9-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும்+ எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும்+ அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பிரமுகர்கள் எல்லாருடைய வீடுகளையும் எரித்துப்போட்டான்.+ 10 காவலாளிகளின் தலைவனோடு இருந்த கல்தேய வீரர்கள் எல்லாரும் சேர்ந்து எருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.+ 11 நகரத்தில் மிச்சமிருந்த மக்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்களையும் காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+

  • 2 நாளாகமம் 36:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+

  • 2 நாளாகமம் 36:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உண்மைக் கடவுளின் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினான்,+ எருசலேமின் மதிலை இடித்துப்போட்டான்,+ கோட்டைகள் எல்லாவற்றையும் சுட்டெரித்தான், மதிப்புமிக்க எல்லாவற்றையும் அழித்துப்போட்டான்.+

  • நெகேமியா 1:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதற்கு அவர்கள், “கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகப்படாமல் யூதா மாகாணத்தில் விடப்பட்ட ஜனங்கள் மோசமான நிலைமையில் இருக்கிறார்கள், ரொம்பவே அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.+ எருசலேமின் மதில்கள் இடிந்து கிடக்கின்றன.+ அதன் நுழைவாசல்கள் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கின்றன”+ என்று சொன்னார்கள்.

  • எரேமியா 52:13-15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும் எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும் அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பெரிய மனிதர்களுடைய வீடுகளைக்கூட ஒன்றுவிடாமல் எரித்துப்போட்டான். 14 காவலாளிகளின் தலைவனோடு இருந்த கல்தேய வீரர்கள் எல்லாரும் சேர்ந்து எருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.+

      15 காவலாளிகளின் தலைவன் நேபுசராதான், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களையும் மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனான். அதோடு, பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், திறமையான கைத்தொழிலாளிகளையும் கொண்டுபோனான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்