உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 25:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து,+ ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். அங்கே அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களைப் படுகொலை செய்தார்கள். பின்பு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+

  • எரேமியா 37:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அப்போது, சிதேக்கியா ராஜா ஆட்களை அனுப்பி எரேமியாவைத் தன்னுடைய அரண்மனைக்கு வர வைத்து, ரகசியமாக விசாரித்தார்.+ அவர் எரேமியாவிடம், “யெகோவா ஏதாவது செய்தி சொல்லியிருக்கிறாரா?” என்று கேட்டார். அதற்கு எரேமியா, “சொல்லியிருக்கிறார்! நீங்கள் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவீர்கள்”+ என்றார்.

  • எரேமியா 39:5-7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஆனால், கல்தேயர்களின் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போய், எரிகோவின் பாலைநிலத்திலே சிதேக்கியாவைப் பிடித்தார்கள்.+ அவரை காமாத்திலிருந்த+ ரிப்லாவுக்குக் கொண்டுபோய் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் முன்னால் நிறுத்தினார்கள்.+ ராஜா அவருக்குத் தண்டனை விதித்தான். 6 அதோடு, ஆட்களை வைத்து சிதேக்கியாவின் கண் முன்பாகவே அவருடைய மகன்களை வெட்டிப்போட்டான். யூதாவின் முக்கியப் பிரமுகர்கள் எல்லாரையும்கூட வெட்டிக் கொன்றான்.+ 7 பின்பு சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+

  • எரேமியா 52:9-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து, காமாத்திலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். ராஜா அவனுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கினான். 10 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களை பாபிலோன் ராஜா படுகொலை செய்தான். யூதாவின் அதிகாரிகள் எல்லாரையும்கூட ரிப்லாவில் படுகொலை செய்தான். 11 பின்பு பாபிலோன் ராஜா, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி,+ அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவர் சாகும்வரை காவலிலேயே வைத்திருந்தான்.

  • எசேக்கியேல் 17:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அவன்மேல் என் வலையை விரிப்பேன். அவன் அதில் சிக்கிக்கொள்வான்.+ அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவனோடு வழக்காடுவேன். ஏனென்றால், அவன் எனக்குத் துரோகம் செய்தான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்