-
2 ராஜாக்கள் 25:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஐந்தாம் மாதம் ஏழாம் தேதியில், அதாவது பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 19-ஆம் வருஷத்தில், நேபுசராதான்+ எருசலேமுக்கு வந்தான்;+ இவன் காவலாளிகளின் தலைவன், பாபிலோன் ராஜாவின் ஊழியன். 9 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும்+ எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும்+ அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பிரமுகர்கள் எல்லாருடைய வீடுகளையும் எரித்துப்போட்டான்.+ 10 காவலாளிகளின் தலைவனோடு இருந்த கல்தேய வீரர்கள் எல்லாரும் சேர்ந்து எருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.+
-
-
2 நாளாகமம் 34:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இந்த இடத்தையும் இங்கே குடியிருப்பவர்களையும் அழிக்கப்போகிறேன்.+ யூதா ராஜாவின் முன்னால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள எல்லா சாபங்களையும் வரச் செய்வேன்.+ 25 ஏனென்றால், இந்த மக்கள் என்னை விட்டுவிட்டு,+ மற்ற தெய்வங்களுக்கு முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்கிறார்கள். அவர்களுடைய கைவேலைகள் எல்லாவற்றாலும் என்னைப் புண்படுத்துகிறார்கள்.+ அதனால், இந்த இடத்தின் மீது என்னுடைய கடும் கோபத்தைக் கொட்டுவேன், அது அணையவே அணையாது.’”+
-
-
2 நாளாகமம் 36:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+
-