உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் அவருடைய கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்காமலும் போனால்,+ இந்த எல்லா சாபங்களும்+ கண்டிப்பாக உங்கள்மேல் வந்து குவியும். நீங்கள் அழியும்வரை+ அவை உங்களைப் பின்தொடரும், உங்களைவிட்டுப் போகவே போகாது.

  • எரேமியா 44:12-14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 விடாப்பிடியாக எகிப்துக்குப் போய் வாழ்ந்துகொண்டிருக்கிற யூதா ஜனங்கள் என் கையில் சிக்குவார்கள். எகிப்து தேசத்தில் அவர்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள். வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாவார்கள். சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் சாவார்கள்.+ அவர்களுக்குக் கோரமான முடிவு வரும். அதைப் பார்த்து எல்லாரும் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ 13 எருசலேமில் இருந்தவர்களை நான் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ தண்டித்தது போலவே எகிப்தில் வாழ்கிறவர்களையும் தண்டிப்பேன். 14 எகிப்துக்குப் போய் வாழ்ந்துகொண்டிருக்கிற யூதா ஜனங்கள் தப்பிக்க மாட்டார்கள். யூதா தேசத்துக்குத் திரும்பி வரவே மாட்டார்கள். திரும்பி வந்து வாழ ஏங்குவார்கள். ஆனால், ஒருசிலரைத் தவிர வேறு யாரும் திரும்பி வர மாட்டார்கள்’” என்று சொன்னார்.

  • எரேமியா 44:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அவர்களுக்கு நான் நல்லது செய்யப்போவதில்லை. அவர்களை எப்போது தண்டிக்கலாம் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.+ எகிப்து தேசத்திலிருக்கிற யூதா ஜனங்கள் எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாகி, அடியோடு அழிந்துபோவார்கள்.+ 28 ஒருசிலர் மட்டும்தான் வாளுக்குத் தப்பி யூதா தேசத்துக்குத் திரும்பி வருவார்கள். எகிப்து தேசத்தில் குடியிருக்கப் போன யூதா ஜனங்கள்+ எல்லாரும், நான் சொன்னது உண்மையா அவர்கள் சொன்னது உண்மையா என்று அப்போது தெரிந்துகொள்வார்கள்!”’” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்